Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | நினைவில் கொள்க

அளவைகள் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு - நினைவில் கொள்க | 6th Maths : Term 2 Unit 2 : Measurements

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள்

நினைவில் கொள்க

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள் : நினைவில் கொள்க

நினைவில் கொள்க:

நீளத்திற்கு மீட்டரும், எடைக்குக் கிராமும், கொள்ளளவுக்கு லிட்டரும் அடிப்படை மெட்ரிக் அலகுகள் ஆகும்

வெவ்வேறு அலகுகளில் உள்ள அளவைகளை ஒரே அலகாக மாற்றிக் கூட்டவோ, கழிக்கவோ இயலும்.

முற்பகல் (மு.) என்பது நள்ளிரவு 12 மணிக்கு மேல் மற்றும் நண்பகல் 12 மணிக்குள்ளான நேரத்தைக் குறிக்கும்.

பிற்பகல் (பி.) என்பது நண்பகல் 12 மணிக்கு மேல் மற்றும் நள்ளிரவு 12 மணிக்குள்ளான நேரத்தைக் குறிக்கும்.

● 12 மணி நேர அமைப்பை 24 மணி நேர அமைப்பாக மாற்றும்போது, நேரமானது நள்ளிரவு 12.00 மணி முதல் 01.00 மு. வரை இருப்பின் 12 மணியை 00:00 என மாற்றவும். 01.00 பி. வரை நேர அமைப்பில் மாற்றமில்லை, பிற்பகல் 1.00 தொடர்ந்து வரும் மணிகளுடன் 12:00 மணியைக் கூட்ட வேண்டும்

● 24 மணி நேர அமைப்பை 12 மணி நேர அமைப்பாக மாற்றும்போது, நேரமானது 00.00 மணி முதல் 01:00 மணி வரை இருப்பின் 00:00 இக்குப் பதிலாக 12 மணியாக மாற்றவும். 13.00 மணிக்குள் நேர அமைப்பில் மாற்றமில்லை. 13.00 மணியிலிருந்து தொடர்ந்து வரும் மணிகளை 12:00 மணியால் கழிக்கவும். இரண்டு நேர அமைப்பிலும் நிமிடத்தில் மாற்றம் இல்லை.

● 4ஆல் வகுபடும் ஆண்டுகள் லீப் ஆண்டுகள் ஆகும்

நூற்றாண்டுகள் 400 ஆல் வகுபட்டால் அவை லீப் ஆண்டுகள் ஆகும்.



இணையச் செயல்பாடு

அளவைகள்

செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப்பெறுவது


படி 1 கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி, GeoGebra இணையப் பக்கத்தில் "Measurement Unit convertor என்னும் பணித்தாளிற்குச் செல்லவும்

இப்பணித்தாளில் 1. Length convertor and 2. Weight convertor and 3. Convertor for all measurements ஆகிய மூன்று செயல்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கும். முதல் செயல்பாட்டில், நழுவல்களை நகர்த்திக் கிலோமீட்டர், மீட்டர் மற்றும் சென்டிமீட்டர் ஆகியவற்றின் மதிப்புகளை மாற்றி அவற்றின் மாற்றங்களையும் சரிபார்க்கலாம்

படி 2 இரண்டாவது செயல்பாடாக, நழுவல்களை நகர்த்திக் கிலோகிராம், கிராம் மற்றும் மில்லிகிராம் ஆகியவற்றின் மதிப்புகளை மாற்றிச் சரிபார்க்கலாம்.


செயல்பாட்டிற்கான உரலி:

அளவைகள்: https://ggbm.at/p/DZHP6K அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.


6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : அளவைகள்