Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

இரண்டாம் உலகப்போர் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : History : Chapter 3 : World War II

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 3 : இரண்டாம் உலகப்போர்

பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

சமூக அறிவியல : வரலாறு : இரண்டாம் உலகப்போர் : கலைச்சொற்கள்

வரலாறு :  இரண்டாம் உலகப்போர்

பாடச்சுருக்கம்


 இரண்டாம் உலகப்போர் 1939 முதல் 1945 வரை நடைபெற்றது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா பசிபிக் என ஏறத்தாழ உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இப்போர் நடைபெற்றது. தொடக்கத்தில் பிரிட்டன், பிரான்சு, பின்னர் சோவியத் யூனியன், அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியோரைக் கொண்ட நேசநாடுகள் அணி அச்சு நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகியவற்றிற்கு எதிராகப் போரிட்டன.


தொடக்கத்தில் ஐரோப்பாவில் ஜெர்மனியும் கிழக்குப்பகுதிகளில் ஜப்பானும் பல வெற்றிகளைப் பெற்றன. இருந்தபோதிலும் அமெரிக்கா தனது மாபெரும் வளங்களுடன் நேசநாடுகள் அணியில் சேர்ந்த பின்னர் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் பல நீண்ட சண்டைக்குப் பின்னர் தோற்கடிக்கப்பட்டன.


போருக்குப் பிந்தைய உலகம், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய சோவியத் சோசலிஸக் குடியரசுகள் என்றழைக்கப்பட்ட இரு வல்லரசுகளின் எழுச்சியைக் கண்ணுற்றது. இரு நாடுகளும் ஆயுதப்பெருக்கக் குறிப்பாக, அணு ஆயுதப் பெருக்கப் போட்டிகளில் ஈடுபட்டன.


கலைச்சொற்கள்


பேரழிவு : Devastation / havoc total destruction


போர் நாட்டம் : Belligerent one eager to fight / aggressive 


மீண்டெழுகிற : Resurgent rising again


இழப்பீடுகள் : Reparations compensation exacted from a defeated nation by the victors


போர்த்தளவாடங்கள் : Armaments weapons


கட்டாய இராணுவ சேவைக்கு அழைக்கப்பட்ட : Conscripted compulsory military service


வதைத்துக் கொல்லுதல் : Slaughter kill a large number of people indiscriminately


பல்கிப் பெருகுதல் : Proliferation a rapid increase


குடிசைத்தொகுதி : Ghettos slums


மறுப்பாணை / எதிர்வாக்கு : Veto a vote that blocks a decision / negative vote


வரம்பு / எல்லை : Ambit range


மீளாத்துயரம் : Scourge eternal suffering


கடுமையான : Stringent tough



10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 3 : இரண்டாம் உலகப்போர்