பருவம் 1 இயல் 4 | 1 ஆம் வகுப்பு தமிழ் - மெய்யெழுத்துகள் | 1st Tamil : Term 1 Chapter 4 : Kokku nirkum kulakkarai(Magzhilvodu karpom: Mei Eluthu)
'க்' முதல் 'ன்' வரை
பக்கம் நிற்கும் கொக்கு
எங்கள் வீட்டில் பொங்கல்
பச்சை நிற மொச்சை
பஞ்சு மெத்தையில் துஞ்சு
கட்டம் போட்ட சட்டை
வண்டிக் குதிரை சண்டி
முத்து கைவிரல் பத்து
பந்து போட முந்து
அப்பா தந்த சொப்பு

தம்பி பார்த்த தும்பி
நெய் சோறு செய்
தேர் வருது பார்
நல்ல வழியில் செல்
செவ்வகத் தட்டில் கொவ்வை
யாழ் கேட்டு மகிழ்
துள்ளி ஓடும் 'புள்ளிமான்
காற்றில் ஆடும் கீற்று
என்னை ஈன்ற அன்னை
