Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | இயற்கை வளம் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

நீர்வளம், கனிம வளங்கள் - இயற்கை வளம் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் | 11th Economics : Chapter 11 : Tamil Nadu Economy

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

இயற்கை வளம் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

1. நீர்வளம் 2. கனிம வளங்கள்

இயற்கை வளம்


1. நீர்வளம்


பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் இயற்கை வளம் குறைவாகும். இந்திய மாநிலங்களுக்கிடையில் மக்கள் தொகையில் 6சதவீதமாக இருந்த போதிலும், நீர் வளத்தில் 3சதவீதமும், நில பரப்பளவில் 4 சதவீதமும் உள்ளது.

தென்மேற்கு பருவக் காற்றைத் தொடர்ந்து வரும், வட கிழக்குப் பருவக்காற்று மழைப் பொழிவுக்கான மிகப்பெரிய ஆதாரமாகும். தமிழ்நாட்டில் 17 ஆறுகள் உள்ளன. பாலாறு, செய்யாறு, பெண்ணையாறு, காவேரி, பவானி, வைகை, சித்தாறு, தாமிரபரணி, வெள்ளாறு, சிறுவாணி, நொய்யல், வைப்பார், குண்டாறு போன்றவை முக்கிய ஆறுகள் ஆகும். தமிழகத்தில் கிணற்று பாசனம் அதிக அளவில் உள்ளது. (56%). 

அட்டவணை 11.1 பாசனத்திற்கான ஆதாரங்கள் 


பாசன விவரங்கள் எண்ணிக்கை 

அணைக்கட்டுகள்  - 81 

கால்வாய்கள் - 2239 

குளங்கள் - 41262 

குழாய் கிணறுகள் - 3,20,707 

திறந்தவெளி கிணறுகள் - 14,92,359

Source: Tamil Nadu Government Season & Crop Report 2012-13


2. கனிம வளங்கள்

டைட்டானியம், லிக்னைட், மேக்னசைட், கிராபைட், லைம்ஸ்டோன், கிரானைட், பாக்சைட் போன்ற சுரங்கத் திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. இவற்றில் முன்னோடித் திட்டமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தை குறிப்பிடலாம் (NLC). இதன் வளர்ச்சியினால் அனல் மின்நிலையம், உரத் தொழிற்சாலை, கார்பன் சார்ந்த தொழில்கள் வளர்ந்து வருகின்றன. இதே போல் சேலத்தில் மாங்கனிசு சுரங்கமும், ஏற்காட்டில் பாக்சைட் சுரங்கமும், கஞ்சமலையில் இரும்புத்தாது சுரங்கமும் அமைந்துள்ளன மாலிப்டினம் எனும் இரசாயனத்தாது இந்தியாவிலேயே மதுரை மாவட்டத்தில் உள்ள கரடிக்குட்டம் என்னும் ஊரில் மட்டுமே கிடைக்கிறது.


அட்டவணை 11.2 கனிம வளங்கள்


11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம்