Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | வெப்ப மூலங்கள்

வெப்பம் | பருவம் 2 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வெப்ப மூலங்கள் | 6th Science : Term 2 Unit 1 : Heat

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 1 : வெப்பம்

வெப்ப மூலங்கள்

வெப்ப மூலங்கள்: * சூரியன் *எரிதல் *உராய்தல் *மின்சாரம்

வெப்ப மூலங்கள்


சூரியன்


சூரியன் ஒளியைத் தருகிறது என நமக்குத் தெரியும். அது வெப்பத்தையும் தருகிறதா? சூரிய ஒளியில் சிறிது நேரம் நின்று விட்டு உனது தலையைத் தொட்டுப்பார். சூடாக உள்ளதல்லவா? ஆம், சூரியன் ஒளியோடு வெப்பத்தையும் தருகிறது. இதனால்தான், கோடை வெயிலில் வெற்றுக் கால்களுடன் சாலையில் நடப்பது கடினமாக உள்ளது.


எரிதல்

மரக்கட்டை, மண்ணெண்ணெய், நிலக்கரி, கரி, பெட்ரோல், எரிவாயு, எண்ணெய் போன்றவற்றை எரிப்பதனால் வெப்ப ஆற்றலைப் பெறலாம். உனது வீட்டில் உணவு சமைக்கத் தேவையான வெப்ப ஆற்றல் எதனை எரித்துப் பெறப்படுகிறது?


உராய்தல்

உனது இரு  உள்ளங்கைகளையும் ஒன்றுடன் ஒன்று சேர்த்து உரசவும். தற்போது உனது உள்ளங்கைகளைக் கன்னத்தில் வைத்துப்பார். எவ்வாறு உணர்கிறாய்? இருபரப்புகள் ஒன்றோடொன்று உராயும்பொழுது வெப்பம் வெளிப்படுகிறது. ஆதிகால மனிதன் இரு கற்களை ஒன்றோடொன்று நெருப்பை உருவாக்கினான்.


மின்சாரம்

மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியாகப் பாயும்பொழுது வெப்ப ஆற்றல் உருவாகிறது. நீர்சூடேற்றி, மின் இஸ்திரிப்பெட்டி, மின் வெப்பக்கலன், போன்றவை இந்தத் தத்துவத்தில்தான் இயங்குகின்றன.

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 1 : வெப்பம்