Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: பாடறிந்து ஒழுகுதல்: கேள்விகள் மற்றும் பதில்கள்

கலித்தொகைப் பாடல் | இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: பாடறிந்து ஒழுகுதல்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 5 : Kulalenidu yalinidu

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது

கவிதைப்பேழை: பாடறிந்து ஒழுகுதல்: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது : கவிதைப்பேழை: பாடறிந்து ஒழுகுதல்: கேள்விகள் மற்றும் பதில்கள் - கலித்தொகைப் பாடல் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பசியால் வாடும் -------- உணவளித்தல் நமது கடமை.

அ) பிரிந்தவர்க்கு

ஆ) அலந்தவர்க்கு

இ) சிறந்தவர்க்கு

ஈ) உயர்ந்தவருக்கு

[விடை : ஆ) அலந்தவர்க்கு]

 

2. நம்மை --------- ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

அ) இகழ்வாரை

ஆ) அகழ்வாரை

இ) புகழ்வாரை

ஈ) மகிழ்வாரை

[விடை : அ) இகழ்வாரை]

 

3. மறைபொருளைக் காத்தல் --------- எனப்படும்.

அ) சிறை

ஆ) அறை

இ) கறை

ஈ) நிறை

[விடை : ஈ) நிறை]

 

4. 'பாடறிந்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பாட் + அறிந்து

ஆ) பா + அறிந்து

இ) பாடு + அறிந்து

ஈ) பாட்டு + அறிந்து

[விடை : இ) பாடு + அறிந்து]

 

5. முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) முறையப்படுவது

ஆ) முறையெனப்படுவது

இ) முறை எனப்படுவது

ஈ) முறைப்படுவது

[விடை : ஆ) முறையெனப்படுவது]

 

குறுவினா

1. பண்பு, அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?

விடை

பண்பு என்பது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.

அன்பு என்பது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.

 

2. முறை, பொறை என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது?

விடை

முறை என்பது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.

பொறை என்பது தம்மை இகழ்பவரையும் பொறுத்தல்.

 

சிறுவினா

நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.

விடை

இல்வாழ்வு என்பது ஏழைகளுக்கு உதவி செய்தல்.

பாதுகாத்தல் என்பது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.

அன்பு என்பது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.

அறிவு என்பது அறிவற்றவர்கள் கூறும் சொற்களைப் பொறுத்தல்.

செறிவு என்பது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.

நிறை என்பது மறைபொருளை அழியாமல் காத்தல்.

முறை என்பது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்பொறை என்பது தம்மை இகழ்பவரையும் பொறுத்தல்.

இத்தகைய பண்புகளைப் பின்பற்றி வாழவேண்டும் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது.

 

சிந்தனை வினா

வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நலன்களாக நீங்கள் கருதுவன யாவை?

விடை

உண்மை , உழைப்பு, நேர்மை, அன்பு, அறம், சினம் கொள்ளாமை, புறம் கூறாமை, தன்னம்பிக்கை, ஊக்கப்படுத்துதல், பொறாமை கொள்ளாமை, ஏழைகளுக்கு உதவுதல், பெரியோரை மதித்தல், மனிதநேயத்துடன் இருத்தல், பிறர் செய்யும் பிழையைப் பொறுத்துக் கொள்ளுதல் ஆகியனவாழ்வில் கடைபிடிக்க வேண்டிய பண்பு நலன்களாக நாங்கள் கருதுகின்றோம்.

 


கற்பவை கற்றபின்



அன்பு, வாய்மை, நேர்மை போன்ற நற்பண்புகளின் பெயர்களைத் தொகுத்து பட்டியல் ஒன்று உருவாக்குக.

விடை


8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது