Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | கவிதைப்பேழை: எதனாலே, எதனாலே?

பருவம் 2 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: எதனாலே, எதனாலே? | 5th Tamil : Term 2 Chapter 1 : Ariviyal tholilnuppam

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல், தொழில்நுட்பம்

கவிதைப்பேழை: எதனாலே, எதனாலே?

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல், தொழில்நுட்பம் : கவிதைப்பேழை: எதனாலே, எதனாலே? | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்று

பாடல்

அறிவியல் / தொழில்நுட்பம்

 

கற்றல் நோக்கங்கள்

அறிவியல் விழிப்புணர்வுப் பாடல்களைக் கேட்டுப் புரிந்துகொள்ளுதல்

சுற்றுப்புறத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அறிவியல் பின்புலம் உள்ளதை அறிந்துகொள்ளுதல்

அறிவியல் கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடித்தவர்களையும் தெரிந்துகொள்ளல்

காரணகாரியங்களை அறிவியல் மனப்பான்மையுடன் அணுகுதல்

மூவிடப்பெயர்களை அறிந்துகொண்டு, உரிய இடங்களில் பயன்படுத்துதல்

 

எதனாலே, எதனாலே?

எதனாலே, எதனாலே?

பலவண்ண வானவில் எதனாலே?

விண்மீன் ஒளிர்வது எதனாலே?

ரோஜாப்பூ சிவப்பது எதனாலே?

இலைகள் உதிர்வது எதனாலே?

மின்மினி மின்னுவது எதனாலே?

பறவைகள் பறப்பது எதனாலே?

மின்னல் மின்னுவது எதனாலே?

மேகம் கறுப்பது எதனாலே?

கடலில் அலைகள் எதனாலே?

அனைத்தின் காரணம் கண்டறிந்தால்

அறிஞனாகலாம் அதனாலே

 

பாடல் பொருள்

ஏன், எதற்கு, எப்படி என்னும் அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்களைக் காரணகாரியங்களுடன் விளக்க முற்படுகிறது.

வானில் உள்ள நீர்த்துளிகளுள் சூரிய ஒளி ஊடுருவும்போது, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொளிப்பதால் வானவில் தோன்றுகிறது,

விண்மீன்கள், தங்களிடம் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களை இயற்பியல் நிகழ்வின் உதவியுடன் ஒன்றிணைப்பதன் மூலம் ஒளி வீசுகின்றன.

ரோஜாப்பூவில் 'ஆந்தோசைனின்' என்ற நிறமி இருப்பதால், சிவந்த நிறத்தில் காணப்படுகின்றது.

கோடைக்காலங்களில் நீராவிப் போக்கைத் தடுப்பதற்காகத் தாவரங்களிலிருந்து இலைகள் உதிர்கின்றன.

மின்மினிப் பூச்சிகளின் பின்னால் அடிக்கடி விளக்கு எரிவதைப் போல் மின்னுகின்றன. காரணம், லூசிஃபெரேஸ் என்சைம் மின்மினிப்பூச்சி பின்னால் இருப்பதால் மின்னுகிறது.

பறவைகள், பறக்கக் காரணம் அவற்றின் எலும்புகளிலும் இறகுகளிலும் காற்றுப் பைகள் உள்ளன. அவை, பறப்பதற்கு உதவுகின்றன.

மின்னிறக்கத்தால் மின்னல் மின்னுகிறது.

மேகத்தில் அதிக அளவு நீர் இருப்பதால், சூரிய ஒளி ஊடுருவ முடியாது. ஆதலால், மேகம் கறுப்பாகத் தோன்றுகிறது.

பூமியின் மீது சந்திரனின் ஈர்ப்பு விசை இருப்பதால், கடலில் அலைகள் தோன்றுகின்றன.

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல், தொழில்நுட்பம்