Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 10th Tamil : Chapter 1 : Amudha oottru

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று

கேள்விகள் மற்றும் பதில்கள்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று : கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 1 : அமுத ஊற்று : திறன் அறிவோம்



பாடநூல் வினாக்கள் - பலவுள் தெரிக.

1. மெத்த வணிகலன் - என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது.

() வணிகக் கப்பல்களும் ஐம்பெருங்காப்பியங்களும்

() பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

() ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

() வணிக கப்பல்களும் அணிகலன்களும்

[விடை: வணிகக் கப்பல்களும் ஐம்பெருங்காப்பியங்களும்]

 

2. ‘காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்" நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது சருகும் சண்டும்

() இலையும் சருகும்

() தோகையும் சண்டும்

() தாளும் ஓலையும்

() சருகும் சண்டும்

 

3. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் எவ்வாறு வரும்?

() எந் + தமிழ் + நா

() எந் + தமிழ் = நா

() எம் + தமிழ் + நா

() எந்தம் + தமிழ் + நா

[விடை: எம் + தமிழ் + நா]

 

4. ‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ - தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையலணையும் பெயரும் முறையே.

) பாடிய; கேட்டவர்

) பாடல்; பாடிய

) கேட்டவர்; பாடிய

) பாடல்; கேட்டவர்

[விடை: பாடல்; கேட்டவர்]

 

5. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை - ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை

() குல வகை

() மணிவகை

() கொழுந்து வகை

() இலைவகை

[விடை: () மணிவகை]


குறுவினா

 

1. "வேங்கை" என்பதை தொடர்மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக

• வேங்கை - வேங்கை என்பது மரத்தை குறிக்கும்.

இது தனிமொழி ஆகும்.

• வேம் + கை - "வேகுகின்ற கைஎனப் பொருள் படும்.

இது தொடர் மொழியாகும்.

 

2. "மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே" - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

சீவகசிந்தாமணி, வளையாபதி குண்டலகேசி.

 

3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடர் பிழைக்கான காரணத்தைக் கூறுக.

• சரியான தொடர்கள் :

ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

• பிழையான தொடர் :

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

• பிழைக்கான காரணம் :

வாழைக்குலை என்பது தாறு; வாழைத்தாற்றின் பகுதி சீப்பு; வாழைத்தாற்றில் பல சீப்புகள் உள்ளன என்று தான் கூற வேண்டும்.

 

2. 'உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண் வற்றாகும் கீழ்" - இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன் இலக்கணம் தருக.

இக்குறளில் இன்னிசை அளபெடை வந்துள்ளது.

செய்யுளின் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடையாகும்.

 

5. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

வெளியூர் சென்று வந்த பாவாணரிடம் அவரது நண்பர் பகலுணவும் இரா உணவும் எப்படி இருந்தது என்று கேட்டார். அதற்கு பாவாணர் பகலுணவு "பகல் உணவாகவும் இராவுணவு "இரா" உணவாகவும் இருந்தன என்றார்.

பகல் உணவு - பகலில் கிடைத்த உணவு என்றும் இரா உணவு - அனைவரும் உணவின்றி இரவைக் கழித்ததாகவும் நயம்படக் கூறினார்.

 

சிறுவினா

 

1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

1. செழுமை மிக்க தமிழ், எம் உயிர்.

2. சொல்லுதற்கு அரிய நின் பெருமைகளை என்னுடைய நா விரித்துரைக்கும்.

3. பழம் பெருமையும், தன்கெனத் தனிச்சிறப்பும், இலக்கிய வளமும் கொண்ட தமிழ்.

4. வியக்கத்தக்க நீண்ட நிலைத்த தன்மையும் வேற்று மொழியார் உரைத்த புகழுரையும் பற்றுணர்வும் கொண்டவை தமிழ் மொழி.

 

2. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.

இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

) கன்று - மாங்கன்று விற்பனைக்கு உள்ளது.

) பிள்ளை - தென்னம்பிள்ளை வாங்கி வந்தேன்

) நாற்று - வயலில் நாற்று நட்டினேன்

) பைங்கூழ் - நெல் பைங்கூழ் பசுமையாக உள்ளது.

 

3. அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாததுஇவை அனைத்தையும் நாம் அறிவோம். அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும்.

இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

• அறிதல், அறியாமை.

• தெரிதல், தெரியாமை.

• புரிதல், புரியாமை.

• பிறத்தல், பிறவாமை

 

4. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.

•  தமிழ் : இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது. முதல், இடை, கடை ஆகிய முச்சங்களால் வளர்க்கப்பட்டது.

• ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது. சங்கப்பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது

கடல் : முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது.

• வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது.

• மிகுதியான வணிகக்கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது. தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது.

 

நெடுவினா

 

1. மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.

தமிழ்த்தாய் வாழ்த்து


மனோன்மண்யம் சுந்தரனார்

1. பூமி என்று பெண் நீராலான கடலை ஆடையாகக் கொண்டு விளங்குகின்றாள் என்கிறார்.

2. அழகிய முகமாக பாரதக் கண்டம் திகழ்கிறது. முகத்திற்கு பிறைநிலவு போன்ற நெற்றியாக தக்காணபீடபூமி அமைந்துள்ளது.

3. நெற்றியில் நறுமணமிக்க பொட்டு வைத்தது போல் தமிழகம் உள்ளது. பொட்டின் மணம் எல்லோரையும் இன்புறச் செய்வது போல் எல்லாத் திசைகளிலும் புகழ் பெற்றவளாக தமிழ்த்தாய் இருக்கிறாள்.

4. உலகின் மூத்த மொழியாக இருந்தும் இன்றளவும் இளமையாகி இருக்கிறாள். தனிச்சிறப்பும் தமிழ் மொழியின் வளம் பெருகுகின்றதே தவிர குறையவில்லை. இத்தனைப் புகழுடைய தமிழே! தமிழாகிய பெண்ணே ! தாயே! உன்னை வாழ்த்துகிறேன்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

1.  கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்த அரசாண்ட மண்ணுலகப் பேரரசு என்கிறார்.

 2.  ஆழகாய் அமைந்த செந்தமிழ் பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனி, பாண்டிய மன்னனின் மகள் திருக்குறளின் பெருமைக் குரியவள்.

3. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, நிலைத்த சிலப்பதிகாரம், அழகிய மணிமேகலையாக புகழ் பெற்று விளங்குகிறாள்.

4. பழம் பெருமையும் தனக்கெனத் இலக்கிய வளமும் கொண்டது. வேற்று மொழியார் கூட தமிழைப்பற்றி உரைத்த புகழுரை பெரிய பற்றுணர்வை எழுப்புகின்றன என்று பாவலரேறு பாடுகிறார்.

 

2. தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக.

தமிழின் சொல்வளம்.

• இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேனும் தமிழ் மட்டும் அதில் தலை சிறந்ததாகும்.

ஒரு பொருட் பல சொல் வரிசைகள் தமிழைத் தவிர வேறு எந்தத் திராவிட மொழிகளின் அகராதிகளிலும் காணப்படவில்லை.

• "கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள" என்கிறார் திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் எழுதிய கால்டுவெல்.

புதிய சொல்லாக்கத்திற்கான தேவைகள்

• சொல்லாக்கத்தின் பயன்பாட்டு முறையைக் கொண்டு அமைகிறது.

• தமிழ் மொழியின் ஒலி, சொல், பொருள் அமைப்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன

• மக்கள் அறிவுடையவர்களாக உயர்வதற்கும், இலக்கிய மேன்மைக்கும் தேவை

• மரபு வழிப்பட்ட தமிழ் இலக்கணத்தில் மாற்றங்கள் தேவை. - மொழியின் வளர்ச்சிக்கு சொல்லாக்கம் தேவை.

• உயர்கல்வித்துறைக்கும், பாடநூல்களை எழுதுவதற்கும் சொல்லாக்கம் தேவை.

• தமிழின் பெருமையும் மொழியின் சிறப்பும் குறையாமல் இருக்க சொல்லாக்கம் தேவை

• சொல்லாக்கத்தினால் உலகின் பிற ஆய்வுச் சிந்தனைக்களைத் தமிழ்ப்படுத்தி எழுதும் போது பிற மொழியை அறியலாம்.

• மக்களிடையே ஆளுமையும், பரந்த மனப்பான்மையும் வளர சொல்லாக்கம் தேவை.

• பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்தால் தமிழின் இனிமை குறையாமல் இருக்க சொல்லாக்கம் தேவை.

• தமிழ் தனித்து இயங்கும் தன்மை மாறாமலிருக்க சொல்லாக்கம் மிகவும் அவசியமாகும்.

 

3. ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக

சூழல் - வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்கு தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்பு பற்றி உரையாடுதல்.

பங்குபெறுவோர் : குமரன், உறவினர் மகள் யாழினி

யாழினி  : வணக்கம் ஐயா!

குமரன் : வணக்கம் ; தாங்கள் எங்கள் வீட்டிற்கு வந்தது மிக்க மகிழ்ச்சி

யாழினி : உரையாடுதல் என்பது என்ன?

குமரன்  : நீயும் நானும் பேசினால் உரையாடல். அதையே எழுதினால் உரைநடை.

யாழினி : உரைநடை வளர்ச்சி பற்றிக் கூறுங்கள் ஐயா!

குமரன் : அற இலக்கியங்களாக காப்பியங்களாக சிற்றிலக்கியங்களாக, புதுக்கவிதைகளை உரை நடையில் வருகிறது.

யாழினி : தமிழ் மொழியின் உரைநடைச் சிறப்புப் பற்றி கூறுக

குமரன் : 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழில் உரைநடை நூல்கள் தோன்றியன. தொல்காப்பியர் காலம் தொட்டே உரைநடை பற்றிய குறிப்பு இருப்பதை அறிய முடிகிறது.

யாழினி : தமிழ் உரைநடையின் வேறு சிறப்புகளைக் கூறுங்கள் ஐயா!

குமரன் : உணர்ச்சிகளைக் காட்ட உவமை கொண்ட மொழி உரைநடையில் உவமையை விட உருவகமே உணர்வுகளைத் தூண்டி வெற்றி பெறுகின்றன.

யாழினி : உணர்ச்சியான உச்ச நிலை எது?

குமரன் : சொல்லையோ, கருத்தையோ அடுத்தடுத்து வைக்கும் முறை உணர்ச்சியின் உச்ச நிலை.

யாழினி  : சங்க இலகியங்கள் யாவை?

குமரன் : எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் ஆகும்.

யாழினி : ஆங்கிலத்தில் நான் பல நாவல்களைப் படித்துள்ளேன். தமிழிலும் இது போன்று உள்ளனவா?

குமரன் : ஆம்! தமிழில் அதை தொடர் கதை என்பார்கள். தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், கம்பராமாயணம் முதலியனவாகும்.

யாழினி: ஆங்கில மொழியைப் போல் தமிழ் மொழியும் சிறப்பு பெற்றுள்ளதுதானே!

குமரன் : ஆமாம் ! தமிழ் மூத்த மொழி, எல்லா மொழிகளுக்கும் தாயாக விளங்குகிறது. பிறமொழிக் கலப்பின்றி தனித்து இயங்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது.

யாழினி : மிக்க நன்றி, ஐயா தங்களிடம் மொழியின் சிறப்பு உரைநடையின் சிறப்பு ஆகியன பற்றி நன்கு அறிந்து கொண்டேன்.

குமரன் : வணக்கம்.

 

 

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று