குடிமையியல் - சாலை பாதுகாப்பு | 9th Social Science : Civics: Road Safety

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : சாலை பாதுகாப்பு

சாலை பாதுகாப்பு

சாலை விபத்து என்பது திறந்த வெளி சாலையில் ஒரு வாகன விபத்தில் குறைந்தபட்சம் ஒரு நபர் காயமடைவதையோ அல்லது இறப்பதையோ குறிக்கும். கொலை தற்கொலை மற்றும் இயற்கை பேரிடர் போன்றவை சாலை விபத்தில் அடங்காது.

அலகு 6

சாலை பாதுகாப்பு


 

கற்றல் நோக்கங்கள்

நம் நாட்டில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைப் புரிந்துகொள்ளுதல்

சாலை விபத்துக்கான காரணங்களைத் தெரிந்துகொள்ளுதல்

சாலை பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுதல்

 

அறிமுகம்

சாலை விபத்து என்பது திறந்த வெளி சாலையில் ஒரு வாகன விபத்தில் குறைந்தபட்சம் ஒரு நபர் காயமடைவதையோ அல்லது இறப்பதையோ குறிக்கும். கொலை தற்கொலை மற்றும் இயற்கை பேரிடர் போன்றவை சாலை விபத்தில் அடங்காது.

சாலை விபத்துகள் காயத்தால் ஏற்படும் மரணங்களுக்கு முதன்மைக் காரணிகளாகும். இவை உலகளவில் ஏற்படும் உயிரிழப்புகளுக்குக்கான பத்தாவது முதன்மைக் காரணியாகும். ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் 12 மில்லியன் பேர் இறக்கிறார்கள் மற்றும் ஏறக்குறைய 50 மில்லியன் பேர் காயமடைகிறார்கள்.

உங்களுக்குத் தெரியுமா?

ஆண்டுக்கு 130,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புடன் இந்தியா உலகின் மிக மோசமான சாலை விபத்துகளைக் கொண்ட நாடாக உள்ளது


உங்களுக்குத் தெரியுமா?

உலகில் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் ஒரு குழந்தை விபத்தில் இறக்கிறது

 சாலை விபத்தில் ஏற்படும் மரணங்களுக்கு முக்கிய காரணங்கள்

1. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது (40%), அதிவேகம் (24%) வாகன எண்ணிக்கை அதிகரிப்பு (18%) சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மெத்தனம் (15%) மற்றும் தலைக்கவசம் மற்றும் இருக்கைப் பட்டையை குறைவாகப் பயன்படுத்துவது (5%).

 2. ஓட்டுநருக்கு ஏற்படும் கவனச்சிதைவு

3. சிவப்பு விளக்கு எரியும் போது சாலையைக் கடப்பது

 4. தவறான முறையில் பிற வாகனங்களை முந்திச் செல்வது.


 

சாலை விபத்துக்கான பல்வேறு காரணிகள்:

ஓட்டுனர்: அதிவேகம், கண்மூடித்தனமாக வாகனத்தை இயக்குதல், சாலைவிதிகளை மீறல், போக்குவரத்துக் குறியீடுகளைப் புரிந்துகொள்ளத் தவறுதல், களைப்பு மற்றும் மது அருந்துவது.

பாதசாரிகள்: கவனக்குறைவு கல்வியறிவின்மை , தவறான இடங்களில் சாலையைக் கடப்பது.

பயணிகள்: கரம் சிரம்புரம் நீட்டுவது ஓட்டுநரிடம் பேசுவது தவறான வழியில் வாகனத்தில் ஏறுவது இறங்குவது படியில் பயணம் செய்வது. ஒடுகிற வண்டியில் ஏறுவது.

 வாகனங்கள்: வாகனம் கட்டுப்பாட்டை இழப்பது டயர் வெடிப்பது, குறைவான வெளிச்சம், அதிக சுமை ஏற்றுவது.

 சாலையின் நிலை: குழிகள், சேதமடைந்த சாலை, ஊரக சாலையும் நெடுஞ்சாலையும் இணையும் இடத்தில் உள்ள அரிக்கப்பட்ட சாலை, சட்டத்துக்குப் புரம்பான வேகத்தடைகள்.

வானிலை: மூடுபனி, பனி, கனமழை, புயல், ஆலங்கட்டி மழை.


மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

1. எந்த வகை சாலைப் பயன்பாடு மிக அதிக நபர்கள் இறப்பதற்குக் காரணமாகிறது உங்களால் ஏதாவது மூன்று காரணங்களைக் குறிப்பிடமுடியுமா? இதைச்சார்ந்த சாலை விதிகள் என்ன என்பதைக் குறிப்பிடமுடியுமா?

2. பாதசாரிகள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்?

சாலை விபத்தின் நேரடி விளைவுகள்

மரணம், காயம் மற்றும் பொருட்சேதம் போன்றவை சாலை விபத்தின் நேரடியான விளைவுகள் ஆகும்.

விபத்தைத் தடுக்கும் முறைகள்

1. சாலை விபத்தைப் பற்றிய கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு

2. சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துதல்

3. தொழில்நுட்பம். வாகன வடிவமைப்பு மற்றும் சாலை கட்டமைப்பு.

உங்களுக்குத் தெரியுமா?

இருக்கைப் பட்டை பயன்படுத்துவதன் மூலம் சாலை விபத்தினால் ஏற்படும் இறப்பை 51% தடுக்கலாம்.

 

பாலினம் மற்றும் வயதுக் குழுவின் அடிப்பட டையில் உலகளவில் சாலை விபத்தில் உயிரிழந்தோர், 2002


மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

 1. எந்த வயதுக் குழுவைச் சார்ந்தோர் உலகளவில் சாலை விபத்தில் இறப்போரில் அதிகளவில் உள்ளனர்? ஏன்?

 2. சாலை விபத்தில் இறப்போரின் எண்ணிக்கையில் இருபாலாரிடையே காணப்படும் மிகப்பெரிய இடைவெளிக்குச் சில விளக்கம் தருக.

 

குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பை உறுதிசெய்யும் விதிகள்

குழந்தைகள் சாலை பாதுகாப்பு விதிகளைத் தெரிந்துகொள்வது இன்றியமையாதது எனினும் அவர்களின் எல்லைக்குமேல் தகவல்களைத் திணிக்கக்கூடாது. குழந்தைகளுக்கான சில அடிப்படை சாலை பாதுகாப்பு விதிகளைக் காண்போம்.

1. சாலை பாதுகாப்புக் குறிகளைத் தெரிந்துகொள்.

2. நில் கவனி செல்

3. கவனி - கேள்!

4. சாலையில் ஓடாதீர்

5. எப்போதும் சாலையோரத்தைப் பயன்படுத்துவீர்!

6. வாகனத்தின் வெளியே கையை நீட்டாதீர்

7. வளைவில் சாலையைக் கடக்காதீர்!

8. அவசரப் படாதீர்!

9. இடதுபுறம் செல்லவும்

10. பாதசாரிகள் கடக்கும் இடத்தில் சாலையைக் கடக்கவும்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : சாலை பாதுகாப்பு