Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | தாராளமயமாதல், தனியார்மயமாதல் உலகமயமாதல் என்பதன் பொருள்(LPG)

இந்தியப் பொருளாதாரம் - தாராளமயமாதல், தனியார்மயமாதல் உலகமயமாதல் என்பதன் பொருள்(LPG) | 11th Economics : Chapter 9 : Development Experiences in India

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 9 : இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்

தாராளமயமாதல், தனியார்மயமாதல் உலகமயமாதல் என்பதன் பொருள்(LPG)

தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயமாதல் என்ற கருத்துருக்கள் புதிய பொருளாதாரக் கொள்கையின் மூன்று முக்கியமான தூண்களாக இருந்தன.

தாராளமயமாதல், தனியார்மயமாதல் உலகமயமாதல் என்பதன் பொருள்(LPG)

தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயமாதல் என்ற கருத்துருக்கள் புதிய பொருளாதாரக் கொள்கையின் மூன்று முக்கியமான தூண்களாக இருந்தன.


தாராளமயமாக்குதல் (Liberalization):

தொழில்துறை மீது அரசு கட்டுப்பாடுகளை எல்லா நிலைகளிலும் நீக்குவதையோ அல்லதுதளர்த்துவதையோ குறிக்கும். உரிமங்கள், கட்டுப்பாடுகள், நெறிப்படுத்துதல் ஆகியவற்றை நீக்குதல், சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்குதல் தொழில்துறைக்கு நிதி நிறுவனங்களின் அதிக பங்களிப்பு போன்றவை தாராள மயமாக்குதலின் அம்சங்களாகும்.



தனியார் மயமாக்குதல் (Privatization):

தனியார்மயமாக்குதல் என்பது பொதுத்துறையின் நிர்வாகம் மற்றும் உரிமையை தனியாருக்கு மாற்றுவதைக் குறிக்கும். அரசின் நாட்டுடமையாக்குதலின்மை, அரசு முதலீடுகள் குறைப்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் துறைக்கு மாற்றியமைத்தல் போன்றவையே தனியார்மயமாதலின் சாராம்சம் ஆகும்


உலகமயமாக்குதல் (Globalization): 

உள்நாட்டுப் (இந்தியா) பொருளாதாரத்தையும் ஏனைய உலக பொருளாதாரத்தையும் இணைப்பது உலகமயமாதல் எனப்படும். சுங்க வரிக் குறைப்பு மற்றும் சுங்க வரி தவிர்ப்பு போன்ற செயல்பாடுகளின் மூலம் இறக்குமதியை எளிமைப்படுத்துதல், வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) மற்றும் வெளிநாட்டு தொகுப்பு முதலீடுகளுக்கான (FPI) கதவுகளைத் திறந்து வைப்பது போன்ற ஒரு சில நடவடிக்கைகள் உலகமயமாக்குதலின் அளவீடுகள் ஆகும்.


11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 9 : இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்