Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | நினைவில் கொள்க

செல் | பருவம் 2 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க | 6th Science : Term 2 Unit 5 : The Cell

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 5 : செல்

நினைவில் கொள்க

உயிரினங்களின் அடிப்படை அலகு செல்களாகும். செல் இரு வகைப்படும். அவை புரோகேரியோட்டிக் செல்கள் மற்றும் யூகேரியோட்டிக் செல்களாகும்.

நினைவில் கொள்க

உயிரினங்களின் அடிப்படை அலகு செல்களாகும்.

செல் இரு வகைப்படும். அவை  புரோகேரியோட்டிக் செல்கள் மற்றும் யூகேரியோட்டிக் செல்களாகும்.

தாவர செல்லும், விலங்கு செல்லும் தங்களது செயல்களைச் செய்வதற்கு அதற்கே உரித்தான செல் நுண்ணுறுப்புகளைக் கொண்டுள்ளன.

விலங்கு செல்களைக்காட்டிலும் தாவர செல்கள் செல்சுவர் மற்றும் பசுங்கணிகம் ஆகியவற்றை கூடுதலாகப் பெற்றுள்ளன.


இணையச்செயல்பாடு

செல்

தாவர செல்லிற்கும் விலங்கு செல்லிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அவற்றின் செயல்பாட்டைக் கொண்டு அறிவோமா?


படி 1: கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி 'What do Cells do?' பக்கத்திற்குச் சென்றவுடன், Start என்பதைச் சொடுக்கி, செயல்பாட்டைத் தொடங்குக.

படி 2: Continue என்பதைச் சொடுக்கி செயல்பாட்டின் உள்ளே சென்றதும் செல்லின் பாகங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றைக் கொண்டு முழு செல் அமைப்பை உருவாக்க வேண்டும். பாகங்களின் மேல் சுட்டியை வைக்க, அவற்றின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம்.

படி 3: சுட்டியைக் கொண்டு பாகங்களை இழுத்து, செல்லின் பொருத்தமான இடத்தில் பொருத்துக.

படி 4: விலங்கு செல்லை முழுமையாகச் செய்து முடித்ததும், அதே செயல்முறையில் தாவர செல்லையும் அறிக.


உரலி:

http://sepuplhs.org/high/sgi/teachers/cell_sim.html

*படங்கள் அடையாளத்திற்காக மட்டுமே.

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 5 : செல்