Home | 4 ஆம் வகுப்பு | 4வது தமிழ் | பசுவுக்குக் கிடைத்த நீதி (நாடகம்): கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 2 இயல் 8 | 4 ஆம் வகுப்பு தமிழ் - பசுவுக்குக் கிடைத்த நீதி (நாடகம்): கேள்விகள் மற்றும் பதில்கள் | 4th Tamil : Term 2 Chapter 8 : Pasuvukku kidaitha Nedhi (nadagam)

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 8 : பசுவுக்குக் கிடைத்த நீதி (நாடகம்)

பசுவுக்குக் கிடைத்த நீதி (நாடகம்): கேள்விகள் மற்றும் பதில்கள்

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 8 : பசுவுக்குக் கிடைத்த நீதி (நாடகம்): புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்

வாங்க பேசலாம்


நீங்கள் மனுநீதிச் சோழனாக இருந்தால், பசுவின் துயரத்தை எப்படிப் போக்குவீர்கள்?

விடை

நான் மனுநீதிச் சோழனாக இருந்தால் கன்றை இழந்த பசுவை அரண்மனையில் வைத்துப் பாதுகாப்பேன். அப்பசு, கன்றை இழந்த கவலையின்றி இருக்க நிறைய பசுக்களையும் கன்றுகளையும் சேர்த்து வளர்ப்பேன்.

 

சிந்திக்கலாமா!

வீட்டிற்குப் போகும் வழியில் ஓணான் ஒன்றைச் சிறுவர்கள் சிலர் துன்புறுத்துகின்றனர். அவர்கள் செய்தது சரியா அந்தச் செயலை நீங்கள் எப்படித் தடுப்பீர்கள்?

விடை

அவர்கள் செய்தது சரியன்று.

சிறுவர்களிடம் நீங்கள் செய்யும் செயல் தவறானது. நாம் உயிர்களிடம் இரக்கம் கொள்ள வேண்டும்,” என்று கூறி அச்சிறுவர்கள் ஓணானைத் துன்புறுத்துவதைத் தடுப்பேன்.

 


படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

 

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. இன்னல்-இச்சொல்லிற்குரிய பொருள்

) மகிழ்ச்சி

) நேர்மை

) துன்பம்

) இரக்கம்

[விடை : ) துன்பம்துன்பம்]

 

2. அரசவை - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

) அரச + அவை

) அர + அவை

) அரசு + அவை

) அரச + வை

[விடை : ) அரசு + அவை]

 

3. மண்ணுயிர் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

) மண் + ணுயிர்

) மண் + உயிர்

) மண்ண + உயிர்

) மண்ணு + உயிர்

[விடை : ) மண் + உயிர்]

 

வினாவிற்கு விடையளிக்க

1. மனுநீதிச் சோழன் ஆராய்ச்சி மணியை அமைத்ததற்கான காரணம் என்ன?

விடை

மனுநீதிச் சோழன் தனது ஆட்சியில் குடிமக்கள் யாரும் துன்பப்படக் கூடாது என்று நினைத்தான். அதனால் ஆராய்ச்சி மணியை அமைத்தான்.

 

2. பசு ஆராய்ச்சி மணியை அடித்தது ஏன்?

விடை

அரசனின் மகன் தேரைத் தெருவில் ஓட்டிச் செல்லும் போது, அங்குத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த பசுவின் கன்று எதிர்பாராத வகையில் தேர்க்காலில் மாட்டி இறந்துவிட்டது. அதனால் துயருற்ற பசு ஆராய்ச்சி மணியை அடித்தது.

 

3. பசுவின் துயரை மன்னன் எவ்வாறு போக்கினான்?

விடை

பசுவின் துயரைப் போக்க எண்ணிய மன்னன், தன் மகனை அதே தேர்க்காலில் இட்டுக் கொன்று பசுவின் துயரைப் போக்கினான்.

 

அகரமுதலி பார்த்துப் பொருள் அறிக

ஆற்றொணா, வியனுலகம், செவி சாய்த்தல், கொடியோன், பரம்பரை

விடை

1. ஆற்றொணா தாங்க முடியாத

2. வியனுலகம் பரந்த உலகம்

3. செவி சாய்த்தல் கேட்க விரும்புதல்

4. கொடியோன் துன்புறுத்துபவன்

5. பரம்பரை தொன்றுதொட்டு

 

சொல்லக் கேட்டு எழுதுக

1. அரங்கம்

2. ஆராய்ச்சி மணி

3. மனக்குறை

4. நிலவுலகம்

5. வாழ்நாள்

 

சொல் உருவாக்குக


விடை

இனிமை

மாலை

தீ

மகன்

பெண்

உண்மை

மான்

 

கலையும் கைவண்ணமும்

வண்ணம் தீட்டி மகிழ்வோம்


 

அறிந்து கொள்வோம்!

மாநகரம், மாமலை, மாமதுரை, மாமுனி, மாதவம் என்று ஒன்றை சிறப்பித்து கூறுவதற்கு மா என்ற சொல் வழக்கத்தில் உள்ளது.

 

செயல் திட்டம்


நீ வாழும் சூழலில் காணும் பறவைகள் விலங்குகள் பற்றிய செய்திகளைத் திரட்டிப் படத்தொகுப்பு ஒன்றை உருவாக்குக.

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 8 : பசுவுக்குக் கிடைத்த நீதி (நாடகம்)