Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கவிதைப்பேழை: பூத்தொடுத்தல்

உமா மகேஸ்வரி | இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: பூத்தொடுத்தல் | 10th Tamil : Chapter 6 : Nila muttram

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்

கவிதைப்பேழை: பூத்தொடுத்தல்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் : கவிதைப்பேழை: பூத்தொடுத்தல் - உமா மகேஸ்வரி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கலை

கவிதைப் பேழை

பூத்தொடுத்தல்

- உமா மகேஸ்வரி



நுழையும்முன்

கலைகள் மனித வாழ்விற்கு அழகூட்டு பவை. அழகியல், மண்ணுயிர்கள் அனைத்தையும் தம் வாழ்வியல் சூழலுடன் பிணைத்துக் கொண்டுள்ளது. தத்தித் தாவும் குழந்தை முதல் தள்ளாடும் முதியவர் வரை யாவரும் அழகுணர்ச்சி மிக்கவர்களே! நாரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவிலும் அழகு சிரிப்பதை அடையாளம் காணுகிறார் கவிஞர் ஒருவர்.


இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி?

சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்

சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்.

இறுக்கி முடிச்சிட்டால்

காம்புகளின் கழுத்து முறியும்.

தளரப் பிணைத்தால்

மலர்கள் தரையில் நழுவும்.

வாசலில் மரணம் நிற்பதறிந்தும்

வருந்தாமல் சிரிக்கும்

இந்தப் பூவை

எப்படித் தொடுக்க நான்–

ஒருவேளை,

என் மனமே நூலாகும்

நுண்மையுற்றாலொழிய.

 

நூல் வெளி

கவிஞர் உமா மகேஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர். தற்போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாழ்ந்து வருகிறார். இவர், நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தொகுதிகளைப் படைத்துள்ளார்; கவிதை, சிறுகதை, புதினம் என்று பல தளங்களில் படைத்து வருகிறார்.

 

கற்பவை கற்றபின்....

ஒவ்வொரு நாளும் நீங்கள் பார்க்கும் காட்சிகளில் எதிர்கொள்ளும் / நிகழ்வுகளில் கண்டுணரும் அழகை மூன்று நிமிடங்கள் சொற்களில் விவரிக்க.

 

 

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்