Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | மையப்போக்கு அளவைகள் (Measures of Central Tendency)

புள்ளியியல் | கணக்கு - மையப்போக்கு அளவைகள் (Measures of Central Tendency) | 9th Maths : UNIT 8 : Statistics

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 8 : புள்ளியியல்

மையப்போக்கு அளவைகள் (Measures of Central Tendency)

அன்றாட வாழ்வில் நம்மிடம் கொடுக்கப்பட்ட ஒரு தகவலுக்கான அளவைக் குறிப்பிடுவது அவசியமாகிறது.

 மையப்போக்கு அளவைகள் (Measures of Central Tendency)

அன்றாட வாழ்வில் நம்மிடம் கொடுக்கப்பட்ட ஒரு தகவலுக்கான அளவைக் குறிப்பிடுவது அவசியமாகிறது. ஓர் ஆராய்ச்சியாளர் தமது ஆய்வில், மக்கள் சராசரியாக நாளொன்றுக்கு மூன்று மணி நேரம் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கின்றார்கள் எனக் குறிப்பிட்டிருந்தால், ஒவ்வொருவரும் மூன்று மணி நேரம் பார்க்கின்றார்கள் என்று பொருள் அல்ல. சிலர் அதிக நேரம் பார்க்கலாம், சிலர் குறைவான நேரம் பார்க்கலாம். ‘தொலைக்காட்சித் தொடரைப் பார்த்தல்என்ற செயலுக்குக் கொடுக்கப்பட்ட தகவலில், ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவு சராசரி ஆகும்.

சராசரி என்பது ஒரு பெரிய அளவிலான தகவலை ஒரு குறிப்பிட்ட தனி மதிப்பிற்குச் சுருக்கிக் காட்டுகிறது. மேலும் அந்தத் தனிமதிப்பை ஒட்டி உண்மையான தகவலில் சில வேறுபாடுகள் உள்ளன என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

சராசரி என்ற கருத்தைப் பொறுத்தளவில் ஒரு சராசரி மனிதனின் பார்வையிலிருந்து ஒரு கணிதவியலாளரின் பார்வை சற்று வேறுபட்டது. சராசரிக்கான மூன்று வகைப்பட்ட வரையறைகள் உள்ளன. அவை, கூட்டுச் சராசரி, இடைநிலை அளவு, முகடு ஆகியன ஆகும். இவை ஒவ்வொன்றும் வேறுபட்ட வழிமுறைகளிலிருந்து பெறப்படுகின்றன. இந்த மூன்றையும் ஒரே தகவலில் பயன்படுத்தினால் கூட, மூன்றும் பெரும்பாலும் வெவ்வேறான சராசரி மதிப்புகளையே தரும். இந்த மூன்று சராசரி அளவுகளிலும் கொடுக்கப்பட்ட தகவல்களில் எதைக் குறிக்கின்றன என்பதையும், கணக்கீட்டில் எது மிகச்சரியாக இருக்கும் என்பதையும் வேறுபடுத்திக் காட்டுவது நமக்குத் தேவையாகும்.

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 8 : புள்ளியியல்