Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: தமிழ்மொழி மரபு: கேள்விகள் மற்றும் பதில்கள்

தொல்காப்பியர் | இயல் 1 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: தமிழ்மொழி மரபு: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 1 : Tamil inbam

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : தமிழ் இன்பம்

கவிதைப்பேழை: தமிழ்மொழி மரபு: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : தமிழ் இன்பம் : கவிதைப்பேழை: தமிழ்மொழி மரபு: கேள்விகள் மற்றும் பதில்கள் - தொல்காப்பியர் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பறவைகள் ---------------- . பறந்து செல்கின்றன.

அ) நிலத்தில்

ஆ) விசும்பில்

இ) மரத்தில்

ஈ) நீரில்

[விடை : ஆ) விசும்பில்]

 

 

2. இயற்கையைப் போற்றுதல் தமிழர் ---------- .

அ) மரபு

ஆ) பொழுது

இ) வரவு

ஈ) தகவு

[விடை : அ) மரபு]

 

3. 'இருதிணை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) இரண்டு + திணை

ஆ) இரு + திணை

இ) இருவர் + திணை

ஈ) இருந்து + திணை

[விடை : அ) இரண்டு + திணை]

 

4. 'ஐம்பால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) ஐம் + பால்

ஆ) ஐந்து + பால்

இ) ஐம்பது + பால்

ஈ) ஐ + பால்

[விடை : ஆ) ஐந்து + பால்

 

குறுவினா

1.  உலகம் எவற்றால் அனது?

விடை

இவ்வுலகம் நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும்.

 

2. செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?

விடை

செய்யுளில் திணை, பால், வேறுபாடறிந்து மரபான சொற்களைப் பயன்படுத்துதல் வேண்டும். மரபுகளை மாற்றினால் பொருள் மாறிவிடும்.

 

சிந்தனை வினா

நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

விடை

மனிதன் தன் வாழ்நாளில் நல்ல முறையில் வாழ்ந்து, தான் வாழ்ந்ததற்கான அடிச்சுவட்டை விட்டுச் செல்கிறான். அவ்வகையில் பழந்தமிழர் தம் வாழ்வில் கடைப்பிடித்து தமக்கு விட்டுச் சென்ற பண்பாட்டை மரபுகளாகப் பின்பற்றுவது நமது கடமையாகும். அதனால்தான், நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றி வந்தனர். மரபு மாறினால் பொருள் மாறிவிடும் பண்பாடும் அர்த்தமற்று போய்விடும். எனவே, நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் இதுவாகத்தான் இருக்கும் என கருதுகிறேன்.

 


கற்பவை கற்றபின்

 

 

1. பறவைகளின் ஒலி மரபுகளை எழுதி வருக.

(எ.கா.) காரம் கரையும்.

விடை

ஆந்தை அலறும்

கிளி பேசும்

குயில் கூவும்

கூகை குழறும்

கோழி கொக்கரிக்கும்

சேவல் கூவும்

புறா குனுகும்

மயில் அகவும்

வண்டு முரலும்

 

2. ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் வழங்கப்படும் வேறு பெயர்களை எழுதுக.

விடை

நிலம் தரை, மண், இடம், பூவுலகு, பூமி, மனை, புவி. நெருப்பு,

தீ கொள்ளி, அக்கினி, கனல், அனல்.

நீர் தண்ணீர், வெள்ளம், புனல். வளி

வளி காற்று, வாயு, தென்றல், புயல்.

விசும்பு ஆகாயம், வானம், விண்.

 

3. ஐம்பூதங்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.

விடை


8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : தமிழ் இன்பம்