உடல் நலமும் சுகாதாரமும் | முதல் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - மருந்துகளின் ராணி - பென்சிலின் , நினைவில் கொள்க | 7th Science : Term 1 Unit 6 : Health and Hygiene

நினைவில் கொள்க
❖ உடல் நலம் என்பது முழுமையான உடல், மன மற்றும் சமூக நலத்தைக் குறிப்பது மட்டுமின்றி, நோயற்ற நிலை அல்லது பலவீனமின்மையையும் குறிக்கிறது.
❖ நோயினை உருவாக்கும் கிருமிகளால் உருவாகி, நோய்த்தொற்றுடைய நபரிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆரோக்கியமான நபருக்குத் தொற்றக்கூடிய நோய்கள் தொற்று நோய்கள் எனப்படும்.
❖ நோய்க் கிருமிகளின் தொற்றுதல் இல்லாமல் தோன்றக்கூடிய, அதேவேளையில் பாதிக்கப்பட்டவரிடமிருந்து பிறருக்குப் பரவாத நோய்கள் தொற்றா நோய்கள் எனப்படும்.
❖ முதலுதவி என்பது மருத்துவ உதவி கிடைக்கும் முன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உடனடிச் சிகிச்சையாகும்.