Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | மூலக்கூறு மரபியல் : வினா விடை

புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை | விலங்கியல் - மூலக்கூறு மரபியல் : வினா விடை | 12th Zoology : Chapter 5 : Molecular Genetics

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 5 : மூலக்கூறு மரபியல்

மூலக்கூறு மரபியல் : வினா விடை

விலங்கியல் : மூலக்கூறு மரபியல் : புத்தக வினாக்கள் / சரியான விடையைத் தேர்ந்தெடு / குறுகிய விரிவான வினா விடை

மதிப்பீடு


புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு 


1. ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர் பாக்டீரியோஃபேஜில் செய்த ஆய்வு எதனைக் காட்டுகிறது?

அ) புரதம் பாக்டீரிய செல்லுக்குள் நுழைகிறது 

ஆ) டி.என்.ஏ. ஒரு மரபுப்பொருள் 

இ) டி.என்.ஏவில் கதிரியக்கத் தன்மையுடைய கந்தகம் உள்ளது 

ஈ) வைரஸ்கள் உருமாற்றம் அடையும்

விடை: ஆ) டி.என்.ஏ. ஒரு மரபுப்பொருள் 



2. டி.என்.ஏ மற்றும் RNA வில் ஒற்றுமை காணப்படுவது 

அ) தையமின் என்ற நைட்ரஜன் காரத்தினைக் கொண்டிருத்தல் 

ஆ) ஒரிழை உடைய சுருண்ட வடிவம் 

இ) சர்க்கரை, நைட்ரஜன் காரங்கள் மற்றும் பாஸ்பேட் ஆகியவை உடைய நியூக்ளியோடைடுகள் 

ஈ) பீனைல் அலனைன் எனும் அமினோ அமிலத்தில் உள்ள ஒத்தவரிசையில் அமைந்த நியூக்ளியோடைடுகள் 

விடை: இ) சர்க்கரை, நைட்ரஜன் காரங்கள் மற்றும் பாஸ்பேட் ஆகியவை உடைய நியூக்ளியோடைடுகள் 



3. தூது RNA மூலக்கூறு எம்முறையில் உருவாக்கப்படுகிறது? 

அ) இரட்டிப்பாதல்

ஆ) படியெடுத்தல் 

இ) நகலாக்கம்

ஈ) மொழிபெயர்த்தல் 

விடை: ஆ) படியெடுத்தல் 



4. மனித மரபணுத் தொகுதியில் உள்ள மொத்த நைட்ரஜன் காரங்களின் எண்ணிக்கை சுமார் 

அ) 3.5 மில்லியன்

ஆ) 35000 

இ) 35 மில்லியன்

ஈ) 3.1 பில்லியன் 

விடை: ஈ) 3.1 பில்லியன் 



5. 15N ஊடகத்தில் வளர்க்கப்படும் எ.கோலை 14N ஊடகத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு தலைமுறைகள் பெருக்கமடைய அனுமதிக்கப்படுகிறது. இச்செல்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் டி.என்.ஏ சீசியம் குளோரைடு அடர்வு வாட்டத்தில் நுண் மைய விலக்கு செய்யப்படுகிறது. இச்சோதனையில் டி.என்.ஏவின் எவ்வகை அடர்வுப் பரவலை நீ எதிர்பார்க்கலாம்? 

அ) ஒரு உயர் மற்றும் ஒரு குறை அடர்வுக் கற்றை 

ஆ) ஒரு நடுத்தர அடர்வுக் கற்றை 

இ) ஒரு உயர் மற்றும் நடுத்தர அடர்வுக் கற்றை 

ஈ) ஒரு குறை மற்றும் ஒரு நடுத்தர அடர்வுக் கற்றை

விடை: ஈ) ஒரு குறை மற்றும் ஒரு நடுத்தர அடர்வுக் கற்றை 



6. தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன?

அ) டி.என்.ஏ மூலக்கூறின் 5' முனையில் மட்டுமே இரட்டிப்படைதல் தோன்றும்

ஆ) டி.என்.ஏ லைகேஸ் நொதி 3' 5'திசையிலேயே செயல்படும் 

இ) டி.என்.ஏ பாலிமரேஸ் நொதி, வளர்ந்து வரும் இழையின் 3' முனைப் பகுதியில் மட்டுமே புதிய நியூக்ளியோடைடுகளை இணைக்கும் 

ஈ) ஹெலிகேஸ் நொதிகள் மற்றும் ஒற்றை இழை இணைப்புப் புரதம் ஆகியவை 5'முனையிலேயே செயல்படும். 

விடை: இ) டி.என்.ஏ பாலிமரேஸ் நொதி, வளர்ந்து வரும் இழையின் 3' முனைப் பகுதியில் மட்டுமே புதிய நியூக்ளியோடைடுகளை இணைக்கும் 



7. புரதச் சேர்க்கை நிகழ்ச்சி மைய செயல்திட்டத்தின் சரியான வரிசையைக் கண்டறிக.

அ) படியெடுத்தல், மொழிபெயர்த்தல், இரட்டிப்பாதல் 

ஆ) படியெடுத்தல், இரட்டிப்பாதல், மொழிபெயர்த்தல் 

இ) நகலாக்கம், மொழிபெயர்த்தல், படியெடுத்தல் 

ஈ) இரட்டிப்பாதல், படியெடுத்தல், மொழிபெயர்த்தல்

விடை: ஈ) இரட்டிப்பாதல், படியெடுத்தல், மொழிபெயர்த்தல் 



8. டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த கீழ்க்கண்ட எந்தக் கருத்து தவறானது?

அ) ஹைட்ரஜன் பிணைப்பு உடைவதால் டி.என்.ஏ மூலக்கூறு பிரிவடைகிறது 

ஆ) ஒவ்வொரு நைட்ரஜன் காரமும் அதே போல் உள்ள மற்றொரு காரத்துடன் இணைவதால் இரட்டிப்பாதல் நடைபெறுகிறது 

இ) பாதி பழையன காத்தல் முறை இரட்டிப்பாதலால் புதிய டி.என்.ஏ இழையில் ஒரு பழைய இழை பாதுகாக்கப்படுகிறது. 

ஈ) நிரப்புக் கூறு கார இணைகள் ஹைட்ரஜன் பிணைப்பினால் இணைக்கப்பட்டுள்ளன 

விடை: ஆ) ஒவ்வொரு நைட்ரஜன் காரமும் அதே போல் உள்ள மற்றொரு காரத்துடன் இணைவதால் இரட்டிப்பாதல் நடைபெறுகிறது 



9. புரோகேரியோட்டுகளில் நடைபெறும் டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த எந்த வாக்கியம் தவறானது? 

அ) டி.என்.ஏ இரட்டிப்பாதல் ஒற்றை மூலத்திலிருந்து துவங்கும் 

ஆ) டி.என்.ஏ இரட்டிப்பாதல் அதன் மூலத்திலிருந்து இரு திசைகளில் நிகழும் 

இ) ஒரு நிமிடத்திற்கு 1 மில்லியன் கார இணைகள் என்ற வீதத்தில் இரட்டிப்பாதல் நிகழ்கிறது 

ஈ) ஏராளமான பாக்டீரிய குரோமோசோம்களில், ஒவ்வொன்றிலும் இரட்டிப்பாதல் ஒரே சமயத்தில் நிகழ்கிறது 

விடை: ஈ) ஏராளமான பாக்டீரிய குரோமோசோம்களில், ஒவ்வொன்றிலும் இரட்டிப்பாதல் ஒரே சமயத்தில் நிகழ்கிறது 



10. முதன்முதலில் பொருள் கண்டறியப்பட்ட 'கோடான்' ---- ஆகும். இது ----- அமினோ அமிலத்திற்கான குறியீடு ஆகும். 

அ) AAA, புரோலைன்

ஆ) GGG, அலனைன் 

இ) UUU, ஃபினைல் அலனைன்

ஈ) TTT, அர்ஜினைன்

விடை: இ) UUU, ஃபினைல் அலனைன் 



11. மெசல்சன் மற்றும் ஸ்டால் சோதனை நிரூபிப்பது

அ) கடத்துகை மாற்றம் (Transduction) 

ஆ) தோற்றமாற்றம் (Transformation) 

இ) டி.என்.ஏ ஒரு மரபுப்பொருள்

ஈ) பாதி பழையன காத்தல் முறை டி.என்.ஏ இரட்டிப்பாதல் 

விடை: ஈ) பாதி பழையன காத்தல் முறை டி.என்.ஏ இரட்டிப்பாதல்



12. ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ளன. சிறிய துணை அலகு ஒரு  ------------ இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு -------------- இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன.

விடை : mRNA, tRNA 


13. ஒரு ஒபரான் என்பது

அ) மரபணு வெளிப்பாட்டை தடைசெய்யும் புரதம் 

ஆ) மரபணு வெளிப்பாட்டைத் தூண்டும் புரதம் 

இ) தொடர்புடைய செயல்களை உடைய அமைப்பு மரபணுக்களின் தொகுப்பு 

ஈ) பிற மரபணுக்களின் வெளிப்பாட்டைத் தூண்டும் அல்லது தடைசெய்யும் மரபணு

விடை: இ) தொடர்புடைய செயல்களை உடைய அமைப்பு மரபணுக்களின் தொகுப்பு 


14. வளர்ப்பு ஊடகத்தில் லாக்டோஸ் இருப்பது எதைக் காட்டுகிறது 

அ) லாக் y, லாக் Z, லாக் a மரபணுக்கள் படியெடுத்தல் நடைபெறுதல் 

ஆ) அடக்கி மரபணு, இயக்கி மரபணுவுடன் இணைய முடியாத நிலை 

இ) அடக்கி மரபணு இயக்கி மரபணுவுடன் இணையும் நிலை

ஈ) 'அ' மற்றும் 'ஆ' ஆகிய இரண்டும் சரி 

விடை: ஈ) 'அ' மற்றும் 'ஆ' ஆகிய இரண்டும் சரி 



15. மரபணு குறியீடு ‘உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது' - காரணங்கள் கூறு.

* மரபணுக்குறியீடுகள் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கது 

* இது பொதுவாக எல்லா உயிரின மண்டலங்களும் உட்கரு அமிலங்களையும் அதே முக்குறியங்களையும் பயன்படுத்தியே அமினோ அமிலங்கிளிலிருந்து புரதத்தை உற்பத்தி செய்கின்றன 

* தூது ஆர்.என்.ஏவில் உள்ள UUU எல்லா உயிரினங்களிலும் பினைல் அலனைன் என்னும் அமினோ அமிலத்திற்கானது. 

* விதிவிலக்குகள் (மிகச் சில) 

1. எ.கா புரோகேரியோட்டுகள், மைட்டோகாண்டிரியா, குளோரோபிளாஸ்ட் ஆகியவற்றின் மரபுத் தொகுதி 

2. பொதுவாக வேறுபாடுகள் மிகக் குறைவு ஒற்றுமைகளே அதிகம் உள்ளன. 

3. இது போன்ற மரபணுக்குறியீடுகளின் எல்லா சிறப்புப் பண்புகள் பொதுவாக எல்லா உயிரினங்களிலும் பொதுவானது. 

* எனவே மரபணு குறயீடு உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும். 



16. கீழ்க்கண்ட படியெடுத்தல் அலகில் A மற்றும் B எனக் குறிக்கப்பட்டுள்ளவற்றை எழுதுக.


A - ஊக்குவிப்பான் 

B - குறியிட்டு இழை



17. முதன்மை இழை மற்றும் பின்தங்கும் இழை - வேறுபடுத்துக 

முதன்மை இழை 

1. இது தொடர்இழை (அ) வழிகாட்டு இழை எனப்படும். இது 3' 5' திசை கொண்ட வார்ப்புரு இழையில் இரட்டிப்பாதல் - தொடர்ச்சியாக நடைபெறும்.

2. DNA லிகேஸ் நொதி தேவைப்படுவதில்லை

3. உருவாக்கம் 5' 3' திசையில் நடைபெறுகிறது. வார்ப்புரு இழையின் திசை 3' 5' ஆகும்.


பின்தங்கு இழை

1 மற்றொரு 5' 3' திசை கொண்ட இழையின் இரட்டிப்பாதல் தொடர்ச்சியற்றதாகும். இது பின்தங்கு இழை எனப்படும்.

2.  தொடர்ச்சியற்ற புதிய துண்டங்களை DNA - லிகேஸ் நொதி ஒன்றிணைக்கின்றது. 

3. இதன் திசை 5' 3' ஆயினும் ஒட்டு மொத்த வார்ப்புரு இழையின் திசை 3' 5' ஆகும்.



18. வேறுபடுத்துக - வார்ப்புரு இழை மற்றும் குறியீட்டு இழை 

வார்ப்புரு இழை

1. இவ்விழை mRNA உருவாக்கத்திற்கு வார்ப்பாக செயல்படுகிறது.

2. இதன் நைட்ரஜன் காரங்கள் mRNA இழைக்கு ஈடான இழைகளை உருவாக்குகிறது.

3. இது 3' 5' திசையில் கொண்டது


குறியீட்டு இழை 

1. இது வார்ப்புரு பணியை செய்வதில்லை.  

2 இதன் நைட்ரஜன் காரங்கள் அப்படியே (mRNA இழையில் காணப்படுவதேயாகும்.  

3. இது 5' 3' திசை கொண்டது.



19. மனித மரபணுத் தொகுதியில் கண்டறியப்பட்ட ஒற்றை நியூக்ளியோடைடு பல்லுருவ அமைப்பின் மூலம் (SNPs) உயிரியல் மற்றும் மருத்துவத் துறையில் புரட்சிகர மாறுபாடுகளைக் கொண்டு வரும் இரண்டு வழிகளைக் கூறுக. 

* அறிவியலாளர்கள் மனிதனில் பல்வேறுப்பட்ட ஒற்றை காரமூல டி.என்.ஏக்கள் காணப்படக்கூடிய 1.4 மில்லியன் இடங்களைக் கண்டறிந்துள்ளனர். 

* இது ஒற்றை நியூக்ளியோடைடு பல்லுருவ அமைப்பு எனப்படும். 

* இரு மருத்துவம் மற்றும் உயிரியலில் புரட்சிகரமான மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளது. 

* நோய்களின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றுக்கு மூலக்கூறு மருத்துவ அடிப்படையில் சிகிச்சையளிப்பதே முக்கியமானதாகும். 

* இது கதிர்அரிவாள் அனீமியா, B தலசேமியா, C சிஸ்டிக் பைப்ரோசிஸ் போன்ற நோய்களுக்கு ஜீன் சிகிச்சை மூலம் குணப்படுத்த இயலும். 

* ஒரு சில மருந்துகள் குறித்த செயல்பாடு, நோய்வாய்ப்படும் தன்மை மற்றும் சூழல் காரணிகளை நச்சுகள் போன்றவை குறித்து அறிய முடிகிறது.



20. மனித மரபணு தொகுதித் திட்டத்தின் இலக்குகள் மூன்றினைக் குறிப்பிடுக.

* மனித டி.என்.ஏ.வில் உள்ள அனைத்து மரபணுக்களையும் (ஏறத்தாழ 30,000) கண்டறிதல். 

* மனித டி.என்.ஏ வை உருவாக்கிய மூன்று பில்லியன் வேதி கார இணைகளின் வரிசையைத் தீர்மானித்தல். 

* இந்த தகவல்களை தரவு தளங்களில் (data bases) சேமித்தல் ஆகியவையாகும். 



21. எ.கோலையில் உள்ள மூன்று நொதிகளான B - கேலக்டோசிடேஸ், பெர்மியேஸ் மற்றும் டிரான்ஸ் அசிட்டைலேஸ் ஆகியவை லாக்டோஸ் முன்னிலையில் உற்பத்தியாகின்றன. இந்நொதிகள் லாக்டோஸ் இல்லாத நிலையில் உற்பத்தியாவதில்லை - விளக்குக.




22. அமைப்பு, மரபணுக்கள், நெறிப்படுத்தும் மரபணுக்கள் மற்றும் இயக்கி மரபணுக்களை வேறுபடுத்துக. (Structural, Regulatory & Operator gene)

விடை:


ஒபரான் உள்ளடக்குவது

ஊக்குவிப்பான் மரபணு (p) 

இயக்கும் மரபணு (0)

நெறிப்படுத்தும் மரபணு (i)

அமைப்பு மரபணுக்கள் (z, y & a)


ஊக்குவிப்பான் மரபணு 

எல்லா மரபணுக்களும் ஊக்குவிப்பான் மரபணுவின் கட்டுப்பாட்டில் உள்ளன. 

* இவை RNA உற்பத்தியைத் தொடங்கி வைக்கின்ற DNA விலுள்ள சமிக்ஞை வரிசைகளாகும். 

* படியெடுத்தல் தொடங்குவதற்கு முன்பு ஊக்குவிப்பானுடன் RNA பாலிமெரேஸ் இணைகிறது. 

இயக்கி மரபணு 

அமைப்பு மரபணுக்களுக்கும், ஊக்குவிப்பான்களுக்கும் இடையே இயக்கிகள் அமைந்துள்ளன. 

ஒபரானின் இயக்கிப் பகுதியில் அடக்கி புரதம் பிணைகிறது. 

அடக்கி மரபணு 

அடக்கி மரபணு அடக்கி புரதத்தை குறியீடு செய்கின்றன இது  ஒபரானின் இயக்கி பகுதியில் அடக்கிப் புரதம் பிணைகிறது - ஊக்குவிப்பானைத் தடுத்து அமைப்பு மரபணுக்களின் படியெடுத்தலைத் தடை செய்கிறது. 

அமைப்பு மரபணுக்கள் 

* இவை பாலிசிஸ்ட்ரானிக் பண்பு உடையவை. இதில் லேக் Z, லேக் Y மற்றும் லேக் 'a' லேக் மரபணுக்களாகும். 

இவை Z மரபணு - லேக்டோசிடேஸ் நொதிக்கான குறியீடைக் கொண்டுள்ளது. 

இவை Y மரபணு - பெர்மியேஸ் நொதிக்கானக் குறியீடைக் கொண்டுள்ளது.

இவை ‘a' மரபணு - டிரான்ஸ் அசிடைலேஸ் நொதிக்கானக் குறியீடைக் கொண்டுள்ளது. 

இவ்வாறு ஊக்குவிப்பான் மரபணு மற்றும் அடக்கி மரபணு இவை அமைப்பு மரபணுக்களை நெறிப்படுத்துகின்றன. 



23. தாழ்நிலை 'லாக் ஒபரான்' வெளிப்பாடு பல்வேறு மரபு நோய் சிகிச்சைக்கும் பயன்படும் இவ்வாக்கியத்தை நிரூபித்திடுக. 

* வெளிஊடகத்திலிருக்கும்லாக்டோஸ் பாக்டீரிய செல்லினுள் நுழைய பெர்மியேஸ் நொதிதேவைப்படுகிறது. 

* லாக்டோஸ் செல்லினுள் நுழைய இயலவில்லை எனில் அது தூண்டியாக செயல்பட இயலாது. 

* அது லாக் - ஒபரானை தடுக்கும் அடக்கிப் புரதத்துடன் இணைந்து அதனை செயலற்றதாக்குகிறது லாக் - ஒபரான் - செயல்படத் தொடங்குகிறது. 

* எனவே லாக் ஒபரானின் தாழ் நிலை வெளிப்பாடு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. அதனால் பல்வேறு மரபுநோய் சிகிச்சைக்கும் பயன்படுகிறது. 



24. மனித மரபணுத் திட்டம் ஏன் மகாதிட்டம் என அழைக்கப்படுகிறது.

காலம் : 

மனித மரபணு திட்டம் 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது நிறைவுற 13 ஆண்டுகளானது. 

அளவு : 

* இது வரை வரிசைப்படுத்தப்பட்ட உயிரினங்களை விட மனித ஜீனோம் 25 மடங்கு பெரியது. 

* முதன் முதலில் நிறைவு செய்யப்பட்ட முதுகெலும்பி மரபணு மனிதனுடையதாகும் 

* இதில் 3 × 109 கார இணைவுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

தரவு சேமிப்பு மற்றும் பயன்பாடு : 

* மனித ஒரு செல்லின் மரபணு தரவுகள் சேமிக்க ஏறத்தாழ 3300 புத்தகங்கள் தேவை (1000 எழுத்துக்கள் 1000 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம்) 

* இவைகளை சேமிக்க, பெற, ஆய்வு செய்ய அதிநவீன கணிணி அமைப்புகள் தேவை. 

பயோ-இன்பர்மேடிக்ஸ் 

உயிரியிலின் இந்த புதிய பிரிவு, கணிணி அறிவையும், தொழில்நுட்பத்தையும், மனித மரபணு சார்ந்த தரவுகளை நிர்வகிக்க, ஆய்வுகளை செய்ய பயன்படுத்துகிறது. 

இது போன்ற பல்வேறு தன்மைகளாலே மனித மரபணு திட்டம் (Human Genome Project) ஒரு மகா திட்டமாக கருதப்படுகிறது.



25. வாட்சன் மற்றும் கிரிக் ஆகியோர் டி.என்.ஏ அமைப்பைப் பரிசோதனை செய்ததன் மூலம் டி.என்.ஏ இரட்டிப்பாதல், குறியீடு திறன் மற்றும் தீடீர் மாற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் முறை குறித்து என்ன முடிவுகளுக்கு வந்தனர்? 

* DNA அமைப்பு மாதிரியைக் கொண்டு - DNA பாதி பழைமை பேணும் தன்மை - தெரியவந்தது. 

* இரட்டை இழை பிரிந்து - ஒரு முனையில் ஹைட்ரஜன் பிணைப்பு நீங்கி பிரிதலடைய ஒரு இழை வார்ப்பாக செயல்பட்டது. 

* மேலும் சார்காபின் 4 கார இணை விதியை இவர்கள் பயன்படுத்தி மேலும் இரட்டிப்பாதல் மற்றும் 4 காரங்கள் 20 அமினோ அமிலங்களுக்கும் குறியீடாவது குறித்த புரிதல் சாத்யமானது. 

* DNA இன் கார இணையில் ஏற்படும் மாற்றம் அமினோ அமிலக் குறியீடு மாறுவதால் திடீர் மாற்றம் (அ) சடுதி மாற்றம் ஏற்படக்காரணமானது போன்றவைகளை தெளிவாக இருவரும் அறிந்து கொள்ள வழி வகுத்தது. 



26. கடத்து ஆர்.என்.ஏ ‘இணைப்பு மூலக்கூறு' என ஏன் அழைக்கப்படுகிறது?

* இணைப்பு மூலக்கூறு - என்ற சொற்களை உருவாக்கியவர் ஃபிரான்சிஸ் கிரிக். 

* கிராம்பு இலை வடிவத்தை ஒத்திருக்கும் இரண்டாம் நிலை கட்டமைப்புடைய கடத்து RNA(t-RNA) அமைப்பானது அதன் பணிகளுக்கு ஏற்றதாக உள்ளது. 

* தூது RNA மூலக்கூறிலுள்ள அமினோ அமிலங்களுக்கான குறிப்பிட்ட குறியீடுகளைப் படிப்பதும் கூடவே செல்லின் சைட்டோபிளாசத்தில் சிதறிக் கிடக்கும் அமினோ அமிலங்களை புரதம் தயாரிக்கும் இடத்திற்கு எடுத்து வரும் கடத்தியாக செயல்படுதலும் ஆக இரு பணிகளைச் செய்வதால் கடத்து RNAஇணைப்பு மூலக்கூறுகள் என வழங்கப்படுகின்றன. 



27. ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றுக்கிடையே உள்ள அமைப்பு சார்ந்த வேறுபாடுகள் மூன்றினைக் குறிப்பிடுக. 


பண்பு /  RNA  /    DNA 

1. இழைகள் – ஓரிழையானது - இரண்டு இழைகளால் ஆனது விதிவிலக்கு - சில DNA வைரஸ்கள் 

2. சர்க்கரை - ரிபோஸ் சர்க்கரை   -  டி-ஆக்ஸிரிபோஸ் சர்க்கரை

3. நைட்ரஜன் காரங்கள் - அடினைன். குவானைன் யூராசில் மற்றும் சைட்டோசின் - அடினைன்,குவானைன் தயமின் மற்றும் யூராசில்



28. கீழ்க்கண்ட குறியீடுகளை இனங்கண்டறியும் எதிர்குறியீடுகளை எழுதுக

AAU, CGA, UAU and GCA.

mRNA - குறியீடுகள் 



29. அ) கீழ்க்கண்ட வரைபடத்தைக் கண்டறிக. 


ஆ) இவ்வரைபடத்தை 'இரட்டிப்பாதல் பிளவாகக்' கொண்டு வரைக. அதன் பாகங்களைக் குறிக்கவும்

இ) டி.என்.ஏ இரட்டிப்பாதல் முறைக்குத் தேவைப்படும் ஆற்றலின் மூலம் யாது? இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் நொதிகள் யாவை? 

ஈ) இரண்டு வார்ப்புருவ இழைகளின் துருவத் தன்மை அடிப்படையில் புரதச் சேர்க்கையில் ஏற்படும், மாற்றங்களைக் குறிப்பிடுக.


அ) இரட்டிப்பாதல் - இரட்டிப்பாதல் பிளவு காணப்படும் 

ஆ)

விடை :

A - வார்ப்புரு இழை

B - இரட்டிப்பாதல் பிளவு 

C - வழிகாட்டு இழை 

D - பின்தங்கு இழை


இ) டி-ஆக்ஸி நியூக்ளியோடைடு மரைபாஸ்பேட் பாலிமெரைசேஷன் நிகழ்வுக்கான ஆற்றலைத் தருவதோடு அந்த வினைக்கான தளப்பொருளாகவும் உள்ளது. 

ஈ) DNA - இரு இழைகளாலானது

ஒன்றுக்கொன்று ஒத்த தன்மை கொண்ட எதிரெதிர் திசை அமைப்பைக் கொண்டால் 

* ஒன்று 5' 3' என்றும் மற்றது 3' 5' திசை நோக்கி காணப்படும். 

* இதனாலே புரதம் தயாரித்தலின் படியெடுத்தலில் இரு இழைகளும் பங்கு பெற இயலவில்லை அதற்கு இரு காரணங்கள் உள்ளன. 

1) இரு இழைகளுமே வார்ப்புருவாக செயலாற்றுமேயானால், RNAவிற்கான குறியீடு இரண்டிலும் வெவ்வேறு வரிசையில் இருக்கும். 

இதனால் புரதத்தின் அமினோ அமில வரிசையிலும் பாதிப்பு ஏற்படும் - இதனால் DNA-வின் ஒரு பகுதியிலிருந்து இரு வேறு புரதங்கள் உற்பத்தியாகி மரபுத்தகவல் பரிமாற்ற நிகழ் முறையில் சிக்கல் ஏற்படும். 

2) இரு வித RNA மூலக்கூறுகள் ஒரே நேரத்தில் உற்பத்தியாகுமேயானால் RNAவின் இரு இழைகளும் ஒன்றுக்கொன்று நிகரோத்தாக இருக்கும். இது RNA – புரதமாக மொழி பெயர்க்கப்படுவதைத் தடுக்கிறது.



30. கீழ்க்காணும் படியெடுத்தல் அலகிற்கான குறியீட்டு வரிசையின் படி, உருவாக்கப்படும் தூது ஆர்.என்.ஏ வில் உள்ள நியூக்ளியோடைடு வரிசையினை எழுதுக. 

5' TGCATGCATGCATGCATGCATGCATGC 3'




31. இரண்டு படிநிலை புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் அனுகூலங்கள் யாவை?

* ஆம், புரதச்சேர்க்கை 2 - படிநிலைகளில் நடைபெறுகிறது

படியெடுத்தல் 

மொழிபெயர்த்தல்

* பிரான்சிஸ் கிரிக் - மூலக்கூறு உயிரியலின் மையக் கருத்தை உருவாக்கினார்.


I - படியெடுத்தல்

டி.என்.ஏ வில் காணப்படும் செய்திகள் நகலெடுக்கப்படும் செயல்முறை : DNAவின் ஒரு இழையில் காணப்படும் புரத்திற்கான தகவல்களை குறியீடாக செல்லுக்குக் கொண்டு செல்வது தூது RNA (அ) mRNA 

II - மொழிபெயர்த்தல்

* தூது விலுள்ள தகவல் குறியீடுகள் செல்லின் உட்கருவிலிருந்து சைட்டோபிளாசத்தை அடைகிறது. 

* இங்கு ரிபோசோம் RNA, கடத்தி RNA மற்றும் தூது RNA இவற்றுடன் பல்வேறு நொதிகளும் ஒரு அமைப்பாக சேர்ந்து மொழி பெயர்த்தல் படி நிலை நடைபெறும். 

* இவ்வாறு இரு படிநிலைகளும் செல்லில் உட்கரு மற்றும் சைட்டோபிளாசம் நடைபெறுகிறது. 

* எனவே புரதச் சேர்க்கை இரண்டு படிநிலைகளில் நடைபெறுவதன் அனுகூலமாகும்.



32. ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர், கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட பாஸ்பரஸ் மற்றும் கந்தகத்தை ஏன் பயன்படுத்தினர்? அவர்கள் கார்பன் மற்றும் நைட்ரஜனை பயன்படுத்தினால் அதே முடிவுகளைப் பெறமுடியுமா? 

I. கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட கார்பன்

ஹெர்ஷே மற்றும் சேஸ் - கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட கார்பனை பயன்படுத்தியிருந்தால், - அது பாக்டீரியாவின் எல்லா செல்களிலும் காணப்பட்டிருக்கும்.

(கார்பன் எல்லா கரிம மூலக்கூறுகளிலும் உள்ளது) 


II. கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட நைட்ரஜன் 

* அவர்கள் கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட நைட்ரஜனை பயன்படுத்தியிருந்தால், நியூக்ளியோலஸ், செல்சவ்வு மற்றும் முழுவதும், கூடவே பாக்டீரியோபேஜின் பிரிதலுற்ற பொருட்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். 

* (நைட்ரஜன் - புரதத்திலும், DNA விலும் அமைப்புக் கூறாக உள்ளது) 

* எனவே கதிரியக்க ஐசோடோப்புகள் பாஸ்பரஸ் நியூக்ளிக் அமிலங்களிலும், கதிரியக்க கந்தகம் புரதங்களில் மட்டும் காணப்பட்டது.

* இவர்கள் மரபுப்பொருள் DNA - RNA யா (அ) புரதமா உறுதி செய்யவே இவ்வாறு பய

ன்படுத்தினர். 



33. நியூக்ளியோசோம் உருவாகும் முறையை விவரி.

* குரோமோசோம் - குரோமேட்டினால் ஆனவை 

* குரோமேட்டின் தொடர்ச்சியான மீள் தோன்று அலகுகளான நியூக்ளியோசோம்களால் உருவானது.

கோரன்பெர்க் - நியூக்ளியோசோம் மாதிரி 

இதில் H2 A, H2 B, H3 & H4 எனும் நான்கு ஹிஸ்டோன் புரதங்களின் இரண்டு மூலக்கூறுகள் வரிசையாக அமைந்து எட்டு மூலக்கூறுகளை உடைய அலகை உருவாக்குகின்றன. இதற்கு ஹிஸ்டோன் எண்மம் என்று பெயர். 

* நேர்மின்தன்மை கொண்ட ஹிஸ்டோன் எண்மத்தைச் சுற்றி, எதிர்மறை தன்மை கொண்ட DNA உறையாக அமைந்து நியுக்ளியோசோமை உருவாக்குகிறது. 

* மாதிரி நியுக்ளிசோம் ஒன்றில் - 200 கார இணைகள் உள்ளன. 

* அடுத்தடுத்துள்ள நியுக்ளியோசோம்களை, நொதிகளின் உதவியுடன் இணைப்பு DNAக்கள் இணைக்கின்றன. 

* ஹிஸ்டோன் எண்மத்தை சுற்றி DNA இரு முழுமையான திருகுகளை உருவாக்கியுள்ளன. 

* இந்தத் திருகுகளை மூலக்கூறு H1 (இணைப்பு மூலக்கூறு) மூடுகிறது. 

* H1 இல்லாத நிலையில் குரோமேட்டின் மணிகோர்த்த மாலை போல் தெரிகிறது. 

* இவ்வமைப்பின் எந்த இடத்திலும் DNA உட்செல்லவும் நியுக்ளியோசோமை விட்டு வெளியேறவும் முடியும். 

* நியூக்ளியோசோமின் மடிப்பிலிருந்து தோன்றும் நீளமுள்ள இழை - ஒரு சுற்றுக்கு ஆறு நியூக்ளியோசோமைக் கொண்ட வரிச்சுருளமைப்பை (Solenoid) உருவாக்குகிறது. 

* இது மேலும் மடிப்புற்று - குரோமேடின் இழைகளையும்

குரோமேட்டின் இழை மேலும் மடிப்புற்று குரோமேடிடுகளையும்

குரோமேடிடுகள் குரோமோசோம்களாகின்றன. 

* உயர்நிலை குரோமேடின் பொதிவுக்கு ஹிஸ்டோனல்லாத குரோமோசோம் புரதங்கள் தேவைப்படுகின்றன.

குரோமேட்டின் இருவகைப்படும்

யூரோமேட்டின்

ஹெட்டிரோகுரோமேட்டின்


யூகுரோமேட்டின் 

1. தளர்வாக பொதியப்பட்டுள்ளது 

2. சாயமேற்காது 

3. படியெடுத்தலில் தீவிரமாக பங்கேற்கும்

ஹெட்ரோகுரோமேட்டின் 

1. நெருக்கமாக பொதியப்பட்டுள்ளது 

2. சாய மேற்கும் 

3. படியெடுத்தலின் பங்கேற்காது



34. முதன் முதலாக உருவான மரபுப்பொருள் ஆர்.என்.ஏ தான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. காரணங்களுடன் நிருபிக்க. 

அளவு : ஒரு மாதிரி செல் ஒன்றுக்குள் DNA வை விட பத்து மடங்க அதிக அளவில் RNA உள்ளது. 

பணிகள் : பரந்துப்பட்ட பல பணிகளை மேற்கொள்கிறது.

(வளர்சிதை மாற்றம் மொழியாக்கம், பிளவுறுதல் போன்ற இன்னபிற) 

சான்றுகள் : * ஃபிரன்கெல் - கான்ராட் &சிங்கர் (1957) ஆகியோர் (TMV) புகையிலை மொசைக் வைரஸில் RNA மரபணுவாக உள்ளது என்று முதன்முதலாகக் கூறினர். 

* TMV - விலிருந்து RNA வைப் பிரித்தெடுத்தனர். 

* லெஸ்லி ஆர்ஜெல், பிரான்சிஸ்பிரிக் மற்றும் கார்ல் வோயஸ் (மூன்று மூலக்கூறு அறிவியலாளர்கள்) பரிணாமத்தின் முதல் நிலையாக RNA உலகம் என அறிமுகப்படுத்தினார்கள். 

* வால்டர் கில்பெர்ட் (1986) RNA உலகம் என்ற சொல்லை பயன்படுத்தினார்.


என இரண்டாகவும் செயலாற்றக்கூடிய திறன் கொண்டதாக உள்ளது. வினையூக்கி RNA - ரிபோசைம் - எனப்படும். வினையூக்கி என்பதால் RNA வின் நிலைப்புத் தன்மை குறைவு. எனவே RNA முதல் மரபணுப்பொருள் என்பதும் DNA - RNA விலிருந்து பல மாற்றங்களுடன் பின் பரிணாமமடைந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.







12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 5 : மூலக்கூறு மரபியல்