Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | நினைவில் கொள்க

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : இயக்கம்

நினைவில் கொள்க

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : இயக்கம் : நினைவில் கொள்க

நினைவில் கொள்க

இயக்கம் என்பது நிலைமாற்றம் ஆகும். அதை ஒரு பொருள் கடந்த தூரம் அல்லது இடப்பெயர்ச்சியினால் வரையறுக்கலாம்.

திசைவேகத்தைப் பொறுத்து ஒரு பொருளின் இயக்கம் சீரானதாகவோ சீரற்றதாகவோ இருக்கும்.

ஒரு பொருளின் வேகம் என்பது தொலைவு மாறுபாட்டு வீதம் ஆகும் பொருளின் திசைவேகம் என்பது இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வீதம் ஆகும்.

ஒரு பொருளின் முடுக்கம் என்பது அப்பொருளின் திசைவேக மாறுபாட்டு வீதம் ஆகும்.

 சீரான முடுக்கத்தில் செல்லும் ஒரு பொருளின் இயக்கத்தை கீழ்க்கண்ட மூன்று சமன்பாடுகளைக் கொண்டு விளக்கலாம். அவை : v = u + at; s = ut + 1/2 at2; v2 = u2 + 2as

 தடையின்றி தானே கீழே விழும் பொருளின் முடுக்கத்தைக் குறிப்பிடும் பொழுது 'a' க்கு பதிலாக g’ பயன்படுத்தப்படுகிறது.

 சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்ளும் ஒரு பொருள் மையநோக்கு விசையைப் பெறுகிறது.

 மைய விலக்கு விசை, மையநோக்கு விசைக்கு எதிர் திசையில் செயல்படும்.

 

A-Z சொல்லடைவு

இயக்கம் : பொருளின் நிலையில் ஏற்படும் மாற்றம்.

கடந்த தொலைவு : ஒரு பொருள் தனது இயக்கத்தில் கடந்து சென்ற உண்மையான தொலைவு.

இடப்பெயர்ச்சி : ஒரு பொருள் இயங்கும் திசையில் துவக்கப்புள்ளிக்கும் முடிவுப் புள்ளிக்கும் இடைப்பட்ட மிகக் குறைந்த தொலைவு.

வேகம் : காலத்தைப் பொறுத்து ஒரு பொருள் இயங்கும் வீதம் (கடந்த தொலைவு / காலம்).

திசைவேகம் : காலத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட திசையில் பொருள் இயங்கும் விதம்.

முடுக்கம் : இயங்கும் பொருளின் திசைவேகத்தின் எண் மதிப்பு () திசையில் ஏற்படும் மாற்றம்.

வட்டப்பாதை இயக்கம் : ஒரு வட்டத்தின் சுற்றளவு அல்லது வட்டப்பாதையில் நடைபெறும் இயக்கம்.

மைய நோக்கு விசை : வட்டப் பாதையில் இயங்கும் பொருளின் மீது மையத்தை நோக்கி ஆரத்தின் வழியாகச் செயல்படும் விசை.

மைய விலக்கு விசை : வட்டப்பாதையில் இயங்கும் பொருளின் மீது மையத்தை விட்டு வெளிநோக்கி ஆரத்தின் வழியே செயல்படும் விசை.

ஈர்ப்பு விசை : புவியின் மையத்திற்கும் புவியின் மேலுள்ள பொருளுக்கும் இடையே அவற்றின் நிறையைப் பொறுத்து ஏற்படும் விசை.

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : இயக்கம்