Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | செய்யுள் : சிறுபஞ்சமூலம் - காரியாசான்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் : சிறுபஞ்சமூலம் - காரியாசான்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 5th Tamil : Term 3 Chapter 1 : Naadu, samugam, arasu, niruvagam

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நாடு, சமூகம், அரசு, நிருவாகம்

செய்யுள் : சிறுபஞ்சமூலம் - காரியாசான்: கேள்விகள் மற்றும் பதில்கள்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நாடு, சமூகம், அரசு, நிருவாகம் : செய்யுள் : சிறுபஞ்சமூலம் - காரியாசான்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

 

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. வனப்பு - இச்சொல்லின் பொருள்

அ) அறிவு

ஆ) பொறுமை

இ) அழகு

ஈ) சினம்

[விடை : இ) அழகு]

 

2. நன்றென்றல் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நன் + றென்றல்

ஆ) நன்று + என்றல்

இ) நன்றே + என்றல்

ஈ) நன்றெ + என்றல்

[விடை : ஆ) நன்று + என்றல்]

 

3. என்று + உரைத்தல் - இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

அ) என்று உரைத்தல்

ஆ) என்றுயுரைத்தல்

இ) என்ற உரைத்தல்

ஈ) என்றுரைத்தல்

[விடை : ஈ) என்றுரைத்தல்]

 

4. கண்ணுக்கு அழகு

அ) வெறுப்பு

ஆ) பொறுமை

இ) இரக்கம்

ஈ) பொறாமை

[விடை : இ) இரக்கம்]

 

ஆ. பொருத்துக

1. கண்ணுக்கு அழகு - கேட்பவர் நன்று என்று சொல்லுதல்

2. காலுக்கு அழகு - இவ்வளவுதான் என உறுதி செய்து கூறுதல்

3. ஆராய்ச்சிக்கு அழகு - நாட்டு மக்களை வருத்தாமை

4. இசைக்கு அழகு - பிறரிடம் சென்று கேட்காமை

5. அரசனுக்கு அழகு - இரக்கம் காட்டல்

விடை

1. கண்ணுக்கு அழகு இரக்கம் காட்டல்

2. காலுக்கு அழகு பிறரிடம் சென்று கேட்காமை

3. ஆராய்ச்சிக்கு அழகு இவ்வளவுதான் என உறுதி செய்து கூறுதல்

4. இசைக்கு அழகு கேட்பவர் நன்று என்று சொல்லுதல்

5. அரசனுக்கு அழகு நாட்டு மக்களை வருத்தாமை

 

இ. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக

ண் வனப்பு

ண் வனப்பு

கேட்டார்

வாட்டான்

 

ஈ. வினாக்களுக்கு விடையளிக்க,

1. கண்ணுக்கு எது அழகு?

விடை

கண்ணுக்கு அழகு இரக்கம் கொள்ளும் பண்பாகும்

 

2. காலுக்கு எது அழகைத் தருகிறது?

விடை

பிறரிடம் பொருளை வேண்டிச் செல்லாமல் இருப்பது காலுக்கு அழகைத் தருகிறது.

 

3. இசைக்கு அழகாக எது கூறப்படுகிறது?

விடை

இசையைக் கேட்போர் அதனை நன்று என்று கூறுதல், இசைக்கு அழகாகும்.

 

4. அரசனுக்கு அழகைத் தருவது எது?

விடை

தன் நாட்டு மக்களை வருத்த மாட்டான் என்று பிறர் அவனைப் புகழ்ந்து கூறுதல் அரசனுக்கு அழகைத் தரும்.

 

உ. சிந்தனை வினா

நம்மைப் பிறர் பாராட்ட வேண்டுமெனில் நம்மிடம் எத்தகைய பண்புகள் இருக்கவேண்டும்?

விடை

மனித நேயம்.

பிறருடைய நலத்தைப் பற்றி அறிதல்.

பகைவனிடமும் அன்பு காட்டுதல்.

பிறர் செய்யும் தவற்றை மன்னித்து விட்டு அவருக்கே உதவியும் செய்தல்.

தம்மைவிட எளியவரிடமும் பணிவுடன் இருத்தல்.

பிற உயிரினங்களிடத்தும் அன்பு காட்டுதல்.

 


கற்பவை கற்றபின்

 

பாடலைப் பொருள் புரிந்து படித்துக்காட்டுக.

பாடலை ஓசைநயத்துடன் பாடி மகிழ்க.

பாடலை அடிபிறழாமல் எழுதுக

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நாடு, சமூகம், அரசு, நிருவாகம்