Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | அங்காடியின் பொருள்

பொருளாதாரம் - அங்காடியின் பொருள் | 11th Economics : Chapter 5 : Market Structure and Pricing

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 5 : அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்

அங்காடியின் பொருள்

சாதாரண அர்த்தத்தில், 'சந்தை' என்ற சொல், பொருட்கள் மற்றும் சேவைகள் வாங்கப்பட்டு விற்கப்படும் ஒரு இயற்பியல் இடத்தைக் குறிக்கிறது.

அங்காடியின் பொருள்

பொதுவாக 'அங்காடி' என்பது பொருள்கள் மற்றும் பணிகளை வாங்குதல் மற்றும் விற்பனை செய்யும் இடத்தை குறிக்கும். பொருளாதாரத்தில் 'அங்காடி என்பது ஒரு பொருளை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள பரிமாற்ற முறையைக் குறிக்கும். தற்காலத்தில் பரிமாற்றத்திற்கு நேரடியாக தொடர்புகொள்ள வேண்டும் என்பது இல்லை. இப்பரிமாற்றத்திற்கு மறைமுகத் தொடர்புக் கருவிகளான தொலைபேசி, இணையவழி, மின் அஞ்சல் போன்றவற்றை வாங்குபவரும்,விற்போரும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஓர் அங்காடி கீழ்க்கண்ட இயல்புகளைப் பெற்றிருக்கும். 

1) ஒரு பொருள் அல்லது ஒரு பணியை வாங்குபவர்களும் விற்பவர்களும் இருக்க வேண்டும்.

2) வாங்கப்படுவதற்கும், விற்பனை செய்யப்படுவதற்கும் ஒரு பொருள் இருக்க வேண்டும்.

3) வாங்குபவரும் விற்பவரும் ஒப்புக் கொள்ள வேண்டிய விலை இருக்க வேண்டும்.

4) நேரடி அல்லது மறைமுக பரிமாற்றம் இருக்க வேண்டும்.


11வது பொருளாதாரம் : அத்தியாயம் 5 : அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்