தாவரவியல் : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் - மறுகூட்டிணைவு | 12th Botany : Chapter 3 : Chromosomal Basis of Inheritance
மறுகூட்டிணைவு (Recombination)
குறுக்கேற்றத்தின் விளைவாக உருவாகும் புதிய
பண்புகளைப் பெற்ற உயிரினங்களே மறுகூட்டிணைவிகள் என்று அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வில்
DNAவின் துண்டங்கள் உடைந்து மறுகூட்டிணைவு கொண்ட புதிய அல்லீல்கள் சேர்க்கை உருவாகின்றன.
இந்தச் செயல்முறை மறுகூட்டிணைவு என்று அழைக்கப்படுகிறது.
ஒரு கலப்பின் போது தோன்றும் மறுகூட்டிணைவு வழித்தோன்றல்களின் விழுக்காடு மறுகூட்டிணைவு நிகழ்விரைவு எனப்படுகிறது. மறுகூட்டிணைவு நிகழ்வரைவு (RF) (குறுக்கேற்ற நிகழ்விரைவு) கீழ்காணும் சூத்திரத்தினால் கணக்கிடப்படுகிறது. இணைப்பு வகை அமைவு பெற்ற அல்லீல்களிலிருந்து பெறப்பட்ட தரவினைப் பயன்படுத்தி மறுகூட்டிணைவு நிகழ்விரைவு கணக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது.