பருவம் 2 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - செல் | 6th Science : Term 2 Unit 5 : The Cell

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 5 : செல்

செல்

கற்றல் நோக்கங்கள் ❖ எல்லா உயிரினங்களும் செல்களாலானது என்பதை அறிந்து கொள்ளுதல் ❖ நுண்ணோக்கியைப் பயன்படுத்தி செல்லை எப்படி உற்றுநோக்குவது என்பதை அறிதல் ❖ செல்லின் அமைப்பைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் ❖ செல்லைப் பற்றியும், செல்லின் நுண்ணுறுப்புகள் பற்றியும் விளக்கிக் கூறுதல். ❖ தாவர செல்லும், விலங்கு செல்லும் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வேறுபடுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுதல்

அலகு 5

செல்



 

கற்றல் நோக்கங்கள்

எல்லா உயிரினங்களும் செல்களாலானது என்பதை அறிந்து கொள்ளுதல்

நுண்ணோக்கியைப் பயன்படுத்தி செல்லை எப்படி உற்றுநோக்குவது என்பதை அறிதல்

செல்லின் அமைப்பைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல்

செல்லைப் பற்றியும், செல்லின் நுண்ணுறுப்புகள் பற்றியும் விளக்கிக் கூறுதல்.

தாவர செல்லும், விலங்கு செல்லும் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வேறுபடுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுதல்

 

அறிமுகம்


மேலே கொடுக்கப்பட்டுள்ள படங்களை உற்று நோக்கவும். இவை இரண்டிற்குமிடையே உள்ள ஒற்றுமையை உங்களால் காணமுடிகிறதா?

உங்கள் கண்களை மூடி, ஒரு செங்கல் சுவரைக் கற்பனை செய்து பாருங்கள். அந்தச் சுவரின் அடிப்படை அலகு எது ? ஆம், செங்கல்தான்சுவரின்அடிப்படை அலகு.செங்கல் சுவரைப் போலவே உங்கள் உடலும் ஒரு அடிப்படை அலகாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் பெயரே செல் ஆகும். உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு செல் ஆகும்.

செல்கள் ஒர் உயிரியின் அனைத்து அடிப்படைப் பண்புகளையும் செயல்பாடுகளையும் கட்டமைக்கின்றன.

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 5 : செல்