Home | 6 ஆம் வகுப்பு | 6வது சமூக அறிவியல் | பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

பருவம் 1 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் | 6th Social Science : Geography : Term 1 Unit 1 : The Universe and Solar System

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 1 அலகு 1 : பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

கற்றலின் நோக்கங்கள் ❖ பேரண்டம் தோற்றம் பற்றி அறிதல் ❖ சூரியக் குடும்பத்தில் காணப்படும் விண்பொருள்களின் வேறுபாடுகளை அறிதல் ❖ புவியின் இயக்கங்களைப் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் புரிந்து கொள்ளல் ❖ புவியின் கோளங்களையும், அவற்றிற்கு இடையேயான தொடர்பினையும் கற்றல்

புவியியல்

அலகு 1

பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்


 

கற்றலின் நோக்கங்கள்

பேரண்டம் தோற்றம் பற்றி அறிதல்

சூரியக் குடும்பத்தில் காணப்படும் விண்பொருள்களின் வேறுபாடுகளை அறிதல்

புவியின் இயக்கங்களைப் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் புரிந்து கொள்ளல்

புவியின் கோளங்களையும், அவற்றிற்கு இடையேயான தொடர்பினையும் கற்றல்

 

நுழையுமுன்

இப்பாடம் பேரண்டம் மற்றும் சூரியக் குடும்பத்தைப் பற்றி விளக்குகின்றது. புவியின் இயக்கங்கள் பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துரைக்கிறது. மேலும் புவியின் நான்கு கோளங்களையும் விவரிக்கிறது.


ஆசிரியர் : நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியுமா?

மாணாக்கர் : தெரியும் அம்மா / அய்யா.

ஆசிரியர் : (இனியாவைச் சுட்டிக்காட்டி) இனியா உன்னுடைய இனியா விலாசம் உனக்குத் தெரியுமா? உன்னுடைய முழு விலாசத்தைக் கூற முடியுமா?

இனியா : சொல்கிறேன் அம்மா / அய்யா. என்னுடைய விலாசம் இனியா, 24, பாரதியார் தெரு, திருநகர், மதுரை - 625 006

ஆசிரியர் : நன்று. திருநகர் எங்குள்ளது இனியா?

இனியா : மதுரையில் அம்மா / அய்யா.

ஆசிரியர் ; குழந்தைகளே மதுரை எங்கே உள்ளது?

மாணாக்கர் : தமிழ்நாட்டில்

ஆசிரியர் ; தமிழ்நாடு எங்குள்ளது?

மாணாக்கர் : இந்தியாவில்

ஆசிரியர் : இப்பொழுது இந்தியா எங்குள்ளது என்று கூறுங்கள் பார்ப்போம்.

மாணாக்கர் : ஆசியா கண்டத்தில் உள்ளது.

ஆசிரியர் : மிக நன்று. ஆசியா கண்டம் எங்குள்ளது என்று யாராவது சொல்ல முடியுமா?

மாணாக்கர் : புவியில்

ஆசிரியர் : சரி. புவி எங்கே இருக்கு?

மாணாக்கர்: (சற்று நேர அமைதிக்குப் பின் ஒரே குரலில்) எங்களுக்கு தெரியாது அம்மா / அய்யா.

ஆசிரியர் : நான்விளக்குகிறேன்.புவிசூரியக் குடும்பத்தின் மூன்றாவது கோள். சூரியக் குடும்பம் விண்மீன் திரள் மண்டலத்தில் உள்ளது. புவி பால்வெளி விண்மீன் திரள் மண்டலத்தில் உள்ளது.

இனியா : செல்வி.

புவி,

எண்.3, சூரியக் குடும்பம்,

பால்வெளி விண்மீன் திரள் மண்டலம்

பேரண்டம்

(அனைத்து மாணவர்களும் ஆசிரியரும் கைகளைத் தட்டி இனியாவைப் பாராட்டினார்கள்)

'பெருவெடிப்பு' (Big Bang) என்ற ஓரு நிகழ்வு ஏற்பட்டதின் காரணமாய் எண்ணிலடங்கா விண்மீன்களும், வான்பொருள்களும் தோன்றின. இவை அனைத்தையும் பொதுவாக 'பேரண்டம்'(Universe) என்று அழைத்தனர். இதனை 'பிரபஞ்சம்'(Cosmos) என்றும் குறிப்பிடுகின்றனர். நீங்கள் காண்கின்ற விண்மீன்கள் மிகவும் தொலைவில் உள்ளதால் அவை அளவில் மிகப்பெரியதாக இருப்பினும், சிறியதாகத் தோன்றுகின்றன.

உங்களுக்குத் தெரியுமா

பேரண்டத்தைப் பற்றிய படிப்பிற்கு 'பிரபஞ்சவியல்' (Cosmology) என்று பெயர். காஸ்மாஸ் என்பது ஒரு கிரேக்கச் சொல்லாகும்

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 1 அலகு 1 : பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்