அறிமுகம் - ஒலி | 9th Science : Sound

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 8 : ஒலி

ஒலி

ஒலியானது ஒருவித ஆற்றலாகும். அது நமது செவியை அடையும்போது உணர்வை ஏற்படுத்கின்றது. சில ஒலிகள் செவிக்கு இனிமையாகவும், சில ஒலிகள் கேட்பதற்கு இனிமையற்றதாகவும் இருக்கின்றன. ஆனால் அனைத்து ஒலிகளும் பொருட்கள் அதிர் வடைவதாலேயே உண்டாகின்றன.

அலகு 8

ஒலி


 

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:

ஒலியின் பண்புகளைப் புரிந்து கொள்ளுதல்.

ஒலி பரவுவதற்கு ஊடகம் தேவை என்பதைத் தெரிந்து கொள்ளுதல்.

ஒலி அலைகள் நெட்டலைகள் என்பதைப் புரிந்து கொள்ளுதல்.

ஒலியின் பண்புகளை விளக்குதல்.

ஒலி எதிரொலிப்பு பற்றிய அறிவைப் பெறுதல்.

மீயொலி அலைகளையும் அவற்றின் பயன்களையும் புரிந்து கொள்ளுதல்.

 

அறிமுகம்

ஒலியானது ஒருவித ஆற்றலாகும். அது நமது செவியை அடையும்போது உணர்வை ஏற்படுத்கின்றது. சில ஒலிகள் செவிக்கு இனிமையாகவும், சில ஒலிகள் கேட்பதற்கு இனிமையற்றதாகவும் இருக்கின்றன. ஆனால் அனைத்து ஒலிகளும் பொருட்கள் அதிர் வடைவதாலேயே உண்டாகின்றன. இவ்வதிர்வுகள் ஒரு ஊடகத்தின் வழியே ஆற்றலாக பரவி நம் செவியை அடைகின்றன. மனிதனின் செவிகளால் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் நெடுக்கம் மற்றும் ஆற்றல் கொண்ட ஒலி அலைகளை மட்டுமே கேட்டுணர முடியும். ஒலியின் செறிவானது ஒரு குறிப்பிட்ட அளவைவிடக் குறைவாக இருந்தால் அவ்வொலியை நம் செவியால் கேட்க இயலாது. ஒலியின் சுரப்பண்பும் (quality) ஒவ்வொரு ஒலிக்கும் வெவ்வேறாக இருக்கும். இவை அனைத்திற்கும் காரணம் என்ன? ஒலியானது பல பண்புகளைப் பெற்றிருப்பதே இதற்கான காரணமாகும். இந்தப் பாடத்தில் ஒலி உண்டாதல், பரவுதல் மற்றும் அவற்றின் பல்வேறு பண்புகளைப் பற்றி நாம் கற்போம். மேலும் மீயொலி மற்றும் அதன் அன்றாட வாழ்வியல் பயன்களையும் அறிவோம்.


9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 8 : ஒலி