Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | ஊரக நலம் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம்

இந்தியப் பொருளாதாரம் - ஊரக நலம் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் | 11th Economics : Chapter 10 : Rural Economics

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 10 : ஊரக பொருளாதாரம்

ஊரக நலம் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம்

சிறந்த வாழ்வினை வாழ்வதற்கு உடல்நலம் மிக முக்கியம்.

ஊரக நலம் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம்


சிறந்த வாழ்வினை வாழ்வதற்கு உடல்நலம் மிக முக்கியம். இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஏழை மக்கள் வாழ்வாதாரத்திற்காகவும், உடல் நலத்திற்காகவும் நம்பிக்கையற்றுப் போராடி தோற்று வருகின்றனர். இந்திய ஊரகப் பகுதி மக்கள் பல்வேறு தொற்று நோய்களான பெரியம்மை, காலரா, மலேரியா, டைபாய்டு, டெங்கு, சிக்கன்குன்யா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய மருத்துவ வசதியின்மை, அறியாமை மற்றும் ஏழ்மை நிலையே இதற்கு காரணம் ஆகும். தங்கள் மக்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் வழங்குதலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதலும் மற்றும் மக்களின் உடல்நலத்தை மேம்படுத்துதலுமே அரசின் முதன்மையான கடமையாகும் என்று இந்திய அரசியலமைப்பு தெளிவாக வலியுறுத்துகிறது

இந்த அரசியலமைப்பின் வழிகாட்டுதலை நிறைவேற்றுவதற்காக ஊட்டச்சத்தினை மேம்படுத்துவதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இவற்றில், இணை உணவு வழங்கும் திட்டங்களான மதிய உணவு திட்டம், செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக ஊட்டச்சத்து கல்வி, உணவில் அயோடின் உப்பினை சேர்ப்பதை வலியுறுத்தல் போன்றவை முக்கியமானவை ஆகும். இந்தியாவைவிட இலங்கை உடல் நலதரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது இந்தியாவை பொறுத்தவரையில் கேரளா மாநிலம் தமிழ்நாட்டை விட சிறப்பாக உள்ளது.


தேசிய ஊரக நல அமைப்பு

தேசிய ஊரக நல அமைப்பு (NRHM) 12, ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. நலிவடைந்த ஊரக மக்களுக்காக குறைந்த விலையில் எளிதில் பெறக்கூடிய தரமான ஆரோக்கிய வசதிகளை ஏற்படுத்தி தருவது இதன் நோக்கம். உடல் நலத்தை தீர்மானிக்கும் காரணிகளான குடிநீர், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து சமூக மற்றும் பாலின சமத்துவம் போன்றவற்றை அடைவதற்காக சிறப்பாக செயல்படும் சமூகநீதி பரவலாக்கப்பட, நல விநியோக முறையை ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் மிக முக்கியமான நோக்கமாகும்.

இனப்பெருக்கம், தாய்மைப்பேறு, சிசு மற்றும் குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினரின் (RMNCH+A) நலனுக்காக பல்வேறுபணிகைள NRHMமேற்கொள்கிறது. மகப்பேறு மற்றும் குழந்தை நலன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது.

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 10 : ஊரக பொருளாதாரம்