Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | இரண்டாம் நிலை வளர்ச்சி : முக்கியமான கேள்விகள்

தாவரவியல் - இரண்டாம் நிலை வளர்ச்சி : முக்கியமான கேள்விகள் | 11th Botany : Chapter 10 : Secondary Growth

11 வது தாவரவியல் : அலகு 10 : இரண்டாம் நிலை வளர்ச்சி

இரண்டாம் நிலை வளர்ச்சி : முக்கியமான கேள்விகள்

மதிப்பீடு, பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள், 1 மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்யுங்கள், கேள்விக்கு பதிலளிக்கவும்

தாவர உள்ளமைப்பியல்

இரண்டாம் நிலை வளர்ச்சி


மதிப்பீடு:

 

1. கீழ்கண்ட வாக்கியங்களைக் கருத்தில் கொள்க.

வசந்தகாலத்தில் கேம்பியம்

(i) குறைவான செயல்பாடு கொண்டது

(ii) அதிகப்படியான சைலக்கூறுகளை தோற்றுவிக்கின்றன

(iii) அகன்ற உள்வெளி கொண்ட சைலக்குழாய்களை உருவாக்குகிறது

அ) (i) - சரியானது ஆனால் (ii) & (iii) - சரியானவையல்ல

ஆ) (i) - சரியானதல்ல ஆனால் (ii) & (iii) - சரியானவை

இ) (i) & (ii) - சரியானவை ஆனால் (iii) - சரியானதல்ல

ஈ) (i) & (ii) - சரியானவையல்ல ஆனால் (iii) - சரியானது

 

2. வழக்கமாக ஒருவிதையிலை தாவரத்தில் சுற்றளவு அதிகரிப்பதில்லை. ஏனென்றால்

அ) செயல்படும் வாஸ்குலக் கேம்பியத்தை கொண்டுள்ளது

ஆ) செயல்படும் வாஸ்குலக் கேம்பியத்தை கொண்டிருப்பதில்லை

இ) கேம்பியத்தின் செயல்பாடு தடை செய்யப்படுகிறது

ஈ) அனைத்தும் சரியானவை

 

3. பட்டைத்துளை படத்தில் குறிப்பிட்டுள்ள பாகங்கள் அ,ஆ, இ, ஈ – யை கண்டறிக


 

i) (அ) ஃபெல்லம் (ஆ) நிரப்பிச்செல்கள் (இ) ஃபெல்லோடெர்ம் (ஈ) ஃபெல்லோஜென்

ii) (அ) நிரப்பிச்செல்கள் (ஆ) ஃபெல்லம் (இ) ஃபெல்லோஜென் (ஈ) ஃபெல்லோடெர் ம்

iii) (அ) ஃபெல்லோஜென் (ஆ)ஃபெல்லம் (இ) ஃபெல்லோடெர்ம் (ஈ) நிரப்பிச்செல்கள்

iv) (அ) ஃபெல்லோடெர் ம் (ஆ) ஃபெல்லம் (இ) நிரப்பிச்செல்கள் (ஈ) ஃபெல்லோஜென்

 

4. முதிர்ந்த தண்டின் மையப் பகுதியில் இரண்டாம் நிலை சைலமானது அடர் மற்றும் கடினமான அமைப்பைக் கொண்ட நீர் கடத்தாப் பகுதி

அ) அல்பர்னம்

ஆ) பாஸ்ட்

இ) கட்டை

ஈ) டியூரமென்

 

5. வழக்கமாகக் குப்பி தக்கை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

(அ) ஃபெல்லம்

(ஆ) ஃபெல்லோஜென்

(இ) சைலம்

(ஈ) வாஸ்குலக் கேம்பியம்

 

6. இருவிதையிலைத் தாவர தண்டின் ஒரே சீரான இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது முதல் நிலை சைலத்தின் நிலை என்ன?

அ) மையப் பகுதியில் நிலைத்து நிற்கிறது

ஆ) நசுக்கப்படும்

இ) நசுக்கப்படலாம் அல்லது நசுக்கப்படாமல் இருக்கலாம்

ஈ) முதல் நிலை ஃபுளோயத்தை சுற்றிக் காணலாம்

 

கூற்று மற்றும் காரணம்

7. வினாக்கள் இரண்டு வாக்கியங்களைக் கொண்டுள்ளது. இந்த வினாக்களுக்கு விடையளிக்கும் பொழுது கீழ்க்கண்ட நான்கு காரணங்களில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்

ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல

இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு

1) கூற்று - கட்டைத்தன்மையுடைய தண்டுகளில் ஆண்டுக்காண்டு வைரக்கட்டையின் அளவு அதிகரிக்கிறது

காரணம் - கேம்பிய வளையத்தின் செயல்பாடு தடையில்லாமல் தொடர்கிறது.

(அ) (ஆ) (இ) (ஈ)


2) கூற்று - இருவிதையிலை தாவர வேரில் இரண்டாம் நிலை வளர்ச்சியானது வாஸ்குலக் கேம்பியம், ஃபெல்லோஜெனால் நடைபெறுகிறது

காரணம் - வாஸ்குலக் கேம்பியம் முழுவதும் முதல் நிலை தோற்றமாகும்

(அ) (ஆ) (இ) (ஈ)


கீழ்கண்டவைகளுக்கு விடையளி

8. பலவட்ட கேம்பியத்தை எடுத்துக்காட்டுடன் விவரி.

9. தாவரவியலின் படி கட்டை என்பது என்ன?

10. காட்டில், மான் கொம்பினால் மரத்தின் பட்டை சேதப்படுத்தப்படும்பொழுது அவற்றைத் தாவரங்கள் எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது.

11. பைனஸ், மோரஸ் கட்டையை வேறுபடுத்துக.

12. எந்தப் பருவத்தில் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் வெசல்கள் பெரிதாக இருக்கும். ஏன்?

13. கட்டையின் மையப்பகுதி அடர்ந்த நிறத்துடன் காணப்படும். ஏன்?

14. தொடர்ந்து பகுப்படையும் திசு ஆக்குத்திசுவாகும். பக்க ஆக்குத்திசுவின் செயல்பாட்டை இதனுடன் தொடர்புபடுத்துக.

15. ஒரு மர வியாபாரி காட்டிலிருந்து இரண்டு மரத்துண்டுகளைக் கொண்டு வந்து அதற்கு (அ), (ஆ) எனப்பெயரிட்டார். ‘அ’ கட்டையின் வயது 50, ’ஆ’ கட்டையின் வயது 20 எனக் கொண்டால், இதில் எந்தக் கட்டை நீடித்து உழைக்கும்? ஏன்?

16. மரத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் 60 அடர் வளையங்களும், 60 அடர்வற்ற வளையங்களும் உள்ளன. அந்த மரத்தின் வயதைக் கணக்கிடுக.

17. ஒரு மரத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காணப்படும் போது மைய வளையங்கள், வளர்ச்சி வளையங்கள் எனப்படுகிறது. வளர்ச்சி வளையங்கள் எவ்வாறு உருவாகின்றன. அதன் முக்கியத்துவம் யாது?

18. தண்டில் வாஸ்குலக் கேம்பியத்திற்கு வெளியே காணப்படும் திசுக்கள் – விவரி.

19. நீ புதிதாக வீடு கட்ட, மரக்கடைக்குச் சென்று மரம் வாங்கும் பொழுது நேர்த்தியான கட்டையை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்?

20. கட்டையைப் பதப்படுத்தும் செயற்கை முறையை விளக்குக.

11 வது தாவரவியல் : அலகு 10 : இரண்டாம் நிலை வளர்ச்சி