Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | கட்டுருக்களின் நோக்கம்

கணினி அறிவியல் - கட்டுருக்களின் நோக்கம் | 11th Computer Science : Chapter 12 : Arrays and Structures

11வது கணினி அறிவியல் : அலகு 12 : அணிகள் மற்றும் கட்டுருக்கள்

கட்டுருக்களின் நோக்கம்

வெவ்வேறு வகையான தரவு இனங்களை கொண்ட பயனர்வரையறுக்கும் தரவினம் கட்டுரு எனப்படும்.

கட்டுருக்கள் அறிமுகம் 


வெவ்வேறு வகையான தரவு இனங்களை கொண்ட பயனர்வரையறுக்கும் தரவினம் கட்டுரு எனப்படும். இது பல்வேறு வகையான தரவு இனங்களுடன் கூடிய மாறிகளை ஒரே தொகுதிக்குள் ஒன்றிணைத்துள்ளது. 


கட்டுருக்களின் நோக்கம்


ஒரே மாதிரியான தரவு வகைகளை சார்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகள் தேவைப்படும் போது அவற்றைக் குறிக்க அணிகள் பயன்படுத்தப்படுகிறது. வெவ்வேறு தரவு வகை சார்ந்த உறுப்புகளாக இருந்தால் அணிகளை பயன்படுத்த இயலாது. ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளை பயன்படுத்தினால் அவை நினைவகத்தில் சேமிக்கப்படும் போது ஒன்றுக்கொன்று அருகாமையான இடங்களில் இருக்காது. இதனால் தேடும் போது தேடலுக்கான நேரம் அதிகரிக்கிறது. வெவ்வேறு தரவு வகையை சார்ந்த தரவு உறுப்புகளை ஒரே தொகுதியில் அறிவித்து, அவைகளுக்கு நினைவகத்தில் அருகருகே இடம் ஒதுக்க கட்டுரு உதவுகிறது. 



11வது கணினி அறிவியல் : அலகு 12 : அணிகள் மற்றும் கட்டுருக்கள்