Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | வெள்ளையனே வெளியேறு இயக்கம்

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் - வெள்ளையனே வெளியேறு இயக்கம் | 10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

1942 ஆகஸ்டு 8இல் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு காந்தியடிகள் “செய் அல்லது செத்துமடி” எனும் முழக்கத்தை வழங்கினார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

1942 ஆகஸ்டு 8இல் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு காந்தியடிகள் செய் அல்லது செத்துமடி எனும் முழக்கத்தை வழங்கினார். ஒட்டு மொத்த காங்கிரஸ் தலைவர்களும் ஒரே நாள் இரவில் கைது செய்யப்பட்டனர். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் காவலர்கள் உள்ளூர் தலைவர்களின் பெயர்ப் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்கள் ரயிலை விட்டு இறங்கியதும் கைது செய்ததை பம்பாயிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த கு. காமராஜர் கவனித்தார். காவல் துறையினரின் கண்களில் படாமல் அரக்கோணத்திலேயே இறங்கிவிட்டார். பின்னர் அவர் தலைமறைவாகி வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காக மக்களைத் திரட்டும் பணியை மேற்கொண்டார்.


தீராத மக்கள் இயக்கம்

இவ்வியக்கத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பங்கேற்றனர். பக்கிங்காம் மற்றும் கர்நாட்டிக் மில், சென்னை துறைமுகம், சென்னை மாநகராட்சி மற்றும் மின்சார டிராம் போக்குவரத்து போன்ற இடங்களில் பெருமளவிலான தொழிலாளர் போராட்டங்கள் நடைபெற்றன. பெரும் எண்ணிக்கையில் ஆண்களும் பெண்களும் இந்திய தேசிய இராணுவத்தில் (INA) சேர்ந்தனர். வெள்ளையனே வெளியேறு இயக்கம் இரக்கமற்ற முறையில் வன்முறை மூலம் ஒடுக்கப்பட்டது.

ராயல் இந்தியக் கப்பற்படைப் புரட்சியும், இங்கிலாந்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற தொழிலாளர் கட்சி அரசு தொடங்கிய பேச்சு வார்த்தைகளும் இந்திய விடுதலைக்கு வழிகோலின. சோகம் யாதெனில் நாடு இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிக்கப்பட்டதுதான். அது குறித்து எட்டாம் பாடத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்