Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் - வரலாறு - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : History : Chapter 2 : The World between Two World Wars

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 2 : இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

சமூக அறிவியல : வரலாறு : இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் : பாடச்சுருக்கம்

இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

பாடச்சுருக்கம்


 முதல் உலகப்போர் முடிந்ததிலிருந்து காலனிய எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடையத் தொடங்கின.


 தோல்வியடைந்த நாடுகளுக்கு எதிராகப் பாரிஸ் அமைதி மாநாட்டில் எடுக்கப்பட்ட கடுமையான முடிவுகள், நடைபெற்றுக்கொண்டிருந்த ஆட்சிகளை நிலைகுலையச் செய்ததோடு அந்நாடுகளில் குறிப்பாக இத்தாலியிலும், ஜெர்மனியிலும் பாசிச்சக்திகள் எழுச்சி பெறுவதற்கான சூழலையும் உருவாக்கின.


 1929இல் அமெரிக்காவில் தோன்றியப் பொருளாதாரப் பெருமந்தம், பின்னர் உலகத்தின் அனைத்து முதலாளித்துவ நாடுகளையும் பாதித்து அரசியலிலும் சமூகத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தியது.


 இந்தியாவில் இரு போர்களுக்கு இடையிலான காலப்பகுதியில் காலனி நீக்கச் செயல்பாடு.


 மன்றோ கொள்கை லத்தீன் அமெரிக்காவில் ஐரோப்பிய சக்திகள் காலனிகள் ஏற்படுத்துவதைத் தடுத்து அதன்மூலம் அவை முன்னதாகவே இறையாண்மைத் தகுதியைப் பெறுவதை உறுதிப்படுத்தியது. பின்னர் இதையே லத்தின் அமெரிக்கர்கள் தங்கள் நாட்டு விவகாரங்களில் தலையிடவும் செல்வாதாரங்களைச் சுரண்டவும் அமெரிக்கா போட்ட வேடம் எனக் கருதினர்.


கலைச்சொற்கள்


ஒற்றுமை உணர்வு, பொதுக் காரியத்திற்கான ஆதரவு : Solidarity a bond of unity, support for a common cause


விலைவீழ்ச்சி, சரிவு : Slump a sudden severe or prolonged fall in the price


திவால், கடன் தீர்க்க முடியா நிலை : Bankruptcy insolvency, financial ruin


பணமதிப்புக் குறைதல் : Devaluation a decrease in the value of a country's currency


மிரட்டல், அச்சுறுத்தல் : Intimidation threat, the act of making fearful


வலுப்படுத்தினர் : Bolstered strengthened


மனத்தளர்ச்சி அடைதல், நம்பிக்கை இழத்தல் :  Demoralized having lost confidence or hope, disheartened


கெட்டிக்காரத்தனமாய் அல்லது சூழ்ச்சியாய் கையாளு : Manipulate control or influence a person or situation cleverly, unfairly to achieve a specific purpose


செல்லாதாக்கல், ரத்துசெய்தல் : Annulling declaring invalid or null and void

 

 

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 2 : இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்