Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | கனிம ஊட்டம் : முக்கியமான கேள்விகள்

தாவரவியல் - கனிம ஊட்டம் : முக்கியமான கேள்விகள் | 11th Botany : Chapter 12 : Mineral Nutrition

11 வது தாவரவியல் : அலகு 12 : கனிம ஊட்டம்

கனிம ஊட்டம் : முக்கியமான கேள்விகள்

மதிப்பீடு, பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள், 1 மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்யுங்கள், கேள்விக்கு பதிலளிக்கவும்
தாவர செயலியல்

கனிம ஊட்டம்


மதிப்பீடு

 

1. பொருத்தமான இணையைத் தேர்ந்தெடு:

1. சிட்ரஸ் நுனியடி இறப்பு - (i) Mo

2. சாட்டை வால் நோய் - (ii) Zn

3. பழுப்பு மையக் கருக்கல் நோய் - (iii) Cu

4. சிற்றிலை நோய் - (iv) B

(அ) 1 (iii) 2 (ii) 3 (iv) 4 (i)

(ஆ) 1 (iii) 2 (i) 3 (iv) 4 (ii)

(இ) 1 (i) 2 (iii) 3 (ii) 4 (iv)

(ஈ) 1 (iii) 2 (iv) 3 (ii) 4 (i)

 

2. ஒரு தாவரத்திற்கு அனைத்துக் கனிமங்களும் வழங்கப்பட்டு Mn செறிவு மட்டும் அதிகமாக இருந்தால் ஏற்படும் குறைபாடு யாது?

(அ) Fe, Mg உட்கொள்திறனை தடுக்கும் ஆனால் Ca தவிர

(ஆ) Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனைஅதிகரிக்கும்.

(இ) Ca உட்கொள்திறனை மட்டும் அதிகரிக்கும்.

(ஈ) Fe, Mg மற்றும் Ca உட்கொள் திறனைத் தடுக்கும்.

 

3. மீண்டும் இடம்பெயராத தனிமம் எது?

(அ) பாஸ்பரஸ்

(ஆ) பொட்டாசியம்

(இ) கால்சியம்

(ஈ) நைட்ரஜன்

 

4. சரியானவற்றைப் பொருத்துக.


தனிமங்கள் பணிகள்

A மாலிப்டினம் 1 பச்சையம்

B துத்தநாகம் 2 மெத்தியோனின்

C மெக்னீசியம் 3 ஆக்சின்

D சல்ஃபர் 4 நைட்ரோஜினேஸ்

அ. A – 1 B – 3 C – 4 D – 2

ஆ. A – 2 B – 1 C – 3 D – 4

இ. A – 4 B – 3 C – 1 D – 2

ஈ. A – 4 B – 2 C – 1 D – 3

 

5. சரியான கூற்றைக் கண்டறிக

I. சிஸ்டைன், மெத்தியோனின் அமினோ அமிலத்திற்குச் சல்ஃபர் அவசியம்.

II. N, K, S மற்றும் Mo குறைபாடு செல்பிரிவை பாதிக்கிறது.

III. லெகூம் அல்லாத அல்னஸ் தாவரத்தில் பிரான்க்கியா பாக்டீரியம் காணப்படுகிறது.

IV. நைட்ரஜன் நீக்கத்தில் பங்கேற்கும் நைட்ரோசோமோனாஸ் மற்றும் நைட்ரோபாக்டர்

(அ) I, II சரி

(ஆ) I, II, III சரி

(இ) I மட்டும் சரி

(ஈ) அனைத்தும் சரி

 

6. நைட்ரஜன் வளிமண்டலத்தில் அதிகம் இருந்தாலும் தாவரங்கள் அதனைப் பயன்படுத்த முடிவதில்லை, ஏன்?

 

7. ஏன் சில தாவரங்களில் பற்றாக்குறை அறிகுறிகள் முடிவில் இளம் இலைகளில் தோன்றுகிறது பிற தாவரங்களில் முதிர்ந்த பாகங்களில் தோன்றுகிறது?

 

8. தாவரம் A சாட்டைவால் நோய், தாவரம் B சிற்றிலை நோய் அறிகுறிகள் கொண்டுள்ளது. ABயின் கனிமக் குறைபாட்டினைக் கண்டறிக.

 

9. நைட்ரஜன் நிலைநிறுத்தத்தில் நைட்ரோஜினேஸ் நொதியின் பங்கினை விவரி?

 

10. ஆஞ்சியோஸ் பெர்ம்களின் பூச்சியுண்ணும் உணவூட்ட முறையினை விவரி?

 




11 வது தாவரவியல் : அலகு 12 : கனிம ஊட்டம்