பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு - புள்ளியியல் | 6th Maths : Term 1 Unit 5 : Statistics

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல்

புள்ளியியல்

கற்றல் நோக்கங்கள் ● தரவுகளைச் சேகரித்தலின் தேவையை அறிதல். ● நேர்க்கோட்டுக் குறிகளைப் பயன்படுத்திச் சேகரித்த தரவுகளை முறைப்படுத்துதல். ● பட விளக்கப்படத்தில் அளவுத் திட்டத்தின் தேவையை அறிதல். ● பட விளக்கப்படங்களை வரைதல் மற்றும் விளக்குதல். ● பட்டை வரைபடங்களை வரைதல் மற்றும் விளக்குதல்.

இயல் 5

புள்ளியியல்



கற்றல் நோக்கங்கள்

தரவுகளைச் சேகரித்தலின் தேவையை அறிதல்.

நேர்க்கோட்டுக் குறிகளைப் பயன்படுத்திச் சேகரித்த தரவுகளை முறைப்படுத்துதல்.

பட விளக்கப்படத்தில் அளவுத் திட்டத்தின் தேவையை அறிதல்.

பட விளக்கப்படங்களை வரைதல் மற்றும் விளக்குதல்.

பட்டை வரைபடங்களை வரைதல் மற்றும் விளக்குதல்.


மீள்பார்வை

கீழேயுள்ள படத்தில் உள்ள பொருள்களை எண்ணிப் பின்வரும் அட்டவணையை நிறைவு செய்க.



அட்டவணையிலிருந்து பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

(i) படத்தில் உள்ள பொருள்களின் மொத்த எண்ணிக்கை 24.

(ii) சதுரங்கள் மற்றும் மட்டைகளின் எண்ணிக்கைகளின் வேறுபாடு  6 − 6 = 0 .

(iii) பந்துகள் மற்றும் மட்டைகளின் எண்ணிக்கைகளின் விகிதம் 8/6 = 4/3.

(iv) சம எண்ணிக்கையில் உள்ள பொருள்கள் எவை? மட்டை, சதுர அட்டை

(v) மட்டைகளின் எண்ணிக்கையை விடப் பந்துகளின் எண்ணிக்கை கூடுதலாக எவ்வளவு உள்ளன? 2


அறிமுகம்

பின்வரும் சூழ்நிலையைக் கருதுவோம்


ஒரு பள்ளித் தலைமை ஆசிரியர் (படம் 5.2 இல்) தனது மாணவர்களுக்கு வங்கி சேமிப்புக் கணக்குகள் தொடங்க விரும்பினார். இதற்காக மாணவர்களின் தரவுகள் அவருக்குத் தேவைப்பட்டன. மாணவர்களால் 'தரவுகள்' என்ற சொல்லின் பொருளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. விவரம் என்பது எதனைக் குறிக்கிறது? தரவு என்பது ஒரு குறிப்பிட்ட தகவல்களை சேகரிப்பதாகும். தரவு என்பது தகவல்களைச் சேகரிப்பது, அளவிடுவது மற்றும் பகுப்பது, பிறகு அவற்றைப் படமாகவோ அல்லது வரைபடமாகவோ காட்சிபடுத்துவது ஆகும். அவ்வாறெனில் ஒவ்வொருவராலும் கொடுக்கப்பட்ட செய்திகள் குடும்ப அட்டை (முகவரிச் சான்று), மாணவரின் பெயர், ஆதார் அடையாள அட்டை, பிறப்புச் சான்று (பிறந்த தேதிக்காக), தொடர்பு கொள்ளத் தொலைபேசி எண் போன்றவற்றைக் கொண்டவை எனத் தலைமை ஆசிரியர் விளக்கினார். இந்தத் தரவுகள் எதிர்காலப் பயன்பாட்டிற்காகப் பாதுகாக்கப்படுகின்றன.



எங்கும் கணிதம்அன்றாட வாழ்வில் புள்ளியியல்


மக்கள் தொகைக் கணக்கெடுப்பு


கடைசி 5 போட்டிகளில் ஒரு பந்து வீச்சாளரால் கைப்பற்றப்பட்ட விக்கெட்டுகள்

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல்