Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | வேதியியலில் புரட்சி, நினைவில் கொள்க

நீர் | பருவம் 3 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வேதியியலில் புரட்சி, நினைவில் கொள்க | 6th Science : Term 3 Unit 2 : Water

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 2 : நீர்

வேதியியலில் புரட்சி, நினைவில் கொள்க

மனிதன் உள்ளிட்ட அனைத்து விலங்கினங்களும், தாவரங்களும் உயிர் வாழ இன்றியமையாத பகுப்பாக உள்ளது நீராகும்.





நினைவில் கொள்க

மனிதன் உள்ளிட்ட அனைத்து விலங்கினங்களும், தாவரங்களும் உயிர் வாழ இன்றியமையாத பகுப்பாக உள்ளது நீராகும்.

உலகில் உள்ள மொத்த நீரின் அளவில் 97% நீர் கடல்கள் மற்றும் பெருங்கடல்களிலேயே உள்ளது.

உலகம் முழுவதிலும் 3% நன்னீரே உள்ளது. அதுவும் பனிப்படிவுகளிலும், பனிப் பாறைகளிலும் உறைந்துள்ளது.

ஏரிகள், ஆறுகள், குட்டைகள் ஆகிய அனைத்திலுமாக 0.3% நீர் மட்டுமே மேற்பரப்பு நீராக உள்ளது.

மண்ணில் உள்ள ஈரம் நிலத்தடியில் நீர் இருப்பதைக் குறிக்கிறது.

இயற்கையில் நீராவிப்போக்கு, ஆவியாதல், ஆவி சுருங்குதல் மற்றும் மழை பொழிதல் ஆகியவற்றின் தொடர்ச்சியான நிகழ்விற்கு நீர் சுழற்சி என்று பெயர்.

புவிப்பரப்பின் கீழே மண்ணில் நிறைந்திருக்கும் அல்லது மண்ணில் செறிந்திருக்கும் நீர் நிலத்தடி நீர் எனப்படும்.

 

 

இணையச்செயல்பாடு

நீர்

இயற்கையிலிருந்து எடுக்கப்படும் நீரானது வீட்டிற்கு உள்ளே வரும் போதும் வெளியே செல்லும் போதும் என்ன நிகழ்கிறது என்பதை அறிவோமா!


 

படி 1: கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி செயல்பாட்டின் பக்கத்திற்குச் செல்லவும்.

படி 2: விளையாட்டுகளைக் கொண்ட பக்கம் தோன்றும், 'Melbourne water cycle" என்னும் முதல் விளையாட்டைச் சொடுக்கி, "Play the Melbourne water game" என்பதைச் சொடுக்கி விளையாட்டைத் தொடங்கவும்.

படி 3: அறிவுரைகளின் படி, வழிகாட்டும் விசைகளைப் பயன்படுத்தி விளையாடவும், நீர் பயன்பாட்டின் படிகளையும் நீரின் மறுசுழற்சி முறையினையும் உற்று நோக்குக.

படி 4: இயற்கை நீர் சுழற்சி மற்றும் நீர் மூலங்கள் போன்றவைகளை அறிய மற்ற இரண்டு விளையாட்டுகளை விளையாடவும்.


நீர் உரவி:

https://www.education southeastwater.com.au/resources?audience= &keywords =&topic=&yearLevel=&type=online-game

*படங்கள் அடையாளத்திற்காக மட்டுமே.

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 2 : நீர்