Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | பேரியல் பொருளாதாரத்தின் பொருள்

பொருளாதாரம் - பேரியல் பொருளாதாரத்தின் பொருள் | 12th Economics : Chapter 1 : Introduction to Macro Economics

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 1 : பேரியல் பொருளாதாரம்

பேரியல் பொருளாதாரத்தின் பொருள்

கிரேக்க மொழியில் உள்ள 'Makros' என்ற சொல்லில் இருந்து 'Macro' என்ற சொல் பெறப்பட்டது.

கிரேக்க மொழியில் உள்ள 'Makros' என்ற சொல்லில் இருந்து 'Macro' என்ற சொல் பெறப்பட்டது. அதன் பொருள் "பெரிய" என்பது ஆகும். பேரியல் பொருளாதாரம் என்பது பொருளாதார அமைப்பு முழுமையையும் படிப்பது ஆகும். மாற்றாக கூறின், பேரியல் பொருளாதாரம் என்பது ஒட்டு மொத்தமாகிய தேசிய வருவாய், வேலைவாய்ப்பு மற்றும் நாட்டு உற்பத்தி போன்றவற்றை உள்ளடக்கியது. 'பேரியல் பொருளாதாரத்தை வருவாய் கோட்பாடு’ எனவும் அழைப்பர்.


பேரிய பொருளாதாரத்தின் பாடப்பொருட்களாக உள்ளடங்கும் பகுதிகளாவன: வேலைவாய்ப்பு, தேசிய வருவாய், பணவீக்கம், வணிகச் சுழற்சி, வறுமை, ஏற்றத்தாழ்வு, வேறுபாடு, முதலீடு மற்றும் சேமிப்பு, மூலதன ஆக்கம், கட்டமைப்பு மேம்பாடு, பன்னாட்டு வாணிபம், பன்னாட்டு வாணிகச் சமநிலை மற்றும் பன்னாட்டு செலுத்துதலின் சமநிலை, மாற்று விகிதம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகும். 


12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 1 : பேரியல் பொருளாதாரம்