Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress)

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 25 : லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress)

லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress)

லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் என்பது உரை, கிராபிக்ஸ், ஒலி ஆகியவற்றைக் கொண்டு நிகழ்த்துதலை உருவாக்கும்; ஒரு மென்பொருளாகும். இது பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

அலகு 25

லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress)

 

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றபின், மாணவர்கள் பெறும் திறன்களாவன:

நிகழ்த்துதல் (presentation) வரையறுத்தல்.

ஒரு புதிய நிகழ்த்துதலை உருவாக்குதல்.

உரைப்பெட்டி, உருவப்படங்கள், ஒலி மற்றும் ஒளிக் கோப்புகள் ஆகியவற்றை பயன்படுத்தி நிகழ்த்துதலை உருவாக்குதல்.

சில்லு (Slide) உருவாக்குதல் மற்றும் நீக்குதல்.

Slide Show நிகழ்த்துதல்.

 

அறிமுகம்

லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் என்பது உரை, கிராபிக்ஸ், ஒலி ஆகியவற்றைக் கொண்டு நிகழ்த்துதலை உருவாக்கும்; ஒரு மென்பொருளாகும். இது பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். உரை, புகைப்படங்கள், படம், ஒலி மற்றும் அனிமேஷன் ஆகியவற்றைக் கொண்ட வண்ண மயமான நிகழ்த்துதல் (presentation) பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் மேலும் நிகழ்த்துதலைப் பார்க்க அவர்களுக்கு அதிக ஆர்வத்தைத்தரும். அனிமேஷன் என்பது ஒரு பொருளுக்கு இயக்கத்தை உருவாக்கும் செயல் முறையாகும். இது ஒரு பயனர்நட்பு பயன்பாட்டு மென்பொருள். லிப்ரே ஆபிஸ் பதிப்பைத் தொடங்க கொடுக்கப்பட்ட படிகளைப் பின்பற்றவும்:

1. Start பொத்தானைக் கிளிக் செய்க.

2. All Programs சொடுக்கவும்.

3. லிப்ரே ஆபிஸ் இம்ப்ரஸ் என்பதைக் கிளிக் செய்க

4. Libre Office Impress விருப்பத்தை சொடுக்கவும்.

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 25 : லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress)