Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: வயலும் வாழ்வும்: கேள்விகள் மற்றும் பதில்கள்

தொகுப்பாசிரியர் கி.வா. ஜகந்நாதன் | பருவம் 3 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: வயலும் வாழ்வும்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 3 Chapter 1 : Nayathagu nagrikam

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம்

கவிதைப்பேழை: வயலும் வாழ்வும்: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் : கவிதைப்பேழை: வயலும் வாழ்வும்: கேள்விகள் மற்றும் பதில்கள் - தொகுப்பாசிரியர் கி.வா. ஜகந்நாதன் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 1 : கவிதைப் பேழை : வயலும் வாழ்வும்)


பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. உழவர் சேற்று வயலில் ---------- நடுவர். 

அ) செடி 

ஆ) பயிர் 

இ) மரம்

ஈ) நாற்று 

[விடை : ஈ. நாற்று] 


2. வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை ---------- செய்வர்.

அ) அறுவடை 

ஆ) உழவு 

இ) நடவு 

ஈ) விற்பனை 

[விடை : அ. அறுவடை] 


3. “தேர்ந்தெடுத்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------- 

அ) தேர் + எடுத்து

ஆ) தேர்ந்து + தெடுத்து 

இ) தேர்ந்தது + அடுத்து

ஈ) தேர்ந்து + எடுத்து

[விடை : ஈ. தேர்ந்து + எடுத்து] 


4. ‘ஓடை + எல்லாம்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் --------

அ) ஓடைஎல்லாம்

ஆ) ஓடையெல்லாம் 

இ) ஓட்டையெல்லாம்

ஈ) ஓடெல்லாம்

[விடை : ஆ. ஓடையெல்லாம்]


பொருத்துக.

வினா 

1. நாற்று - பறித்தல்

2. நீர் - அறுத்தல்

3. கதிர் - நடுதல் 

4. களை - பாய்ச்சுதல்

விடை 

1. நாற்று - நடுதல்

2. நீர் - பாய்ச்சுதல்

3. கதிர் - அறுத்தல்

3. களை - பறித்தல்


வயலும் வாழ்வும் பாடலில் உள்ள மோனை, எதுகைச் சொற்களை எழுதுக. 

மோனைச் சொற்கள்

(முதல் எழுத்து ஒரே மாதிரியாக வருவது)

ஓடை - ஓடியோடி

மடமடன்னு - மண்குளிரத் 

நாத்தெல்லம் – நாலுநாலா

மணிபோலப் – மனதையெல்லாம்

சும்மாடும் - சுறுசுறுப்பும்

எதுகைச் சொற்கள் 

(இரண்டாவது எழுத்து ஒரே மாதிரியாக வருவது) 

சாலுசாலாத் - நாலுநாலா 

ஒண்ணரைக் குழி - மண்குளிர - நண்டும் 

சேத்துக்குள்ளே - நாத்தெல்லாம் 

கிழக்கத்தி - கழலுதையா 


பேச்சு வழக்குச் சொற்களை எழுத்து வழக்கில் எழுதுக. 

(எ.கா.) போயி - போய் 

பிடிக்கிறாங்க - பிடிக்கிறார்கள் 

வளருது - வளர்கிறது 

இறங்குறாங்க - இறங்குகிறார்கள் 

வாரான் - வரமாட்டான் 


குறுவினா 

1. உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்?

நாற்றுப் பறிக்கும் போது உழவர்கள் வயல் வரப்பில் உள்ள நண்டுகளைப் பிடித்தனர். 

2. நெற்கதிரிலிருந்து நெல்மணியை எவ்வாறு பிரிப்பர்?

கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்து நெற்கதிரிலிருந்து நெல்மணியைப் பிரிப்பர். இதற்கு போரடித்தல் என்று பெயர். 


சிறுவினா 

1. உழவுத்தொழிலின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி எழுதுக.

ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர். நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே நீர்பாய்ச்சினர். நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன. பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன. அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர். அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர். கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர். மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.


சிந்தனை வினா 

உழவுத்தொழிலில் காலந்தோறும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றி எழுதுக.

ஆற்றங்கரையில் நாகரிகம் உருவாகக் காரணமானது உழவுத்தொழில். விதைகளை விதைப்பதும், அவற்றுக்கு நீர்பாய்ச்சி வளர்ப்பது மட்டுமே பழங்காலத்தில் நடைபெற்றது. பின்னர், மனிதன் தன் சுய அறிவால் உழவுத்தொழிலுக்கு உதவியாக மாடுகளைப் பயன்படுத்தி இயற்கை எருக்களைக் கொண்டு பயிரிட்டான். பின்னர் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, உழுகருவிகளையும் விதைத்தல் கருவிகளையும், பூச்சிக்கொல்லி, செயற்கை உரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்கினான்.


கற்பவை கற்றபின்


1. வேளாண்மை சார்ந்த கருவிகளின் பெயர்களை எழுதி வருக.

ஏர், மண்வெட்டி, உழவு இயந்திரம், விதைக்கலப்பை, களைவெட்டும் இயந்திரம், நீர் பாசன இயந்திரம், ஊசலாடும் கூடை, வேளாண் வானூர்தி, தாள்க்கத்தி, கதிரடி இயந்திரம், களம், படல், உமி நீக்கி, இணை அறுவடை இயந்திரம்.


7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம்