Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | மீள்பார்வை - பண்டைய நாகரிகங்கள்

வரலாறு - மீள்பார்வை - பண்டைய நாகரிகங்கள் | 9th Social Science : History : Ancient Civilisations

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பண்டைய நாகரிகங்கள்

மீள்பார்வை - பண்டைய நாகரிகங்கள்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பண்டைய நாகரிகங்கள்

மீள்பார்வை

புதிய கற்காலத்திற்குப்பின், வெண்கலக் காலத்தில் நாகரிகங்கள் தோன்றின.

திட்டமிட்ட நகரங்களில் குடியேறிய மக்கள், வணிகம், பரிமாற்றம் ஆகியவற்றில் ஈடுபடத் தொடங்கினர். அறிவியல், தொழிநுட்பம் வளர்ந்தது.

நாகரிகம் என்பது ஒப்புநோக்கில் மேம்பட்ட சமூக அமைப்பு ஆகும்.

எகிப்து நாகரிகம் கட்டடக் கலைக்குப் புகழ்பெற்ற பிரமிடுகள் அவர்களது முக்கியப் பங்களிப்பு ஆகும்.

நாட்காட்டி உருவாக்கம், வானியல் அறிவியல் வளர்ச்சி ஆகிய துறைகளில் மெசபடோமியா நாகரிகம் பங்களிப்பு செய்துள்ளது.

தத்துவம், கண்டுபிடிப்புகளில் சீன நாகரிகம் பங்காற்றியுள்ளது.

சிந்துவெளி நாகரிகம் புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திப் பல வகையான நுகர் பண்டங்களைத் தயாரித்தனர். அது மேற்காசியாவுடன் பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டிருந்தது.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பண்டைய நாகரிகங்கள்