Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: லாமி தேற்றத்தின் பயன்பாடு

11வது இயற்பியல் : அலகு 3 : இயக்க விதிகள்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: லாமி தேற்றத்தின் பயன்பாடு

இயற்பியல் : இயக்க விதிகள் : லாமி தேற்றத்தின் பயன்பாடு

லாமி தேற்றத்தின் பயன்பாடு 

எடுத்துக்காட்டு 3.14 

ஒத்த இரண்டு சங்கிலிகளால் செய்யப்பட்ட ஓய்வு நிலையில் உள்ள ஒரு ஊஞ்சல் ஒன்றில் குழந்தை ஒன்று அமர்ந்திருக்கிறது. அக்குழந்தையின் மீது செயல்படும் விசைகளைக் காண்க. மேலும் லாமியின் தேற்றத்தைப் பயன்படுத்தி சங்கிலியின் இழுவிசையைக் கணக்கிடுக.


தீர்வு: 

ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் குழந்தையை, நிறை ஒன்று நீட்சித்தன்மையற்ற மெல்லிய இரண்டு கயிறுகளால் கட்டித் தொங்கவிடப்பட்ட அமைப்பாகக் கருதலாம். குழந்தையின் மீது இரண்டு விசைகள் செயல்படுகின்றன. அவை 

(i)  எதிர்குறி y அச்சுத் திசையில் செயல்படும் கீழ்நோக்கிய புவியீர்ப்பு விசை (mg) 

(ii)  இரண்டு கயிறுகளின் வழியே செயல்படும் இழுவிசைகள் (T) 

இவ்விரண்டு விசைகளும் படத்தில் காட்டியுள்ளபடி ஒருதள மற்றும் ஒருமைய விசைகளாகும்.


இதிலிருந்து ஒவ்வொரு கயிற்றின் இழுவிசை (T) பின்வருமாறு காணப்படும் T = mg / 2cosθ

11வது இயற்பியல் : அலகு 3 : இயக்க விதிகள்