Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | உற்பத்திச் சார்பு

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு

உற்பத்திச் சார்பு

உற்பத்திச் செயல்பாடு என்பது ஒரு யூனிட் நேரத்திற்கு உற்பத்திச் சேவைகளின் உள்ளீடுகள் மற்றும் ஒரு யூனிட் நேரத்திற்கு உற்பத்தியின் வெளியீடுகளுக்கு இடையேயான உறவாகும்.

உற்பத்திச் சார்பு

பல்வகை உள்ளீடுகளின் அளவுகளுக்கும் வெளியீட்டு பொருள்களின் அளவுகளுக்கும் இடையே உள்ள தொடர்பே உற்பத்தி சார்பு ஆகும். 

ஜார்ஜ் ஜெ.ஸ்டிக்ளர், "உற்பத்தி சார்பு என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவில் உற்பத்தி பணிகளை மேற்கொள்ள தேவைப்படும் உள்ளீடுகளுக்கும் அக்குறிப்பிட்ட கால அளவில் கிடைக்கும் வெளியீடுகளுக்கும் உள்ள தொடர்பாகும்" என்கிறார்.



உற்பத்தி சார்பு 

Q = f {N, L, K, T} இதில் 

Q என்பது உற்பத்தியின் அளவு 

N = நிலம், 

L = உழைப்பு, 

K = மூலதனம் மற்றும் 

T= தொழில்நுட்பம். இவற்றிற்க்கு ஏற்றவாறு உற்பத்திச் சார்பு வேறுபடும்.

ஒரு நிறுவனத்திற்கு கிடைக்கக்கூடிய பல்வகை உள்ளீட்டு காரணிகளின் (N, L, K, T) அளவைப் பொறுத்து மொத்த உற்பத்தி (Q) அமையும் என உற்பத்திச் சார்பு குறிப்பிடுகிறது.


குறுகியகால மற்றும் நீண்டகால உற்பத்தி

நுண்ணிய பொருளாதாரத்தில் குறுகிய காலம் மற்றும் நீண்ட காலம் என்பதன் வேறுபாடு உற்பத்தியை நிர்ணயிக்கிற மாறா உள்ளீட்டு காரணிகளைப் பொறுத்து அமையும்.

சில உள்ளீடுகளின் அளவுகளை மாற்ற இயன்றும், சிலவற்றை மாற்ற இயலாமலும் ஒரு காலம் இருந்தால் அது குறுகிய காலம் என அழைக்கப்படுகிறது. நிறுவனங்கள் உட்புகுதலும் நிறுவனங்கள் வெளியேறுவதும் முடியாது என்பது குறுகிய காலத்தின் இயல்பாகும்.

நீண்டகாலம் என்பது புதிய நிறுவனங்கள் உட்புகவும் ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் வெளியேறவும் போதுமான காலமாகும்.


உற்பத்தி சார்பு இரு வகைப்படும்

குறுகிய கால உற்பத்திச் சார்பினை மாறும் விகித விளைவு விதியின் மூலம் அறியலாம். 

•  நீண்ட கால உற்பத்திச் சார்பினை மாறா விளைவு விதியின் மூலம் அறியலாம்.

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு