Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பாடச் சுருக்கம் - தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

வரலாறு - பாடச் சுருக்கம் - தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் | 11th History : Chapter 5 : Evolution of Society in South India

11 வது வகுப்பு : அலகு 5 : தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

பாடச் சுருக்கம் - தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

தமிழை எழுதுவதற்காக எழுத்துமுறை பயன்பாட்டில் இருந்தமை, மேலும் கல்வெட்டுகள், இலக்கியங்கள் ஆகிய எழுத்துவடிவச் சான்றுகள் கிடைப்பதால், தென் இந்தியாவின் வரலாற்றை பொ.ஆ.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தெளிவாக அறிய முடிகிறது.

பாடச் சுருக்கம்

தமிழை எழுதுவதற்காக எழுத்துமுறை பயன்பாட்டில் இருந்தமை, மேலும் கல்வெட்டுகள், இலக்கியங்கள் ஆகிய எழுத்துவடிவச் சான்றுகள் கிடைப்பதால், தென் இந்தியாவின் வரலாற்றை பொ..மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தெளிவாக அறிய முடிகிறது.

இரும்புக் காலத்தில் தலைமை உரிமை கொண்டவர்களாக இருந்த சேர, சோழ, பாண்டியர் சங்க காலத்தில் வேந்தர் என்னும் பட்டப் பெயரோடு அரசர்களாயினர்.

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரப் பகுதிகளை ஆட்சி செய்த சாதவாகனர்கள் மூவேந்தர்களின் சமகாலத்தவர்.

தென்னிந்தியாவில் பௌத்தமும் சமணமும் வலுவான நிலையிலிருந்தன. ஆளும் வர்க்கத்தினரிடையே வேதக் கருத்துக்கள் செல்வாக்கு செலுத்தத் தொடங்கின.

இந்தியப் பெருங்கடல் பகுதிகளோடும் ரோமானிய உலகத்தோடும் கடல் சார் வணிகம் வளர்ந்தது.

முன்பிருந்ததைப் போலவே களப்பிரர் காலத்திலும் பண்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றது.

11 வது வகுப்பு : அலகு 5 : தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்