Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்திய அரசமைப்பின் மூல ஆதாரங்கள்

இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல் - இந்திய அரசமைப்பின் மூல ஆதாரங்கள் | 12th Political Science : Chapter 1 : Constitution of India

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : இந்திய அரசமைப்பு

இந்திய அரசமைப்பின் மூல ஆதாரங்கள்

இந்திய அரசமைப்பின் மூல ஆதாரங்கள் அவை பின்வருமாறு:

இந்திய அரசமைப்பின் மூல ஆதாரங்கள்

தொகுதி 1 - 9 டிசம்பர் முதல் 23 டிசம்பர் 1946 வரை

தொகுதி 2 - 20 ஜனவரி முதல் 25 ஜனவரி 1947 வரை

தொகுதி 3 - 28 ஏப்ரல் முதல் 2 மே 1947 வரை

தொகுதி 4 - 14 ஜூலை முதல் 31 ஜூலை 1947 வரை

தொகுதி 5 - 14 ஆகஸ்ட் முதல் 30 ஆகஸ்ட் 1947 வரை

தொகுதி 6 - 27 ஜனவரி 1948

தொகுதி 7 - 4 நவம்பர் 1948 முதல் 8 ஜனவரி 1949 வரை

தொகுதி 8 - 16 மே முதல் 16 ஜூன் 1949 வரை

தொகுதி 9 - 30 ஜூலை முதல் 18 செப்டம்பர் 1949 வரை 

தொகுதி 10 - 6 அக்டோபர் முதல் 17 அக்டோபர் 1949 வரை 

தொகுதி 11 - 14 நவம்பர் முதல் 26 நவம்பர் 1949 வரை 

  தொகுதி 12 - 24 ஜனவரி 1950




இந்திய அரசமைப்பின் மூல ஆதாரங்கள்

இந்திய அரசாங்கச் சட்டம், 1935 

கூட்டாட்சி விதிகள், ஆளுநர் பதவி, நீதித்துறை, பொதுத் தேர்வாணையங்கள், நெருக்கடிகால விதிகள், நிர்வாக விவரங்கள் ஆகியன இந்திய அரசாங்கச் சட்டம், 1935-லிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டன. அவை பின்வருமாறு:


பிரிட்டன்

நாடாளுமன்ற அரசு, ஒற்றைக் குடியுரிமை, சட்டத்தின் ஆட்சி ,நாடாளுமன்ற செயல்முறைகள். இடைக்கால தடையாணைகள்


அமெரிக்க அரசமைப்பு

அடிப்படை உரிமைகள், நீதி சீராய்வு, குடியரசுத்தலைவர் மீதான பதவிநீக்க தீர்மானம், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், குடியரசுத் துணைத்தலைவர் போன்றோரை பதவி நீக்கம் செய்யும் முறை


அயர்லாந்து

அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் 


கனடா

ஒரு வலுவான மத்திய அரசுடன் கூடிய கூட்டாட்சி, மத்திய அரசிடம் பொதுப் பட்டியல், மத்திய அரசால் மாநில ஆளுநர் நியமனம், உச்சநீதிமன்றத்தின் அறிவுரை அதிகார வரம்பு


ஆஸ்திரேலியா 

வணிகம், வர்த்தக சுதந்திரம், நாடாளுமன்றத்தின் ஈரவைகளின் |கூட்டுக்கூட்டம்


ஜெர்மனி வெய்மர் அரசமைப்பு

நெருக்கடிநிலை காலத்தில் அடிப்படை உரிமைகள் பறிப்பு


சோவியத் யூனியன்

அடிப்படைக் கடமைகள், முகப்புரையில் (சமூக, பொருளாதார, அரசியல்) நீதியின் மாண்புகள், அடிப்படைக் கடமைகள். (42வது திருத்தத்தில் உறுதிபடுத்தப்பட்டது.)


பிரான்சு

குடியரசு, முகப்புரையில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்


தென் ஆப்பிரிக்கா

அரசமைப்புத் திருத்தமுறை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு

(இறுதிபடுத்தப்பட்ட, திருத்தப்பட்ட வரைவு 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது).


12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : இந்திய அரசமைப்பு