தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்

வினா விடை

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

 

1. ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தாவரங்கள் ------------ என அழைக்கப்படுகின்றன

அ) விலங்கினங்கள்

ஆ) தாவர இனங்கள்

இ) உள்ளூர் இனம்

ஈ) அரிதானவை

விடை: இ) உள்ளூர் இனம்

 

2. காடு அழிப்பு என்பது -----------------------

அ) காடுகளை அழித்தல்

ஆ) தாவரங்களை வளர்ப்பது

இ) தாவரங்களைக் கவனிப்பது

ஈ) இவை எதுவுமில்லை.

விடை: அ) காடுகளை அழித்தல்

 

3. சிவப்பு தரவு புத்தகம் பட்டியலை வழங்குகிறது

அ) உள்ளூர் இனங்கள்

ஆ) அழிந்துபோன இனங்கள்

இ) இயற்கை இனங்கள்

ஈ) இவை எதுவுமில்லை

விடை: அ) உள்ளூர் இனங்கள்

 

4. உள்வாழிடப் பாதுகாப்பு என்பது உயிரினங்ளை

அ) ஓரிடத்திற்குள் பாதுகாத்தல்

ஆ) ஓரிடத்திற்கு வெளியே பாதுகாத்தல்

இ) இரண்டும்

ஈ) இவை எதுவுமில்லை

விடை: ஆ) ஓரிடத்திற்கு வெளியே பாதுகாத்தல்

 

5. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் ---------------- ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது

அ) 1986

ஆ) 1972

இ) 1973

ஈ) 1971

விடை : ஆ) 1972

 

II . கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. WWF  உலக வனவிலங்கு நிதி  ஐக் குறிக்கிறது.

2. ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் விலங்குகள் உள்ளூர் இனம் என அழைக்கப்படுகின்றன.

3. சிவப்பு தரவுப் புத்தகம்  IUCN ஆல் பராமரிக்கப்படுகிறது.

4 முதுமலை வனவிலங்கு சரணாலயம் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

5. மார்ச் 3 ஆம் TN நாள் உலக வனவிலங்கு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

 

III. பொருத்துக.

கிர் தேசியப் பூங்கா - மத்திய பிரதேசம்

சுந்தரபன்ஸ் தேசியப் பூங்கா - உத்தரகண்ட்

கார்பெட் தேசியப் பூங்கா - மேற்கு வங்கம்

கன்ஹா தேசியப் பூங்கா - குஜராத்

இந்திரா காந்தி தேசியப்பூங்கா  - தமிழ்நாடு

 

 

விடைகள்

கிர் தேசியப் பூங்கா - குஜராத்

சுந்தரபன்ஸ் தேசியப் பூங்கா - மேற்கு வங்கம்

கார்பெட் தேசியப் பூங்கா - தமிழ்நாடு

கன்ஹா தேசியப் பூங்கா - உத்தரகண்ட்

இந்திரா காந்தி தேசியப்பூங்கா  - மத்திய பிரதேசம்

 

IV. மிகச் சுருக்கமாக விடையளி.

 

1. புவி வெப்பமடைதல் என்றால் என்ன?

> பூமியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஆற்றல் வளிமண்டலத்தில் பிரதிபலிக்கிறது. இந்த ஆற்றலின் ஒரு பகுதி பூமியை மீண்டும் சூடாக வைத்திருக்க பசுமை இல்ல வாயுக்களால் பிரதிபலிக்கிறது மற்றும் ஒரு பகுதி மேலே செல்கிறது.

> ஆனால் வளிமண்டலத்தில் சேரும் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெப்ப ஆற்றலைப் உட்கவர்கின்றன. இது வெப்பநிலை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது புவி வெப்பமடைதல் என்று அழைக்கப்படுகிறது.

 

2. அழிந்து வரும் சிற்றினங்கள் என்றால் என்ன?

> காடுகள் அழிக்கப்படுவதால் பல ஆல்காக்கள், பூஞ்சைகள், பிரையோபைட்டுகள், பெர்ன்கள் மற்றும் ஜிம்னோஸ்பெர்ம்கள் மறைந்து வருகின்றன.

> மேலும் காணாமல் போகும் ஒவ்வொரு தாவரங்களையும் சார்ந்த பல வகையான விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள் அழிந்து போகின்றன. இதேபோல், அழிந்துப் போகும் விளிம்பில் உள்ள விலங்குகளின் பட்டியல் முடிவற்றது.

 

3. அழிந்துபோன உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

> பெங்கால் புலிகள் > ஆசிய சீட்டா

 

4. அழியும் தருவாயில் உள்ள விலங்குகளின் பெயர்களைக் கூறுக.

> பனிச்சிறுத்தை >  ஆசிய சிங்கம்

 

5. ICUN என்றால் என்ன?

> சிவப்பு தரவு புத்தகத்தை இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) பராமரிக்கிறது.

> இது இயற்கை பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டு துறையில் செயல்படும் ஒரு சர்வதேச அமைப்பாகும்.

 

V. சுருக்கமாக விடையளி.


1. உயிர்க்கோளக் காப்பகம் என்றால் என்ன?

> உயிர்க்கோளம் என்பது ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். மனிதர்களும் இந்த அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளனர்.

> இவை சுற்றுச்சூழல் அமைப்பு, சிற்றினங்கள் மற்றும் மரபணு வளங்களைப் பாதுகாக்கின்றன. இந்தப் பகுதிகள் முக்கியமாக பொருளாதார வளர்ச்சிக்காகவே அமைக்கப்பட்டுள்ளன.

 

2. திசு வளர்ப்பு என்றால் என்ன?

தீங்குயிரிகள் அழிக்கப்பட்ட, ஊட்டச்சத்து மிக்க ஊடகத்தில் தாவர செல்கள், திசுக்கள், உறுப்புகள், விதைகள் அல்லது பிற தாவரப் பாகங்களை வளர்க்கும் ஒரு நுட்பம் திசு வளர்ப்பு ஆகும்.

 

3. அழியும் தருவாயில் உள்ள இனங்கள் என்றால் என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

> காடழிப்பு, வாழ்விட இழப்பு, மனிதர்களின் குறுக்கீடு மற்றும் விலங்குகளை வேட்டையாடுவத போன்ற பல்வேறு காரணங்களால் பல இனங்கள் ஆபத்தில் உள்ளன. அவற்றில் சில மட்டும பூமியில் எஞ்சியுள்ளன. விரைவில் அவைகளும் அழிந்து போகக்கூடும்.

> பனிச்சிறுத்தை, வங்காள புலி, ஆசிய சிங்கம், ஊதா தவளை மற்றும் இந்திய ராட்சத அணில் ஆகியவை இந்தியாவில் ஆபத்தான நிலையிலுள்ள விலங்குகள்


4. சிவப்பு தரவு புத்தகத்தின் நன்மைகளை எழுதுக.

> இது ஒரு குறிப்பிட்ட இனத்தின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்ய உதவுகிறது.

> இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை கொண்டு உலக அளவிலுள்ள இனங்கள் மதிப்பீடு செய்ய பயன்படுத்தலாம்.

> உலகளவில் அழிந்துபோகும் ஒரு இனத்தின் அபாயத்தை இந்த புத்தகத்தின் உதவியுடன் மதிப்பிடலாம்.

> ஆபத்தான நிலையிலுள்ள இனங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை இது வழங்குகிறது

 

5. தமிழ்நாட்டில் உள்ள நான்கு வனவிலங்கு சரணாலயங்களைப் பட்டியலிடுக.

1. மேகமலை வனவிலங்கு சரணாலயம்

2. வண்டலூர் வனவிலங்கு சரணாலயம்

3. களக்காடு வனவிலங்கு சரணாலயம்

4. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

 

6. உயிர்வழிப் பெருக்கம் என்ற வார்த்தையால் நீங்கள் என்ன புரிந்துகொள்கிறீர்கள்?

> ஆற்றல் கொண்ட வேதிச்சேர்மம் இயற்கை சூழ்நிலைக் காரணிகளுக்கு அப்பாற்பட்டு, சுற்றுப்புறத்தில் உள்ள அளவைக்காட்டிலும் பன்மடங்கு பெருகி அவை உயிர்களுக்குள் சேர்வதே உயிர்வழிப் பெருக்கமாகும்.

> இவை பாதரசம், ஆர்சனிக் போன்ற கன உலோகங்கள் மற்றும் பாலிக்குளோரினேட் பைபீனைல்கள் மற்றும் டி.டி.டி போன்ற பூச்சிக் கொல்லிகளாக இருக்கலாம்.

> இந்த பொருட்களை கீழ்நிலை உயிரினங்கள் உணவாக உட்கொள்ளும் பொழுது இந்த பாதிப்பு தொடங்குகிறது.

> இந்த விலங்கை உயர்மட்ட விலங்குகள் உணவாக உட்கொள்ளும் பொழுது நச்சுத்தன்மை அந்த விலங்கினத்தையும் பாதிக்கிறது.

 

7. பிபிஆர் (PBR) என்றால் என்ன?

> மக்கள் பல்லுயிர் பன்முகத் தன்மை பதிவு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது கிராமத்தின் நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகை உள்ளிட்ட உள்நாட்டில் கிடைக்கக்கூடிய உயிர் வளங்கள் பற்றிய விரிவான உருவாக்கம் கொண்ட ஒரு ஆவணமாகும்.

> உயிர் வளங்கள் என்பது தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள், அதன் பாகங்கள் அவற்றின் மரபணு பொருள் மற்றும் சாத்தியமான பயன்பாட்டு மதிப்பைக் கொண்ட துணை தயாரிப்புகள் ஆகும்.

 

 

 

VI. விரிவாக விடையளி.

 

1. காடு அழிப்பு என்றால் என்ன? காடு அழிப்பிற்கான காரணங்கள் மற்றும் அவற்றின் விளைவுகளை விளக்குக.

மனிதனின் வெவ்வேறு பயன்பாடுகளுக்காக காடுகளை அழிப்பது காடழிப்பு என்று அழைக்கப்படுகிறது.

காடழிப்புக்கான காரணங்கள் :

காடழிப்பு இயற்கையால் ஏற்படலாம் அல்லது அது மனித நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம். தீ மற்றும் வெள்ளம் போன்றவை காடழிப்புக்கான இயற்கை காரணங்கள். காடழிப்புக்கு காரணமான மனித நடவடிக்கைகளான விவசாய விரிவாக்கம், கால்நடை வளர்ப்பு, சட்டவிரோத மரம் வெட்டுதல், சுரங்கம், எண்ணெய் பிரித்தெடுத்தல், அணை கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை அடங்கும்.

காடழிப்பின் விளைவுகள் :

i) இனங்கள் அழிவு : காடழிப்பு பல அற்புதமான தாவரங்கள் மற்றும் விலங்குகளை இழக்கச் செய்துவிட்டது மற்றும் பல அழிவின் விளிம்பில் உள்ளன.

ii) மண்ணரிப்பு : மரங்கள் வெட்டப்படும் போது, மண் அரிக்கப்பட்டு ஊட்டச்சத்துகள் நீக்கப்படும்.

iii) நீர் சுழற்சி : மரங்களை வெட்டும்போது வெளியாகும் நீராவியின் அளவு குறைகிறது. எனவே மழைப் பொழிவு குறைகிறது.

iv) வெள்ளம் : மரங்கள் வெட்டப்படும்போது, நீரின் ஓட்டம் சீர் குலைந்து சில பகுதிகளில் வெள்ளத்திற்கு வழிவகுக்கிறது.

v) உலக வெப்பமயமாதல் : காடழிப்பு மரங்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. எனவே கார்பன் டை ஆக்சைடு அளவு வளிமண்டலத்தில் குவிகிறது. கார்பன் டை ஆக்சைடானது நீராவி, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் ஓசோன் ஆகியவற்றுடன் பசுமை இல்ல வாயுக்களை உருவாக்குகிறது. இந்த வாயுக்கள் புவி வெப்பமடைதலுக்கு காரணமாகின்றன.

vi) வீட்டு நிலத்தை அழித்தல் : காடுகளை அழிப்பது பழங்குடியினரின் வாழ்க்கை முறையை பாதிக்கிறது.

 

2. உள்வாழிடப் பாதுகாப்பு மற்றும் வெளிவாழிடப் பாதுகாப்பின் நன்மைகளை விவாதிக்கவும்.

வாழ்விடத்திலிருந்து பாதுகாப்பதன் நன்மைகள் :

> இனங்கள் அவற்றின் வாழ்விடத்திற்கு ஏற்றவாறு வாழலாம்.

> இனங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளலாம்.

> இயற்கை வாழ்விடங்கள் பராமரிக்கப்படுகின்றன.

> இது குறைந்த செலவினத்துடன் நிர்வகிக்க எளிதானது.

> பழங்குடியின மக்களின் ஆர்வங்களும் பாதுகாக்கப்படுகின்றன.

வெளிப்புற பாதுகாப்பின் நன்மைகள் :

> இது உயிரினங்களின் வீழ்ச்சியைத் தடுக்கிறது.

> ஆபத்தான நிலையிலுள்ள விலங்குகளை இந்த வழிகளில் இனப்பெருக்கம் செய்யலாம்.

> அச்சுறுத்தப்பட்ட இனங்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு இயற்கை சூழலில் வெளியிடப்படுகின்றன.

> ஆராய்ச்சி மற்றும் அறிவியல் பணிகளை நடத்துவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

 

3. ப்ளூ கிராஸ் பற்றி சிறு குறிப்பு வரைக.

ப்ளூ கிராஸ் :

> ப்ளூ கிராஸ் என்பது யுனைடெட் கிங்டமில் பதிவு செய்யப்பட்ட விலங்கு நல தொண்டு ஆகும். இது 1897 இல் 'எங்கள் ஊமை நண்பர்கள் லீக்' என்று நிறுவப்பட்டது.

> இந்த தொண்டு நிறுவனத்தின் பார்வை என்னவென்றால், ஒவ்வொரு செல்லப்பிராணியும் மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

> தனியார் கால்நடை சிகிச்சையை பெற முடியாத செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு, தங்கள் பிராணிகளுக்கு தேவையான வசதிகளை பெற உதவுகிறது.

> மேலும் விலங்குகளின் உரிமைகளை பொதுமக்களுக்கு கற்பிக்கிறது.

> கேப்டன் வி.சுந்தரம் 1959 ஆம் ஆண்டில் சென்னையில் ஆசியாவின் மிகப்பெரிய விலங்கு நல அமைப்பான புளூ கிராஸ் ஆஃப் இந்தியாவை நிறுவினார்.

> மருத்துவமனைகள், தங்குமிடங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் விலங்குகளின் பிறப்புக் கட்டுப்பாடுகள் போன்ற அனைத்து வசதிகளுடன் சென்னை கிண்டியில் பிரதான அலுவலகம் அமைந்துள்ளது.

 

4. வன உயிரிகள் பாதுகாப்பின் வகைகளை விவரி

பாதுகாப்பு என்பது இரண்டு வகையாகும். அவை

i) வாழ்விட. பாதுகாப்பு (வாழ்விடத்திற்குள்)

ii) வெளிப்புற பாதுகாப்பு (வாழ்விடத்திற்கு வெளியே)

i) வாழ்விட பாதுகாப்பு.

> இயற்கை சுற்றுச்சூழலில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பதாகும்.

> தேசிய பூங்காக்கள், வன விலங்குகள் அல்லது பறவைகள் சரணாலயங்கள் மற்றும் உயிர்க்கோள இருப்புக்கள் போன்ற சில பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இயற்கை வாழ்விடங்களுடன் ஆபத்தான அழிவிலுள்ள உயிரினங்களை பராமரிப்பதன் மூலம் இது நிறைவேற்றப்படுகிறது.

> இந்தியாவில் சுமார் 73 தேசிய பூங்காக்கள், 416 சரணாலயங்கள் மற்றும் 12 உயிர்க்கோள இருப்புகள் உள்ளன.

நன்மைகள் :

> இனங்கள் அவற்றின் வாழ்விடத்திற்கு ஏற்றவாறு வாழலாம்

> இது குறைந்த செலவினத்துடன் நிர்வகிக்க எளிதானது.

ii) வெளிப்புற பாதுகாப்பு.

> இது உயிரினங்களை வாழ்விடங்களுக்கு வெளியே பாதுகாக்கும் வனவிலங்கு பாதுகாப்பு ஆகும்.

> உயிரியல் பூங்காக்கள் மற்றும் தாவர தோட்டங்களை நிறுவுதல், மரபணுக்கள் பாதுகாப்பு, நாற்று மற்றும் திசு வளர்ப்பு ஆகியவை இந்த முறையில் பின்பற்றப்படும் சில உத்திகள் ஆகும்.

அ) தாவரவியல் பூங்காக்கள்

ஆ) உயிரியல் பூங்கா

இ) திசு வளர்ப்பு

ஈ) விதை வங்கி

உ) க்ரையோ வங்கி

நன்மைகள் :

> இது உயிரினங்களின் வீழ்ச்சியைத் தடுக்கிறது. > ஆராய்ச்சி மற்றும் அறிவியல் பணிகளை நடத்துவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

 

VII. உயர் சிந்தனை வினாக்கள்.

 

1. இன்று டைனோசர்களைக் காண முடியுமா? இல்லையெனில்  அவை ஏன் காணப்படுவதில்லை?

> இந்த நூற்றாண்டில் டைனோசர்களை நம்மால் காண முடியாது.

> ஆனால் தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர்கள் அவற்றின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளனர்.

> இது இன்னும் சில சிற்றினங்கள் உயிரோடிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

> இவற்றில் சில பறவையினங்களாகக் காணப்படுகின்றன.

 

2. காடுகள் அழிப்பால் விலங்குகள் பாதிக்கப் படுகின்றனவா? எவ்வாறு?

ஆம் காடுகளை அழிப்பதினால் விலங்கினங்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன

> விலங்கினங்கள் அவற்றின் வாழிடங்களை இழக்கின்றன.

> காடுகளை அழிப்பதால் விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது.

> காடுகளை அழிப்பதால் பருவகாலங்களில் மாற்றம் ஏற்படுவதினால் விலங்குகள் கிராம மற்றும் நகர்புறங்களை நோக்கி இடம்பெயர ஆரம்பிக்கின்றன.

 

3 புலி மற்றும் புல்வாய் மான்களின் எண்ணிக்கை ஏன் குறைகிறது?

> அதிக அளவு வேட்டையாடுதல்

> காடுகளை அழித்தல்

> மனிதர்களின் குறுக்கீடு

> இயற்கை வாழிடங்கள் அழிக்கப்படுதல் போன்ற காரணங்களால் புலி மற்றும் கருப்பு பக் எண்ணிக்கை குறைகிறது.

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்