Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | ஆங்கிலேயர் ஆதிக்கத்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள்

இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும் - ஆங்கிலேயர் ஆதிக்கத்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் | 11th Economics : Chapter 8 : Indian Economy Before and After Independence

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும்

ஆங்கிலேயர் ஆதிக்கத்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள்

ஆங்கில ஆதிக்கம் இந்தியத் தொழில்களை முடக்கியது.

ஆங்கிலேயர் ஆதிக்கத்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள்


1. ஆங்கில ஆதிக்கம் இந்தியத் தொழில்களை முடக்கியது


2. ஆங்கிலப் பொருளாதாரக் கொள்கைள் இந்தியாவின் மூலதன ஆக்கத்தைக் குன்றச் செய்து வளர்ச்சியைக் தடுத்து நிறுத்தியது.


3. நம்மிடமிருந்து சுரண்டப்பட்ட சொத்துக்கள் ஆங்கிலேயர்களின் மூலதன முன்னேற்றத்திற்கு நிதியுதவி செய்தன.


4. இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையை சார்ந்து இருந்தபோதும், இந்திய வேளாண்மைத் தொழில் தேக்கமடைந்து நலிவுற்றது


5. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கம் நவீன தொழில் துறை வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க எவ்விதப் பங்களிப்பும் வழங்காமல், இந்தியாவின் கைவினைத் தொழில் நிறுவனங்கள் சரிவடைவதற்குக் காரணமாக இருந்தது


6. ஆங்கில காலனி ஆதிக்கத்தால் தோட்டக்கலை, சுரங்கங்கள், சணல் ஆலைகள், வங்கிகள் மற்றும் கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளில் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முதலாளித்துவ நிறுவனங்களை ஊக்குவித்தது. அதை வெளிநாட்டவர்கள் நிர்வகித்தார்கள். இத்தகைய இலாப நோக்க நடவடிக்கைகளால் இந்திய வளங்கள் மேலும் சுரண்டப்பட்டன.

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும்