Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | பரப்பளவை அளவை செய்தல்

புவியியல் - பரப்பளவை அளவை செய்தல் | 11th Geography : Chapter 9 : Maps and Scale

11 வது புவியியல் : அலகு 9 : நிலவரைபடம் மற்றும் அளவை

பரப்பளவை அளவை செய்தல்

நிலவரைபடத்தின் பரப்பளவை அளவிடுவதன் மூலம் புவியியலின் பரப்பை அளவிடலாம்.

பரப்பளவை அளவை செய்தல்

நிலவரைபடத்தின் பரப்பளவை அளவிடுவதன் மூலம் புவியியலின் பரப்பை அளவிடலாம். அவற்றை பல விதமான முறைகளில் அளவிடலாம். அவற்றில் சதுரங்கள் மூலம் பரப்பை அளவிடுவது எளிய முறையாகும்.

 

சதுர முறை

பரப்பளவை அளவிட பொதுவாக சதுர முறை பயன்படுகிறது. இம்முறையில் அளவிட வேண்டிய பகுதி விளக்குகள் பொருத்தப்பட்ட மேசை மீது கிராப் பேப்பர் பொருத்தப்பட்டு சதுரங்கள் அளவிடப்படுகிறது. கிராப் பேப்பரில் உள்ள சதுரங்கள் அளவையாக எடுத்துக் கொள்ளப்படும்.

எ.கா , கொடுக்கப்பட்டுள்ள மேப்பின், அளவை 1செ.மீ = 1கி.மீ எனக் கொண்டு, சதுரங்களின் மூலம் பரப்பைக் கண்டு பிடிக்கவும். 1 சின்ன சதுரத்தின் பரப்பு = 1 கி.மீ

படி 1 முதலில் ஒவ்வொரு முழு சதுரத்தையும் எண்ணிக்கொள்ள வேண்டும்.

முழு சதுரம் = 10 (நீலம்),

ஒரு சிறு சதுரம் 1 செ.மீ2 



படி 2 அடுத்து பின்ன சதுரங்களை எண்ணிக் கொள்ள வேண்டும்

¾  சதுரம் (மஞ்சள்) = 4,

1/2 சதுரம் (பச்சை ) = 2,

1/4 சதுரம் (இளஞ்சிவப்பு) = 10

படி 3 மொத்த சதுரங்களை எண்ணிக்கொள்ளவும்.

முழு சதுரங்கள் 10

10 X1 = 10,

¾ சதுர எண்ணிக்கை = 4,

4 x ¾ = 3

½ சதுர எண்ணிக்கை = 2

2 x ½ = 1

¼ சதுர எண்ணிக்கை = 10

10 x ¼ = 2 ½  

படி 4 எல்லா மதிப்புகளையும் கூட்ட வேண்டும்.

10 + 3 + 1 + 2 ½ = 16 ½ சதுரங்கள்

படி 5 நிலவரைபடத்தின் அளவையால் மொத்த சதுரங்களைப் பெருக்க வேண்டும்.

16.5 × 1 = 16.5 கி.மீ2.

எனவே நிலவரைபடத்தின் பரப்பு = 16.5கி.மீ2

 

எடுத்துக்காட்டு



கொடுக்கப்பட்டுள்ள பரப்பை சதுர அளவு முறையில் கணக்கிடுக.

அளவை 1 செ.மீ =1 கி.மீ

ஒரு சிறு சதுரம் = 1 கி.மீ2


 

படி 1 முதலில் ஒவ்வொரு முழு சதுரத்தையும் எண்ணிக்கொள்ள வேண்டும்.

முழு சதுரம் = 11

படி 2 அடுத்து பின்ன சதுரங்களை எண்ணிக் கொள்ள வேண்டும்

¾ சதுரம் = 2,

½ சதுரம் = 4,

¼ சதுரம் = 2

படி 3 மொத்த சதுரங்களை எண்ணிக் கொள்ளவும்.

முழு சதுரங்கள் 11

11 x 1 = 11

¾ சதுர எண்ணிக்கை,

2 x ¾ = 1.5

½ சதுர எண்ணிக்கை,

4 x ½ = 2

¼ சதுர எண்ணிக்கை,

2 x ¼ = 0.5

படி 4 எல்லாமதிப்புகளையும் கூட்ட வேண்டும்.

11 + 1.5 + 2 + 0.5 = 15 சதுரங்கள்

படி 5 நிலவரைபடத்தின் அளவையால் மொத்த சதுரங்களை பெருக்க வேண்டும்.

15 x 1 = 15 கி.மீ2

எனவே நிலவரைபடத்தின் பரப்பு = 15 கி.மீ2

 

செயல்பாடு

www.makeuseof.com/

மேற்கண்ட இணைய தொடர்பைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு கிராமத்தின்/மனையின் பரப்பளவை கணக்கிடுக.

 

 

11 வது புவியியல் : அலகு 9 : நிலவரைபடம் மற்றும் அளவை