வளங்கள் | பருவம் 2 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள் (Man - Made Resources) | 6th Social Science : Geography : Term 2 Unit 1 : Resources
மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள் (Man - Made
Resources)
இயற்கை வளங்கள் தொழில்நுட்பத்தினால் மாற்றுருவாக்கம் செய்யப்பட்டு,
புதிய பொருள்களாகக் கிடைக்கின்றன. அவ்வாறு பெறப்பட்ட வளங்களை மனிதனால் உருவாக்கப்பட்ட
வளங்கள் என்று அழைக்கிறோம். (எ.கா): கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரை, மனிதனால்
உருவாக்கப்படும் எல்லாக் கட்டுமானங்களும் மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்களாகும். (எ.கா)
பாலங்கள், வீடுகள், சாலைகள்.
செயல்பாடு: 3
சாலைகள்
அமைக்கத் தேவைப்படும் இயற்கை வளங்கள் யாவை?
மூலப்பொருள்களிலிருந்து வேறு பயன்பாட்டுப் பொருள்களாக மாற்றும்
இச்செயல்பாடு இரண்டாம் நிலை செயல்பாடுகள் (Secondary Activities)எனப்படும். இச்செயல்பாட்டிற்கு
மனிதத் திறனும் அவனது சிந்தனைகளும் அடிப்படைத் தேவையாகும.