Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | நினைவில் கொள்க

காற்று | பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க | 6th Science : Term 2 Unit 4 : Air

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 4 : காற்று

நினைவில் கொள்க

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 4 : காற்று : நினைவில் கொள்க

நினைவில் கொள்க

காற்று நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் இருக்கின்றது.

நமது பூமியைச் சுற்றி ஒரு பெரிய உறை போலக் காணப்படும் காற்று, வளிமண்டலம் என்றழைக்கப்படுகிறது.

ஆக்சிஜன் முன்னிலையில் ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது, ஒளியையும், வெப்பத்தையும், வெளிப்படுத்தும் நிகழ்வு எரிதல் எனப்படும்.

தாவரங்களின் ஒளிச்சேர்க்கையின் பொழுது வெளியாகும் ஆக்சிஜனை விலங்குகள் தங்கள் சுவாசத்திற்குப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதை பிரிஸ்ட்லியின் சோதனை மூலம் நாம் அறியலாம்.

இன்ஜென்ஹவுஸ் சோதனையின் மூலம் ஒளிச்சேர்க்கையின் பொழுது ஆக்சிஜனை வெளியிட சூரிய ஒளி தேவைப்படுகிறது என்பதை அறியலாம்.

காற்றில் நைட்ரஜன் 78%, ஆக்சிஜன் 21%, கார்பன்-டை-ஆக்சைடு 1%, நீராவி, மந்த வாயுக்கள் மற்றும் சிறு தூசுப்பொருட்கள் கலந்துள்ளன.

காற்றின் இயைபு இடத்திற்கு இடம் மற்றும் பருவத்திற்குப் பருவம் மாறுபடுகிறது.

தாவரங்களில்,


விலங்குகளில்,


நீர்வாழ் தாவரங்களும் சுவாசத்திற்கு நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனைப் பயன்படுத்துகின்றன.

பூமியை நேரடியாகத் தாக்கக்கூடிய தீங்கு விளைவிக்கக்கூடிய கதிர் வீச்சுகளை வளிமண்டலத்திலுள்ள ஓசோன் படலம் தடுத்துப் பாதுகாக்கிறது.


இணையச்செயல்பாடு

ஒளிச்சேர்க்கை

தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது சூரிய ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றுகையில் அதன் அணு நிலையை அறிவோமா!


உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி uminating Photosynthesis' பக்கத்திற்குச் செல்க.

படி 2: செயல்பாட்டின் மேல்பக்கத்தில் 3 பொத்தான்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் 'The Cycle' என்பதைச் சொடுக்கினால் திரை விலகும். தாவரத்தையும் தண்ணீர்க்குடுவையையும் தேர்ந்தெடுக்கவும்.

படி:3: 'Atomic Shuffla' என்பதைச் சொடுக்கி, ஒளிச்சேர்க்கையின் போது இருக்கும் அணு நிலையைத் தெரிந்து கொள்க.

படி 4: செயல்பாட்டை மீண்டும் செய்ய 'Replay' என்பதையும் அடுத்த செயல்பாட்டிற்கு 'Next' என்பதையும் சொடுக்கவும்


உரலி:

http://www.bbc.co.uk/schools/scienceclips/ages/10_11/rev_irrev_changes_ fs.shtml

*படங்கள் அடையாளத்திற்காக மட்டுமே.

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 4 : காற்று