Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | SQL-ன் செயலாக்க திறன்கள்

வினவல் அமைப்பு மொழி - SQL-ன் செயலாக்க திறன்கள் | 12th Computer Science : Chapter 12 : Database concepts and MySql : Structured Query Language(SQL)

12 வது கணினி அறிவியல் : அலகு 12 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : வினவல் அமைப்பு மொழி

SQL-ன் செயலாக்க திறன்கள்

SQLன் பல்வேறு செயலாக்க திறன்கள்

SQL-ன் செயலாக்க திறன்கள்

SQLன் பல்வேறு செயலாக்க திறன்கள்:

1. தரவு வரையறை மொழி (DDL-Data Definiton Language): SQL DDL-அட்டவணைகளை (Relational) உறவுநிலை திட்டங்களை (கட்டமைப்பு) வரையறுத்தல், நீக்குதல், மாற்றியமைத்தல் மற்றும் குறிப்புகளை உருவாக்கத்திற்கு தேவையான கட்டளைகளை வழங்கும் ஒரு வரையறை மொழியாகும்.

2. தரவை கையாளுதல் மொழி (DML-DataManipulationLanguage): SQLDML தரவுத்தளங்களில் வரிசைகளை (tuples)-ஐ சேர்க்கவும், நீக்கவும், மாற்றவும் கட்டளைகளை உள்ளடக்கியது.

3. உட்பொதிக்கப்பட்ட தரவுக் கையாளுதல் மொழி (EDML-Embedded Data Manipulation Language): SQLன் உட்பொதிந்த வடிவம், உயர்நிலை நிரலாக்க மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது.

4. View வரையறை: SQL அட்டவணையை பார்வையிடுவதற்கான View கட்டளைகளைக் கொண்டுள்ளது.

5. அங்கீகாரம்: SQL உறவுநிலைக்கான அணுகல் உரிமைகளுக்கான கட்டளைகளையும், அட்டவணைகளை பார்வையிடுதலுக்கான கட்டளைகளையும் கொண்டுள்ளது.

6. ஒருமைப்பாடு: SQL நிபந்தனையை பயன்படுத்தி ஒருமைப்பாட்டை சரிபார்த்தலுக்கு படிவங்களை வழங்குகிறது.

7. பரிவர்த்தனை கட்டுப்பாடு: கோப்பு பரிமாற்றங்களுக்கான கட்டளைகள் மற்றும் பரிவர்த்தனை செயலாக்கத்தின் கட்டுப்பாட்டையும் SQL கொண்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா

SQL(Structured Query Language)-வினவல் அமைப்பு மொழி தரவுத்தளங்களை அணுகுதலுக்கான மொழி எனில், MySQL என்பது SQL Server, Oracle, Informix, Postgres, etc. போன்று  ஒரு தரவுதள மேலாண்மை அமைப்பாகும். MySQL ஒரு உறவுநிலை தரவுத்தள மேலாண்மை அமைப்பு (RDBMS). 

12 வது கணினி அறிவியல் : அலகு 12 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : வினவல் அமைப்பு மொழி