Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | சுவாசித்தல் : முக்கியமான கேள்விகள்

தாவரவியல் - சுவாசித்தல் : முக்கியமான கேள்விகள் | 11th Botany : Chapter 14 : Respiration

11 வது தாவரவியல் : அலகு 14 : சுவாசித்தல்

சுவாசித்தல் : முக்கியமான கேள்விகள்

மதிப்பீடு, பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள், 1 மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்யுங்கள், கேள்விக்கு பதிலளிக்கவும்
தாவர செயலியல்

சுவாசித்தல்

மதிப்பீடு

 

1. ஒரு மூலக்கூறு பைருவிக் அமிலம் முழுவதுமாக ஆக்ஸிஜனேற்றமடைந்து உருவாகும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை.

அ) 12

ஆ) 13

இ) 14

ஈ) 15

 

2. இரண்டு மூலக்கூறு சைட்டோசோலிக் NADH + H+ ஆக்சிஜனேற்றமடையும் போது தாவரங்களில் உருவாகும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை

அ) 3

ஆ) 4

இ) 6

ஈ) 8

 

3. கிளைக்காலைசிஸ் மற்றும் கிரப்ஸ் சுழற்சியினை இணைக்கும் இந்தச் சேர்மம்.

அ) சக்சினிக் அமிலம்

ஆ) பைருவிக் அமிலம்

இ) அசிட்டைல் CoA

ஈ) சிட்ரிக் அமிலம்4

 

4. கூற்று: ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரணம் மைட்டோகாண்ட்ரியாவின் எலக்ட்ரான் கடத்துச் சங்கிலியில் நடைபெறுகிறது

காரணம்: சக்சினைல் CoA பாஸ்பரிகரணமடைந்து சக்சினிக் அமிலமாக தளப்பொருள் பாஸ்பரிகரணத்தால் நடைபெறுகிறது.

அ) கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம்.

ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல காரணம்

இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு

 

5. கீழ்க்கண்டவற்றுள் கிரப்ஸ் சுழற்சியில் நடைபெறாத வினை யாது?

அ) 3 C லிருந்து 2 C க்கு ஃபாஸ்பேட் மாறுதல்

ஆ) ப்ரக்டோஸ் 1,6 பிஸ்ஃபாஸ்பேட் உடைந்து இரண்டு மூலக்கூறு 3C சேர்மங்களாக மாறுகிறது.

இ) தளப்பொருளிலிருந்து ஃபாஸ்பேட் நீக்கம்

ஈ) இவை அனைத்தும்.

 

6. EMP வழித்தடத்தில் பாஸ்பரிகரணம் மற்றும் ஃபாஸ்பேட் நீக்கம் ஆகிய வினைகளில் ஈடுபடும் நொதிகளை எழுதுக.

7. சதைப்பற்றுள்ள தாவரங்களில் சுவாச ஈவு மதிப்பு பூஜ்யம். ஏன்?

8. மைட்டோகாண்ட்ரியா உட்சவ்வில் நடைபெறும் வினைகளை விவரி.

9. குளுக்கோஸ் உடையும் மாற்றுவழிப் பாதையின் பெயர் என்ன? அதில் நடைபெறும் வினைகளை விவரி.

10. காற்று சுவாசித்தலின் போது ஒரு மூலக்கூறு சுக்ரோஸ் முழுவதுமாக ஆக்ஸிஜனேற்றமடைந்து உருவாகும் நிகர விளைபொருள்கள்களை தற்போதய பார்வையில் எவ்வாறு கணக்கிடுவாய்.





11 வது தாவரவியல் : அலகு 14 : சுவாசித்தல்