எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - மனக் கணக்கு: பெருக்கும் எண்ணை பகுதியாக பிரித்து அவற்றை பெருக்கப்படும் எண்ணுடன் பெருக்கி கூட்டுதல் | 4th Maths : Term 3 Unit 2 : Numbers
பெருக்கும் எண்ணை பகுதியாக பிரித்து அவற்றை பெருக்கப்படும் எண்ணுடன் பெருக்கி கூட்டுதல்.
தற்பொழுது, பின்வரும் எண்ணைப் பிரிப்போம், எடுத்துக்காட்டாக, 53 = 50 + 3, 98 = 90 + 8.
இங்கு, ஏன் 53ஐ 50+3 எனப் பிரிக்க வேண்டும். ஏனெனில், 53க்கு அருகில் உள்ள பத்தின் மடங்கு 50 ஆகும்.
50 உடன் மீதியுள்ள 3ஐக் கூட்டவும்.
எடுத்துக்காட்டு 1
பின்வரும் பெருக்கல் உண்மைகளை பகுதியாகப் பிரித்து கூட்டுவதன் மூலம் நிறைவு செய்க.
6 × 45 = 6 × (40+5)
= 6 × 40 + 6 × 5
பின்னர் அவ்விரு பகுதிகளை தனியாகப் பெருக்கவும்.
6 × 40 = 240
6 × 5 = 30
பின்னர், அவ்விரு பகுதி முடிவுகளைக் கூட்டவும்.

6 × 45 = 270