Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | உரைநடை: தமிழரின் கப்பற்கலை: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 2 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: தமிழரின் கப்பற்கலை: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 2 Chapter 1 : Ariviyal aakam

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம்

உரைநடை: தமிழரின் கப்பற்கலை: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம் : உரைநடை: தமிழரின் கப்பற்கலை: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 1 : உரைநடை உலகம் : தமிழரின் கப்பற்கலை)


பாடநூல் மதிப்பீட்டு வினா 


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. தமிழரின் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது -------

அ) கலம் 

ஆ) வங்கம் 

இ) நாவாய் 

ஈ) ஓடம் 

[விடை : ஈ. ஓடம்] 


2. தொல்காப்பியம் கடற்பயணத்தை ---------- வழக்கம் என்று கூறுகின்றது.

அ) நன்னீர் 

ஆ) தண்ணீர் 

இ) முந்நீர் 

ஈ) கண்ணீர் 

[விடை : இ. முந்நீர்] 


3. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி 

அ) சுக்கான் 

ஆ) நங்கூரம் 

இ) கண்டை 

ஈ) சமுக்கு 

[விடை : அ. சுக்கான்]


கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் --------- என அழைக்கப்படும். 

விடை : தொகுதி

2. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது --------

விடை : நங்கூரம்

3. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் --------- எனக்குறிக்கப்படும்.

விடை : கண்ணடை


பொருத்துக. 

வினா :

1. எரா - திசைகாட்டும் கருவி 

2. பருமல் - அடிமரம்

3. மீகாமன் - குறுக்கு மரம்

4. காந்த ஊசி - கப்பலைச் செலுத்துபவர் 

விடை:

1. எரா - அடிமரம் 

2. பருமல் - குறுக்கு மரம் 

3. மீகாமன் - கப்பலைச் செலுத்துபவர் 

4. காந்த ஊசி - திசைகாட்டும் கருவி


தொடர்களில் அமைத்து எழுது.

1. நீரோட்டம் - ஆழ்துளைக்கிணறு அமைக்கும் முன்னர் நீரோட்டம் பார்ப்பர். 

2. காற்றின் திசை - கப்பலைக் காற்றின் திசைக்கேற்ப செலுத்துவர். 

3. வானியல் அறிவு - தமிழர் வானியல் அறிவில் சிறந்து விளங்கினர். 

4. ஏற்றுமதி - பண்டைய காலத்தில் கடல்வணிகம் மூலம் ஏற்றுமதி நடைபெற்றது.


குறு வினா

1. தோணி என்னும் சொல்லின் பெயர்க்காரணத்தைக் கூறுக.

எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து தோண்டப்பட்டவை ‘தோணி' எனப்பட்டன. 


2. கப்பல் கட்டும்போது மரப்பலகைகளுக்கு இடையே தேங்காய் நார் (அ) பஞ்சு வைப்பதன் நோக்கம் என்ன?

மரங்களையும் பலகைகளையும் ஒன்றோடு ஒன்றாக இணைக்க இடையே தேங்காய் நார் (அல்லது) பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இருக்கி ஆணிகளை அறைந்தனர். 


3. கப்பல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக. 

எரா 

பருமல்

வங்கு 

கூம்பு 

பாய்மரம் 

சுக்கான்

நங்கூரம் 

- போன்றவை கப்பல் உறுப்புகள் ஆகும்.


சிறு வினா

1. சிறிய நீர்நிலைகளையும் கடல்களையும் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்களை எழுதுக. 

சிறிய நீர்நிலைகளைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள் : 

தோணி 

ஓடம் 

படகு 

புணை 

மிதவை 

தெப்பம் 

கடல்களைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள்: 

கலம் 

வங்கம் 

நாவாய்


2. பண்டைத் தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றிக் கூறுக. 

காற்றின் திசை அறிந்து கப்பல்கள் செலுத்தும் முறையைத் தமிழர் நன்கு அறிந்து வைத்திருந்தனர். 

கடலில் காற்று வீசும் திசை, நீரோட்டங்களின் திசை ஆகியவற்றைத் தமிழர்கள் நன்கு அறிந்து வைத்து, உரிய காலத்தில் உரிய திசையில் கப்பலைச் செலுத்தினர். 

திசைகாட்டும் கருவி மற்றும் விண்மீன்களின் நிலையை வைத்து திசையை அறிந்து கப்பலைச் செலுத்தினர். 

சிறந்த வானியல் அறிவை மாலுமிகள் பெற்றிருந்தனர். 

கோள்களின் நிலையை வைத்துப் புயல், மழை போன்றவை தோன்றும் காலங்களையும் கடல் நீர் பொங்கும் காலத்தையும் அறிந்து சரியான காலத்தில் கப்பலைச் செலுத்தினர்.


3. கப்பல் பாதுகாப்பானதாக அமையத் தமிழர்கள் கையாண்ட வழிமுறைகள் யாவை? 

கப்பல் தண்ணீரிலேயே இருப்பவை என்பதால் தண்ணீரால் பாதிப்பு ஏற்படாத மரங்களையே பயன்படுத்தினர். 

நீர்மட்டவைப்பிற்கு வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல் மரங்களையும் பக்கங்களுக்குத் தேக்கு, வெண் தேக்கு மரங்களைப் பயன்படுத்தினர். 

சுழி உடைய மரங்களைத் தவிர்த்தனர். 

மரங்களையும் பலகைகளையும் ஒன்றோடு ஒன்றாக இணைக்க இடையே தேங்காய் நார் (அல்லது) பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இருக்கி ஆணிகளை அறைந்தனர்.

சுண்ணாம்பையும் சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர். இதனால் கப்பல் பழுதடையாமல் நீண்டகாலம் உழைத்தன. 

இரும்பு துருப்பிடிக்கும் என்பதால் மரஆணிகளைப் பயன்படுத்தினர்.


சிந்தனை வினா

1. இக்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளாதது ஏன் எனச் சிந்தித்து எழுதுக. 

கப்பலில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தால் நீண்டநாட்கள் பயணம் செய்யவேண்டும். அதனால் கால விரையம் ஏற்படும்.  

அதிவிரைவுக்குக் கடற்பயணம் பயன்படுவதில்லை . 

கடல் உயிரினங்கள் மற்றும் புயல் போன்றவை அச்சத்தை ஏற்படுத்தும். 

அதிகபொருட்செலவை ஏற்படுத்தும். 

- போன்ற காரணங்களால் இக்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளவில்லை.



கற்பவை கற்றபின்


1. பல்வகையான கப்பல்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு ஒன்று உருவாக்குக.




2. தரைவழிப்பயணம், கடல்வழிப்பயணம், வான்வழிப்பயணம் ஆகியவை குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக. 

ஆசிரியர் :

மாணாக்கர்களே! தரைவழிப்பயணம், கடல்வழிப்பயணம் , வான்வழிப்பயணம் ஆகியவை குறித்து இன்று கலந்துரையாடல் செய்யுங்கள். 

யாழினி : 

இன்றைய நிலையில் தரைவழிப்பயணம் மட்டுமே சிறந்தது. ஏனென்றால், செல்லவேண்டிய இடத்திற்கு ஊர்திகள் மூலம் விரைவாகச் செல்லலாம். எவ்விதக் கட்டுப்பாடுமின்றிச் செல்லலாம்.

அமுதன் : 

கடலின் அழகைக் கண்டு மகிழவும், கடல் வாழ் உயிரினங்களைப் பார்க்கவும், கடல் தீவுகளின் இயற்கைக் காட்சிகளை கண்டு மகிழவும் கடல்வழிப் பயணமே சிறந்தது. எனவே, நான் கடல்வழிப் பயணத்தை விரும்புகின்றேன்.

காவ்யா : 

தரை மற்றும் கப்பல் வழி பயணங்களைவிடச் சிறந்தது வான்வழிப்பயணம் ஆகும். பல நாட்கள் செல்ல வேண்டிய பயணத்தை ஒரு சில மணி நேரங்களிலேயே செல்லலாம். அதிவிரைவுக்கு ஏற்றது.

ஆசிரியர் : 

நன்று மாணவர்களே!


விடுகதை

31. நிலத்தில் முளைக்காத செடி, நிமிர்ந்து நிற்காத செடி. அது என்ன? தலைமுடி

32. அடி மலர்ந்தது நுனி மலராத பூ. அது என்ன? வாழைப்பூ

33. பந்திக்கு வரும் முந்தி, வெளியே வரும் பிந்தி. அது என்ன? இலை

34. கோணல் இருந்தாலும், குணம் மாறாது. அது என்ன? கரும்பு

35. அறைகள் அறநூறு. அத்தனையும் ஒரே அறைகள். அது என்ன? தேன்கூடு

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம்