Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | பாடல் : தமிழின் இனிமை: கேள்விகள் மற்றும் பதில்கள்

பாரதிதாசன் | பருவம் 1 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் - பாடல் : தமிழின் இனிமை: கேள்விகள் மற்றும் பதில்கள் | 5th Tamil : Term 1 Chapter 1 : Mozhli

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி

பாடல் : தமிழின் இனிமை: கேள்விகள் மற்றும் பதில்கள்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி : பாடல் : தமிழின் இனிமை: கேள்விகள் மற்றும் பதில்கள் - பாரதிதாசன் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

 

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. 'கழை' இச்சொல் உணர்த்தும் சரியான பொருள்

அ) கரும்பு

இ) கருப்பு

ஆ) கறும்பு

ஈ) கறுப்பு

[விடை : அ) கரும்பு]

 

2. கனியிடை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கனி + யிடை

ஆ) கணி + யிடை

இ) கனி + இடை

ஈ) கணி + இடை

[விடை : இ) கனி + இடை]

 

3. பனி + மலர் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) பனிம்மலர்

ஆ) பனிமலர்

இ) பன்மலர்

ஈ) பணிமலர்

[விடை : ஆ) பனிமலர்]

 

ஆ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.

அ) கழையிடை - கழை + இடை

ஆ) என்னுயிர் – என் + உயிர்

 

இ. பெட்டியிலுள்ள சொற்களைப் பொருத்தி மகிழ்க.

1. பால் பசு

2. சாறு கரும்பு

3. இளநீர் தென்னை

4. பாகு வெல்லம்

 

ஈ. இப்பாடலில் வரும் ஒரே ஓசையுடைய சொற்களை எடுத்து எழுதுக

விடை

கனியிடை, கழையிடை, பாகிடை, பாலும், தேனும், நீரும், சுவையும்.

 

உ. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் உள்ள சொற்களை எடுத்து எழுதுக

விடை

கனியிடை, பனிமலர், நனிபசு, இனியன, எனினும் தென்னை , என்னுயிர், என்பேன்.

 

ஊ. பாடலில் வரும் வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக.

விடை

கனிச்சுவை, கழைச்சாறு, பனிமலர், தேன், பாகு, நனிபசு, பால், தென்னை , குளிரிளநீர்.

 

எ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. பாரதிதாசன் எவற்றையெல்லாம் இனியன என்று கூறுகிறார்?

விடை

பலாச்சுளை

கரும்புச்சாறு

தேன்

பாகு

பசுவின் பால்

இளநீர்

 

2. பாரதிதாசன் எதனை என் உயிர் என்று கூறுகிறார்?

விடை

பாரதிதாசன் தமிழே என் உயிர் என்கிறார்.

 

ஏ. சிந்தனை வினா

பாரதிதாசன் சிலவற்றை இனியன என்று கூறுகிறார். உனக்கு எவையெல்லாம் இனிமையானவை? ஏன்?

விடை

மாம்பழம், கற்கண்டு, தேன், வாழை, நுங்கு ஆகியவை எல்லாம் எனக்கு இனிமையானவை.

ஏனென்றால் இவை அனைத்தும் இயற்கையில் இனிமை தருவன. உடல் நலத்திற்கும் ஏற்றதாலும் இனியனவாகக் குறிப்பிடுகின்றேன்.

 


கற்பவை கற்றபின்


• பாடலைச் சரியான உச்சரிப்புடன் படித்துக் காட்டுக.

• பாடலை உரிய ஓசையுடன் பாடுக.

• பாரதிதாசன் தமிழை உயிர் என்கிறார். உங்களுக்குத் தமிழ் எது போன்றதுகலந்துரையாடுக.

• மொழி தொடர்பான பாடல்கள் மற்றும் கவிதைகளைப் படித்து மகிழ்க.

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி